Sat Sep 12, 2026 | 12:46 AM IST

Blood Circulation: இரத்த ஓட்டத்தை அதிக்க இந்த உணவுகளும் உதவலாம்..

Foods For Increasing Blood Circulation: இப்போதெல்லாம் பலர் இரத்த ஓட்டம் பிரச்னையை எதிர்கொள்கின்றனர். அதிக எடை, புகைபிடித்தல், நீரிழிவு நோய், ரேனாட்ஸ், புற தமனி நோய் போன்ற நோய்களால், இரத்த ஓட்டத்தில் சிக்கல்கள் எழுகின்றன. 

இரத்த ஓட்டம் சரியாக இல்லாவிட்டால், இதயம், நுரையீரல் மற்றும் சிறுநீரகங்களில் பிரச்னைகள் ஏற்படலாம். மேலும், இரத்த ஓட்டம் சரியில்லாத போது தசைப்பிடிப்பு, வலி, செரிமான பிரச்னைகள், கை, கால்களில் உணர்வின்மை, குளிர்ச்சி போன்ற அறிகுறிகள் தென்படும். 

இரத்த ஓட்டம் தொடர்பான பிரச்சனைகளை மருந்துகளால் குணப்படுத்த முடியும் என்றாலும், சில உணவுகளை உண்பதும் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். அத்தகைய உணவுகள் இங்கே. 

கடல் மீன்

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இரத்தம் உறைவதைத் தடுக்கின்றன. மேலும், அவை இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, இரத்த ஓட்டத்தைப் பராமரிக்கின்றன. சால்மன், கானாங்கெளுத்தி, சூரை மற்றும் ட்ரவுட் போன்ற கொழுப்பு நிறைந்த மீன்களில் ஒமேகா-3 அமிலங்கள் நிறைந்துள்ளன.

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்களில் காணப்படும் சிட்ரிக் அமிலம், கார்போஹைட்ரேட் சேர்க்காமல் அத்தியாவசிய தாதுக்கள் மற்றும் வைட்டமின்களை வழங்குகிறது. அவை இரத்த நாளங்களில் உருவாகும் கட்டிகளை நீக்குகின்றன. மேலும் இது இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. 

இதையும் படிங்க: உடலின் இரத்த அளவை அதிகரிக்க உதவும் ஆகச் சிறந்த உணவுகள்!

நட்ஸ்

பல்வேறு வகையான நட்ஸில் மெக்னீசியம், பொட்டாசியம், அர்ஜினைன், கால்சியம் ஆகியவற்றில் நிறைந்துள்ளன. இவற்றில் உள்ள அர்ஜினைன் நைட்ரிக் அமிலத்தின் உற்பத்தியை ஊக்குவிக்கிறது. இது இரத்த நாளங்களை விரிவுபடுத்துகிறது. மேலும் இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. 

பூண்டு 

இரத்த அழுத்தம் மற்றும் இதய ஆரோக்கியத்தை பராமரிப்பதில் பூண்டு நன்மை பயக்கும். இதில் உள்ள கந்தகம் இரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது. இரத்த நாளங்களை தளர்த்தும். இது இரத்த ஓட்டத்தையும் மேம்படுத்துகிறது.

வெங்காயம்

வெங்காயம் உயர் இரத்த அழுத்தத்தைத் தடுக்கவும், இதய ஆரோக்கியத்தைப் பராமரிக்கவும் உதவுகிறது. வெங்காயத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். 

  • 2020 ஆம் ஆண்டில் ஜர்னல் ஆஃப் நியூட்ரிஷனில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 4 வாரங்களுக்கு ஒரு நாளைக்கு இரண்டு வெங்காயத்தை சாப்பிட்ட பெரியவர்களுக்கு இரத்த ஓட்டம் மேம்பட்டது என்பது தெளிவாகிறது. 
  • மேலும் 2016 இல் ஊட்டச்சத்து மற்றும் வளர்சிதை மாற்ற இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், வெங்காயம் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும் என்று கூறப்பட்டுள்ளது.

பின் குறிப்பு

சரியான உணவை உட்கொள்வதைத் தவிர, வாழ்க்கை முறை மாற்றங்களும் உங்களை நீண்ட காலம் ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். புகைப்பிடிப்பதை நிறுத்துதல், மன அழுத்தத்திலிருந்து விலகி இருப்பது, பொரித்த உணவுகளை முற்றிலுமாக தவிர்ப்பது, அதிக தண்ணீர் குடிப்பது, நார்ச்சத்து அதிகம் சாப்பிடுவது, மிதமான உடற்பயிற்சி செய்வது போன்றவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும்.

Image Source: Freepik

Read Next

Makhana Benefits: மக்கானா என்றால் என்ன? இது உடல் எடையை சட்டென்று குறைக்குமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content