Homemade Energy Drinks: வீட்டிலேயே எப்படி எனர்ஜி பானங்கள் தயாரிப்பது? நன்மைகள் என்ன?

சந்தையில் கிடைக்கும் எனர்ஜி ட்ரிங்க்ஸ்-ல் ஆரோக்கியம் குறித்த பல கேள்விகள் இருக்கிறது. இத்தகைய நிலையில் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய சிறந்த எனர்ஜி ட்ரிங்க்ஸ் வகைகளை பார்க்கலாம்.
  • SHARE
  • FOLLOW
Homemade Energy Drinks: வீட்டிலேயே எப்படி எனர்ஜி பானங்கள் தயாரிப்பது? நன்மைகள் என்ன?

Homemade Energy Drinks: மோசமான வாழ்க்கை முறை மற்றும் உணவு முறையால் பலர் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள். வீடு, அலுவலகம் என்று பகல் முழுவதும் வேலை செய்துவிட்டு, மாலையில் சோர்வாகவும், உடல் தளர்ச்சியுடனும் இருப்பதற்கு இதுவே காரணம். அத்தகைய சூழ்நிலையில் நமக்கு சில ஆற்றல் பானங்கள் தேவைப்படுகிறது.

ஆற்றலைப் பெற, மக்கள் சந்தையில் கிடைக்கும் புரோட்டீன் பவுடர், சப்ளிமெண்ட்ஸ் போன்றவற்றை எடுத்துக்கொள்கிறார்கள். அதேபோல் சிலர் சந்தையில் கிடைக்கும் எனர்ஜி ட்ரிங்க்ஸ் வாங்கி குடிக்கிறார்கள். இதில் என்ன மூலப்பொருட்கள் இருக்கிறது என்பதை கூட பலரும் அறிந்திருப்பதில்லை. இதனால் சில விளைவுகள் கூட ஏற்பட வாய்ப்பிருக்கிறது. இத்தகைய நிலையில் வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய எனர்ஜி ட்ரிங்க்ஸ் செய்து குடிக்கலாம். இதை எப்படி குடிக்கலாம், இதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

அதிகம் படித்தவை: எனர்ஜி ட்ரிங்க்ஸ் பிரியர்களுக்கு எச்சரிக்கை... ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

வீட்டில் தயாரிக்கும் ஆரோக்கிய பானங்கள் நன்மைகள்

இப்படி வீட்டிலேயே தயாரிக்கக் கூடிய ஆற்றல் பானம் உங்கள் பலவீனம், சோர்வை நீக்கி உங்களை வலிமையாக்குகிறது. ஆற்றல் பானங்கள் மூலம் நீங்கள் எப்போதும் சுறுசுறுப்பாக இருக்க முடியும். மேலும் இது ஆரோக்கியத்தில் எந்த தீங்கும் விளைவிக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆற்றல் பானங்கள் நன்மைகள்

ஆற்றல் பானங்கள் நம் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். தவிர, இது உடனடி ஆற்றலையும் வழங்குகிறது. சோர்வு மற்றும் பலவீனத்தை நீக்க ஆற்றல் பானங்களை உட்கொள்வது நன்மை பயக்கும்.

உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்கும் ஒரே பானம் எனர்ஜி பானம் மட்டுமே.

வீட்டில் தயாரிக்கப்படும் எனர்ஜி பானங்களில் சர்க்கரை குறைவாக இருப்பதால் உடலுக்கு தீங்கு விளைவிக்காது.

எனர்ஜி ட்ரிங்க்ஸ் எடுத்துக்கொள்வதால் உடலுக்கு பலம் கிடைப்பதுடன் பலவீனம் நீங்கும்.

எனர்ஜி பானம் சோர்வை நீக்கி உற்சாகமளிக்கும்.

வீட்டில் தயாரிக்கப்படும் ஆற்றல் பானம்

homemade-energy-drinks-benefits

தேங்காய் தண்ணீர் மற்றும் எலுமிச்சை சாறு

தேங்காய் நீர் ஒரு சிறந்த இயற்கை ஆற்றல் பானமாக கருதப்படுகிறது. பல நேரங்களில், உடலில் தண்ணீர் இல்லாததால், ஒருவர் பலவீனம் அல்லது சோர்வை உணரத் தொடங்குகிறார், அத்தகைய சூழ்நிலையில் தேங்காய் தண்ணீர் குடிப்பது நன்மை பயக்கும்.

தேங்காய் நீரில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. உடலில் உள்ள நீர் பற்றாக்குறையையும் இது பூர்த்தி செய்கிறது. தேங்காய் நீர் ஒரு ஆற்றல் பானமாக இருந்தாலும், நீங்கள் அதில் எலுமிச்சை சேர்க்கலாம். எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது, இது உடனடி ஆற்றலை வழங்குகிறது. பலவீனத்தை நீக்க ஒரு சிறந்த ஆற்றல் பானமாக இது உள்ளது.

ஒரு கப் தேங்காய் தண்ணீரை எடுத்துக் கொள்ளுங்கள்.

1 டீஸ்பூன் தேன் மற்றும் 4-5 சொட்டு எலுமிச்சை சாறு கலக்கவும்.

சுவைக்கு ஏற்ப உப்பு சேர்க்கலாம்.

சோர்வாகவும் பலவீனமாகவும் உணரும்போது அதை குடிக்கவும்.

வாழைப்பழம் மற்றும் கருப்பு சாக்லேட்

வாழைப்பழத்தில் நல்ல அளவு பொட்டாசியம் மற்றும் கலோரிகள் உள்ளன, எனவே நீங்கள் அதை ஒரு ஆற்றல் பானமாக உட்கொள்ளலாம். டார்க் சாக்லேட் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும். வாழைப்பழம் மற்றும் டார்க் சாக்லேட்டால் செய்யப்பட்ட எனர்ஜி பானம் உங்களுக்கு உடனடி பலத்தை அளிக்கிறது. உங்கள் பலவீனம் மற்றும் சோர்வு கூட நீங்கும்.

வாழைப்பழம் மற்றும் டார்க் சாக்லேட் எனர்ஜி பானம் தயாரிக்க, ஒரு வாழைப்பழம் மற்றும் ஒரு டார்க் சாக்லேட் எடுத்துக் கொள்ளுங்கள்.

இரண்டையும் ஒரு கிளாஸ் பாலுடன் நன்றாக மசிக்கவும்.

இந்த எனர்ஜி பானத்தை குடிப்பதால் உடனடி எனர்ஜி கிடைக்கும்.

கீரை மற்றும் அன்னாசி எனர்ஜி பானம்

பசலைக்கீரை, அன்னாசி, ஆப்பிள் ஆகியவற்றில் இருந்து தயாரிக்கப்படும் எனர்ஜி ட்ரிங்க் உடலுக்கு பலம் கொடுக்க உதவுகிறது. நாள் முழுவதும் வேலை செய்து சோர்வாக உணர்ந்தால், இந்த எனர்ஜி பானத்தை அருந்தலாம். கீரை புரதம், வைட்டமின்கள் மற்றும் தாதுக்களின் ஒரு நல்ல மூலமாகும். அதேபோல அன்னாசி மற்றும் ஆப்பிளிலும் சத்துக்கள் நிறைந்துள்ளன. எனவே இந்த பானத்தை குடிப்பதால் உடனடி ஆற்றல் கிடைக்கும்.

இதற்கு ஒரு கப் கீரையை எடுத்துக் கொள்ளுங்கள்.

அன்னாசிப்பழம் மற்றும் ஒரு கப் ஆப்பிளை சிறிய துண்டுகளாக நறுக்கி சேர்க்கவும்.

இவை அனைத்தையும் ஒன்றாக மிக்ஸியில் அரைத்து ஸ்மூத்தி தயார் செய்யலாம்.

அதன் சுவையை அதிகரிக்க எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

இதையும் படிங்க: Energy Drinks Side Effects: அடிக்கடி எனர்ஜி ட்ரிங்க்ஸ் குடிப்பிங்களா? கிட்னி பத்திரம் மக்களே!

நீங்களும் வேலைக்குப் பிறகு சோர்வாகவும் பலவீனமாகவும் உணர்ந்தால், மேலே குறிப்பிட்ட ஆற்றல் பானங்களை உட்கொள்ளலாம். இது உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தரும், மேலும் உங்கள் சோர்வு மற்றும் பலவீனம் நீங்கும்.

image source: freepik

Read Next

Pachai Payaru Laddu: நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் பச்சை பயறு லட்டு! எப்படி செய்யணும்?

Disclaimer

குறிச்சொற்கள்