Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Expert

நீண்டகால ஆரோக்கியத்திற்கு 30 வயதிற்குப் பிறகு உங்க உணவில் சேர்க்க வேண்டிய ஊட்டச்சத்துக்கள்.. நிபுணர் பரிந்துரை

எலும்பு ஆரோக்கியம் முதல் குடல் ஆரோக்கியம் வரை, 30 வயதிற்குப் பிறகு உங்கள் ஆற்றல், தோல், முடி மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தை கட்டுக்குள் வைத்திருக்க உதவும் நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து குறிப்புகள் குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் பலரும் தங்களது அன்றாட வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கின்றனர். அதிலும் பெரும்பாலானோர், 30 வயதை அடையும் போதே பல பிரச்சனைகளைச் சந்திக்கும் சூழல் ஏற்படுகிறது. இதற்குப் பின்னால், பல்வேறு காரணங்கள் இருக்கலாம். இதில் மோசமான உணவுமுறை, ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் மரபியல் காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் இருக்கக்கூடும். குறிப்பாக, இந்த காலகட்டத்தில் அவர்களால் போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெற முடியாமல் போகலாம்.

அவ்வாறே, நம் உடல் 30 வயதிற்குள் நுழையும் போது, வயதான அறிகுறிகள் அடிக்கடி தெரியத் தொடங்குகின்றன. இதனால், முடி மெலிதல், குடல் பிரச்சினைகள் மற்றும் சோர்வு ஆகியவை பொதுவான கவலைகளாக மாறுகின்றன. இந்த பிரச்சனைகளைப் போக்க ஊட்டச்சத்துக்களைச் சரியான முறையில் எடுத்துக் கொள்ள வேண்டும். ஊட்டச்சத்து நிபுணர் நமாமி அகர்வால் அவர்கள் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் இந்த வயதினருக்கான நான்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: பழங்கள் சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிக்கலாமா? நிபுணர்களின் பதில் இங்கே!

நிபுணரின் கருத்து

நிபுணர் கூறியதாவது,”30 வயதிற்குப் பிறகு, உடலின் ஊட்டச்சத்து தேவைகள் மாறத் தொடங்குகின்றன. எலும்பு அடர்த்தி, ஹார்மோன் சமநிலை, தோல் மற்றும் முடி ஆரோக்கியம் மற்றும் ஆற்றல் அளவுகள் அதிக கவனம் செலுத்த வேண்டும். சரியான ஊட்டச்சத்து எப்படி உணர்கிறீர்கள் மற்றும் வயதாகிறது என்பதில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும்" என்று குறித்து குறிப்பிட்டுள்ளார்.

1. எலும்பு ஆரோக்கியம்

நிபுணரின் கூற்றுப்படி, “கால்சியம் (பால், ராகி, எள் விதைகள்), வைட்டமின் டி3 (சூரிய ஒளி, செறிவூட்டப்பட்ட உணவுகள்), வைட்டமின் கே (பச்சை இலை காய்கறிகள்) மற்றும் மெக்னீசியம் (நட்ஸ், விதைகள், பருப்பு வகைகள்) போன்றவற்றை முன்னுரிமைப்படுத்த வேண்டும். இவை ஒன்றாக, எலும்பு அடர்த்தியைப் பராமரிக்கின்றன மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் நீண்டகால அபாயத்தைக் குறைக்கின்றன”

2. ஆற்றலுக்கான இரும்புச்சத்து

"பருப்பு, கீரை, பீட்ரூட், ராஜ்மா, பேரீச்சம்பழம், பஜ்ரா மற்றும் வெல்லம் போன்ற இரும்புச்சத்து நிறைந்த உணவுகள் சோர்வைத் தடுக்கவும், ஆரோக்கியமான இரத்த உருவாக்கத்தை ஆதரிக்கவும் உதவுகின்றன," என்று அவர் மேலும் கூறுகிறார், "வைட்டமின் சி நிறைந்த உணவுகளுடன் (அம்லா, சிட்ரஸ் பழங்கள்) இணைத்து உறிஞ்சுதலை அதிகரிக்கலாம்" எனக் குறிப்பிடுகிறார்.

3. தோல் மற்றும் கூந்தலுக்கான புரதம்

வயதானதை மெதுவாக்க, "புரதம் கொலாஜன் உற்பத்தி, தசை பழுது மற்றும் ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது. பனீர், பருப்பு வகைகள், கிரேக்க தயிர், சோயா, குயினோவா அல்லது தரமான புரதப் பொடிகளை உணவில் சேர்க்கவும்" என்று நமாமி அறிவுறுத்துகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: நல்ல உணவு தான்.. ஆனால் எப்படி சாப்பிட்டா நல்லது தெரியுமா.? மருத்துவர் விளக்கம்..

4. குடல் ஆரோக்கியம்

"ஆரோக்கியமான குடல் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி, வளர்சிதை மாற்றம் மற்றும் ஹார்மோன் சமநிலையை ஆதரிக்கிறது. புரோபயாடிக் உணவுகள் (தயிர், கேஃபிர், புளித்த ஊறுகாய்) மற்றும் ப்ரீபயாடிக் நார்ச்சத்துக்கள் (வெங்காயம், பூண்டு, வாழைப்பழங்கள், ஓட்ஸ்) போன்றவற்றை தினமும் சேர்க்க வேண்டும்" என்று அவர் கூறுகிறார்.

இதனைத் தொடர்ந்து, நமாமி அகர்வால்,”30 வயதிற்குப் பிறகு சமச்சீர் ஊட்டச்சத்து என்பது கட்டுப்பாடு பற்றியது அல்ல. ஆனால் நீண்ட கால ஆரோக்கியம் மற்றும் உயிர்ச்சக்திக்கான சரியான கட்டுமானத் தொகுதிகளுடன் உடலை ஊட்டமளிப்பது பற்றியது" எனக் குறிப்பிடுகிறார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: பச்சை காய்கறிகளை சாப்பிடும்போது செய்யும் 3 பொதுவான தவறுகள்! ஊட்டச்சத்து நிபுணர் கூறும் சரியான வழி!

Image Source: Freepik

Read Next

பச்சை காய்கறிகளை சாப்பிடும்போது செய்யும் 3 பொதுவான தவறுகள்! ஊட்டச்சத்து நிபுணர் கூறும் சரியான வழி!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 18, 2025 19:48 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content