Thu Oct 29, 2026 | 12:53 PM IST

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க : CDC கூறும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுத் திட்டத்தைப் பின்பற்றவும்

இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க : CDC கூறும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுத் திட்டத்தைப் பின்பற்றவும்இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்க : CDC கூறும் சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுத் திட்டத்தைப் பின்பற்றவும்

சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள்: இன்றைய ஒழுங்கற்ற வாழ்க்கை முறையால், பலர் சர்க்கரை நோய் போன்ற கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியாது. ஒரு நபருக்குச் சர்க்கரை நோய் வந்தவுடன், அவர் அதனுடன் வாழ்நாள் முழுவதும் வாழ வேண்டும். சர்க்கரை நோயாளிகள் கண்கள், சிறுநீரகம் மற்றும் இதயம் தொடர்பான நோய்களுக்கு ஆளாகிறார்கள் என்று பல ஆராய்ச்சிகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனால்தான் சர்க்கரை நோயாளிகள், இரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.

சர்க்கரை நோயைக் கட்டுக்குள் வைத்திருக்க ஆரோக்கியமான உணவு முறையுடன், உடல் செயல்பாடுகளும் மிகவும் முக்கியம் என்று மருத்துவர்கள் நம்புகிறார்கள். அதனால்தான் நோயாளிகள் யோகா, தியானம், நடைபயிற்சி போன்ற பயிற்சிகளைச் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.சர்க்கரை நோயை குணப்படுத்த முடியாத நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் உணவு விஷயத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) நீரிழிவு நோயாளிகளுக்ககான ஒரு சிறப்பு உணவு திட்டத்தைப் பகிர்ந்துள்ளது. இந்த உணவுத் திட்டத்தைப் பின்பற்றுவதன் மூலம், இரத்த சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

பகுதி அளவு மற்றும் பரிமாறும் அளவு ஆகியவற்றில் கவனம் செலுத்துங்கள்

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின்(CDC) படி, சர்க்கரை நோயாளிகள் தங்கள் உணவுத் தட்டின் பகுதி மற்றும் பரிமாறும் அளவுகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். பகுதி அளவைக் கவனிப்பது முக்கியம், ஏனென்றால் தட்டில் அதிக உணவு பரிமாறப்படும்போது, ​​​​மக்கள் அதிகமாக சாப்பிடுகிறார்கள்.இது இரத்த சர்க்கரை அளவுகளை அதிகரிக்கும் என்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

உணவகத்தில் சாப்பிடும்போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம்

diet-plan-for-diabetes-patients-to-control-blood-sugar

இப்போதெல்லாம் உணவகங்களில் உணவு உண்ணும் போக்கு அதிகரித்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் உணவகத்தில் உணவு சாப்பிடும்போது, பாதி உணவை மட்டும் சாப்பிட்டுவிட்டு மீதியை பேக் செய்து கொள்ளுங்கள். இரண்டு பகுதி அளவு உணவைச் சாப்பிடுவது இரத்த சர்க்கரையின் அளவை பாதிக்கிறது. இதேபோல், வீட்டில் சிப்ஸ், கிரிஸ்ப்ஸ் அல்லது ஏதேனும் தின்பண்டங்களைச் சாப்பிடும்போது, அதை முதலில் தட்டில் எடுத்து வைத்துப் பிறகு சாப்பிடுவதால் அளவறிந்து அதுகமாகச் சாப்பிடுவதை தவிர்க்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவை எவ்வாறு அளவிடுவது?

சர்க்கரை நோயாளிகள் தாங்கள் உண்ணும் உணவை அளவிடுவதற்கான சூத்திரத்தை CDC தயாரித்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் தங்கள் கைகள் மற்றும் விரல்களைப் பயன்படுத்தி உணவை அளவிடலாம். மேலும் உணவின் பகுதி அளவையும் சரிசெய்யலாம்.

  1. 3 அவுன்ஸ் கோழி, சிவப்பு இறைச்சி அல்லது மீன்

உள்ளங்கை அளவுக்கு அசைவ உணவை சாப்பிடுங்கள்

  1. 1 அவுன்ஸ் கோழி, சிவப்பு இறைச்சி அல்லது சீஸ்

கட்டைவிரல் அளவு சாப்பிடுங்கள்.

  1. ஏதேனும் பழம் அல்லது உலர் பருப்புகள்

கைநிறைய சாப்பிடலாம்.

  1. ஏதேனும் கூடுதல் உணவுப் பொருட்கள்

கையின் நடுப்பகுதி அளவு சாப்பிடுங்கள்.

உங்கள் ஆரோக்கியம், எடை மற்றும் வயதைப் பொறுத்தே உங்களின் தினசரி உணவு முறை அமைகிறது. சர்க்கரை நோயாளிகள், ஆரோக்கியமான உணவுகளான சாலட், பச்சை பீன்ஸ், கோழி, முட்டை போன்றவற்றை எப்போதும் சாப்பிட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஆனால் உங்கள் உணவுத் திட்டத்தில், புதிய உணவுகளைச் சேர்ப்பதற்கு முன் உங்கள் மருத்துவரை ஆலோசிப்பது நல்லது.

Image Source: Freepik

Read Next

→ மருந்துகள் இல்லாமல் சர்க்கரை நோயைக் குணப்படுத்த முடியுமா - மருத்துவர் ஆலோசனை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.