“Queen of Fruits” என்று அழைக்கப்படும் பலாப்பழத்தில் அதிக அளவில் விட்டமின் C நிறைந்துள்ளது. இதனை முறையாக உட்கொண்டால், ரத்தத்தில் உள்ள ஹோமோ சிஸ்டைன் அளவு குறைந்து, ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டுக்குள் வர வாய்ப்பு உள்ளது என மருத்துவர் ஆஷா லெனின் தெரிவிக்கிறார்.
பலாப்பழத்தில் உள்ள ஊட்டச்சத்துகள்
மருத்துவர் ஆஷா லெனின் தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ள தகவலின்படி, பலாப்பழத்தில்
- புரதச்சத்து
- மாவுச்சத்து
- விட்டமின் A, B, C
- கால்சியம்
- துத்தநாகம்
- பாஸ்பரஸ்
போன்ற பல்வேறு ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இவை குடல் சம்பந்தமான நோய்களைத் தடுப்பதோடு, குடல்களின் இயக்கத்தையும் சீராக்க உதவுகின்றன.
இதய ஆரோக்கியத்திற்கு பலாப்பழம்
பலாப்பழம் உடலில் சேரும் கெட்ட கொழுப்புகளை (Bad Cholesterol) அகற்றி, ரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை குறைக்கிறது. இதனால் உடல் கொழுப்பு குறைந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் குறைவதாக மருத்துவர் ஆஷா விளக்குகிறார். மேலும், விட்டமின் C மற்றும் A நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, கண்கள் மற்றும் சரும ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
ஆய்வுகள் என்ன சொல்கின்றன?
அமெரிக்கன் ஹார்ட் பவுண்டேஷன் நடத்திய சமீபத்திய ஆய்வில், பலாப்பழம் சாப்பிடுபவர்களுக்கு, ரத்த அழுத்தம் குறைவதாகவும், உடலில் கொழுப்பு சேர்வது குறைவதாகவும், இரத்தச் சர்க்கரை அளவு சமநிலையிலேயே இருப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
யாரெல்லாம் தவிர்க்க வேண்டும்?
பலாப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளதால், சர்க்கரை நோயாளிகள், சிறுநீரக (Kidney) நோயாளிகள், பலாப்பழத்தை அளவோடு அல்லது தவிர்ப்பது நல்லது என்றும் மருத்துவர் எச்சரிக்கிறார்.
பலா இலை & பலாக் கொட்டையின் ஆச்சரிய நன்மைகள்
2013-ல் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், பலா இலைகளை சூடுநீரில் கொதிக்க வைத்து குடித்தால், ரத்த சர்க்கரை அளவு குறையும் என மருத்துவர் ஆஷா தெரிவிக்கிறார். கொய்யா இலையை விட ஆயிரம் மடங்கு நன்மை பலா இலை கொண்டதாகவும், இது கணைய செல்களை பாதுகாத்து இன்சுலின் சுரப்பை அதிகரிக்க உதவுகிறது என்றும் கூறுகிறார். மேலும், பலாக் கொட்டையில் உள்ள ஆன்டி-ஆக்சிடென்ட்கள், உடல் செல்களில் தேங்கிய கழிவுகளை நீக்கி, புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவுகின்றன.
இறுதியாக..
கோடை காலத்தில் பலாப்பழம் ஒரு சுவையான பழம் மட்டுமல்ல, இதயம், குடல், நோய் எதிர்ப்பு சக்தி ஆகியவற்றை பாதுகாக்கும் ஒரு இயற்கை மருந்து. ஆனால், உடல் நிலையைப் பொறுத்து சரியான அளவில் மட்டுமே எடுத்துக்கொள்வது அவசியம்.
பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொது தளங்களில் மற்றும் நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள உணவுகளை அல்லது வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது உடல்நல நிபுணரின் ஆலோசனையை பெறுவது அவசியம்.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
-
Current Version
Dec 23, 2025 13:48 IST
Published By : Ishvarya Gurumurthy