Fri Sep 11, 2026 | 10:20 PM IST

Face Wash Uses: நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஃபேஸ் வாஷின் அற்புத நன்மைகள்

Benefits Of Face Wash: பொதுவாக ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் போது, சருமம் பளபளப்பாகவும், இளமையாகவும் இருக்கும். மேலும், இதன் மூலம் சிறப்பான மற்றும் ஜொலிப்பான சருமத்தைப் பெறலாம். இப்போது ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகம் கழுவுவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

ஃபேஸ் வாஷ்க்குப் பதில் ஏன் சோப்பைப் பயன்படுத்தக் கூடாது?

சோப்புகள் சருமத்தில் உள்ள தோல்களை விட அதிகமான pH அளவைக் கொண்டிருக்கிறது. இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள் எண்ணெய்த் துகள்களுடன் சேர்ந்து வெளியேறுகிறது. இது, சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை அகற்றுவதுடன் செல்களை உலரச் செய்கிறது. மேலும், தோல் நிபுணர்களின் கருத்துப்படி சோப்புகளைப் பயன்படுத்துவதால் முகச் சருமம் சிவந்து வீக்கம் அடையலாம்.

சோப்புகளைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், காலப்போக்கில் முகம் இயற்கைப் பொலிவை இழந்து முன்கூட்டியே வயதாவதற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும். எனவே சருமத்திற்கு ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Ways To Remove Dark Spots: முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் விரைவில் மறைய சில வழிகள்!

சருமத்தை ஈரப்பதமாக்குதல்

ஊட்டச்சத்துகளை உறிஞ்சும் சருமத்தின் திறனை மேம்படுத்துவதுடன், சரும செல்களை ஈரப்படுத்தவும் நீரேற்றம் அவசியமான ஒன்று. சருமம் எந்த அளவு ஈரப்பதமாக உள்ளதோ, அந்த அளவு இளமையாகவும், புத்துணர்ச்சியுடனும் காணப்படும். மேலும், இவை உயிரற்ற சருமத்திற்கு நீரேற்றத்தை வழங்குவதுடன், பாதுகாப்பாக வைத்திருக்க உதவுகிறது. குறிப்பாக வறண்ட சருமத்திற்கு ஃபேஷ் வாஸ் பயன்படுத்துவது நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் இது சருமத்தின் இயற்கையான pH அளவையும் பராமரிக்க உதவுகிறது.

இரத்த ஓட்டத்தைத் தூண்டுவதற்கு

நச்சுத்தன்மை இல்லாத ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி முகத்தை மசாஜ் செய்வதன் மூலம், முகத்தில் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தலாம். இந்த ஆரோக்கியமான இரத்த ஓட்டம் ஆரோக்கியமான சருமத்தை ஊக்குவிக்கிறத். மேலும், சருமத்திற்குத் தேவையான கொலாஜன் உற்பத்தியைத் தூண்டி செல்கள் மீண்டும் வளர உதவுகிறது. ஃபேஸ் வாஸ் பயன்படுத்துவது உடலுக்குப் புத்துணர்ச்சியைத் தருகிறது.

முன்கூட்டிய வயதான அறிகுறிகளை மெதுவாக்குதல்

சிறந்த நல்ல தரமான மாய்ஸ்சரைசர் கொண்ட ஃபேஸ் வாஷ் பயன்படுத்தும் போது சருமத்தில் ஏற்படும் வயதான அறிகுறிகளைத் தடுக்கலாம். ஏனெனில், சருமத்தின் வெப்பநிலை இயற்கையாகவே ஒரே இரவில் உயர்வதால், சிறிது நீரிழப்பு ஏற்படுகிறது. இதனைத் தடுக்க முகத்தை தினந்தோறும் இரண்டு முறை கழுவலாம். மேலும், நச்சுத்தன்மை இல்லாத மாய்ஸ்சரைசரைப் பயன்படுத்துவதன் மூலம் முகத்தை ஈரப்பதத்துடனும், புத்துணர்ச்சியுடனும் வைத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Natural Skin Care Tips: அழகான சருமத்திற்கு இயற்கையான சில வீட்டுக்குறிப்புகள்!

தோல் பிரச்சனைகளைக் கையாள

சருமத்திற்கு தீங்கு விளைவிக்கும் மாசுக்கள் சருமத்தை சேதப்படுத்துவதைத் தடுக்க நச்சுத்தன்மையற்ற மற்றும் ஊட்டமளிக்கும் ஃபேஸ் வாஷ்களைப் பயன்படுத்தலாம். இந்த தோல் பராமரிப்புகளைப் பொருள்களைப் பயன்படுத்துவதன் மூலம் சீரற்ற தோல், வடுக்கள், கரும்புள்ளிகள், முகப்பரு மற்றும் மருக்கள் உள்ளிட்ட பல்வேறு தோல் பிரச்சனைகளைத் தீர்க்க உதவுகிறது.

முகப்பருவைக் குணப்படுத்த

ஃபேஸ் வாஷ் பயன்படுத்துவது முகத்தில் உள்ள பருக்களை எதிர்த்துப் போராடலாம். சருமத் துவாரங்களில் வியர்வை, இறந்த சருமச் செல்கள் போன்றவை சிக்கிக் கொள்வதால் சருமத்தின் அதிகப்படியான உற்பத்தி ஏற்படலாம். இதனால், வெடிப்புகள் மற்றும் முகப்பருக்கள் ஏற்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க, ஃபேஸ் வாஸ் உபயோக்கப்படுத்தலாம்.

முகத்தைச் சுத்தம் செய்ய

சருமத்தில் ஏற்படும் அதிகப்படியான சரும உற்பத்தியைக் கட்டுப்படுத்த ஃபேஸ் வாஷ் உதவுகிறது. சருமத்தில் உள்ள அழுக்குகளை அகற்ற ஃபேஸ் வாஸ் உதவுகிறது. எனவே தோல் பராமரிப்பு நிபுணர்கள் காலை மற்றும் இரவு பராமரிப்பு நடைமுறைப்புகளுக்கு ஃபேஸ் வாஸ் பயன்படுத்துவதை பரிந்துரைக்கின்றனர். இது எந்த தொந்தரவும் இல்லாத முறையில் முகத்தில் உள்ள தூசி மற்றும் அழுக்குகளை நீக்குகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Eye Dark Circles: கண் கருவளையங்கள் நீங்க வீட்டிலேயே பின்பற்ற வேண்டிய சில எளிய முறைகள்!

Image Source: Freepik

Read Next

Multani Mitti Benefits: முகம் பால் போல வெண்மையாக முல்தானி மிட்டியை இப்படி யூஸ் பண்ணுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content