Sat Sep 12, 2026 | 01:53 AM IST

Doctor Verified

குடல் ஆரோக்கியத்திற்கு ஆயுர்வேதம் தரும் சூப்பர் உணவுகள்.. மருத்துவர் தரும் டிப்ஸ்

குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் சில ஆயுர்வேத உணவுகள் உதவுகின்றன. ஆயுர்வேதத்தின் படி, குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் சூப்பர் உணவுகள் குறித்து மருத்துவர் தரும் குறிப்புகளைக் காணலாம்.

நல்ல செரிமானம் மற்றும் ஊட்டச்சத்து உறிஞ்சுதல் முதல் நோயெதிர்ப்பு மண்டல செயல்பாடு மற்றும் மனநிலைக் கட்டுப்பாடு வரை அனைத்திலும் குடல் ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது. இது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் அவசியமாகும். ஏனெனில், குடல் ஆரோக்கியத்தின் மூலம் சரும ஆரோக்கியம், மூளை ஆரோக்கியம் என பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. செரிமான மண்டலத்தில் உள்ள நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் தொகுப்பான ஆரோக்கியமான குடல் நுண்ணுயிர்த் தொகுப்பு, இந்த சமநிலையை அடைவதற்கு அவசியமானதாகும்.

செரிமான அமைப்பு உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உங்கள் நோய் எதிர்ப்பு சக்தி முதல் உங்கள் உணர்வுகள் வரை அனைத்தையும் பாதிக்கிறது. எனவே, வயிற்றுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குவது ஆரோக்கியத்தில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் ஆச்சரியமில்லை.

உணவில் சில குறிப்பிட்ட உணவுகளைச் சேர்ப்பது குடல் ஆரோக்கியத்தை வியக்கத்தக்க வகையில் மேம்படுத்திப் பராமரிக்க முடியும். இதில் குடல் ஆரோக்கியத்திற்கு சாப்பிட வேண்டிய சிறந்த உணவுகள் குறித்து தைராய்டு, ஹார்மோன்கள் மற்றும் கருவுறுதல் தொடர்பான தகவல்களைப் பகிர்ந்துள்ள டாக்டர் திக்சா பாவ்சர் சவாலியா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

நிபுணரின் கருத்து

மருத்துவர் தனது பதிவில் கூறியதாவது, “உங்கள் குடல் பலவீனமாக இல்லை என்றும், தவறான உணவுகள், தவறான நேரம் மற்றும் நிலையான மன அழுத்தத்தால் அது சோர்வடைகிறது என்றும் குறிப்பிடுகிறார். மேலும், ஆயுர்வேதம் சிக்கலான உணவுகள் அல்லது ஆடம்பரமான சூப்பர்ஃபுட்களை ஒருபோதும் நம்பவில்லை.

image

nutritionist-shares-4-Indian-fermented-foods-for-a-healthy-gut-Main

உடலில் அக்னி, உங்கள் செரிமான நெருப்பின் படி சாப்பிடுவதை நம்பியிருக்கிறது. இந்நிலையில் பாசிப்பருப்பு, தக்ரா, நெய், சமைத்த காய்கறிகள் மற்றும் பழைய அரிசி போன்ற எளிய உணவுகள் சரியான முறையில் பயன்படுத்தப்படும்போது, குடலை மெதுவாக குணப்படுத்த உதவுகிறது.

செரிமானம் குணமடையும்போது, அனைத்தும் பின்தொடர்கின்றன. இவை நோய் எதிர்ப்பு சக்தி, ஹார்மோன்கள், தோல், ஆற்றல், மன தெளிவு கூட இவை அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: சிறந்த குடல் செயல்பாட்டுக்கு உதவும் 10 பழங்கள்.! மருத்துவர் பரிந்துரை..

குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் உணவுகள்

பாசிப்பருப்பு

நன்மைகள்

  • பருப்பு வகைகளில் பாசிப்பருப்பு மிகவும் இலகுவானது மற்றும் ஜீரணிக்க எளிதானதாகும்
  • இவை உடலில் உள்ள நச்சுக்களைக் குறைக்க உதவுகிறது
  • மேலும் இவை எரிச்சல் இல்லாமல் செரிமான நெருப்பை பலப்படுத்துகிறது

எப்படி பயன்படுத்துவது

  • பாசிப்பருப்பு கிச்சடி
  • ஜீரா மற்றும் நெய்யுடன் வேகவைக்கப்பட்ட பாசிப்பருப்பை செய்து நன்மை பயக்கும்
  • மதிய உணவின் போது சூடாக உட்கொள்ள சிறந்ததாகும்

மோர் பால்

நன்மைகள்

  • செரிமானம் மற்றும் உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது
  • குடல் தாவரங்களை மீட்டெடுக்கிறது
  • வீக்கம், கனத்தன்மை மற்றும் கிரஹானி அறிகுறிகளைக் குறைக்கிறது

எப்படி பயன்படுத்துவது

  • புதிய தயிரை தண்ணீரில் கலக்க வேண்டும்
  • வறுத்த ஜீரா மற்றும் கல் உப்பு சேர்க்கலாம்
  • மதிய உணவிற்குப் பிறகு மட்டும் உட்கொள்ள வேண்டும்

சமைத்த காய்கறிகள்

நன்மைகள்

  • பச்சை உணவுகளை விட ஜீரணிக்க இது எளிதானதாக தேர்வாக அமைகிறது
  • வாயு மற்றும் வயிற்று அசௌகரியத்தைக் குறைக்கிறது
  • வழக்கமான குடல் இயக்கங்களை ஆதரிக்க உதவுகிறது

எப்படி பயன்படுத்துவது

  • லேசாக வதக்கிய அல்லது நீராவி செய்ய வேண்டும்
  • நெய் மற்றும் லேசான மசாலாப் பொருட்களைச் சேர்க்கலாம்
  • குணப்படுத்தும் போது பச்சை சாலட்களைத் தவிர்க்கலாம்

image

what-vegetables-should-avoid-in-morning-main-1760720929117.jpg

View this post on Instagram

A post shared by Dr Dixa Bhavsar Savaliya | Thyroid, Fertility, Hormones (@drdixa_healingsouls)

நெய்

நன்மைகள்

  • குடல் புறணியை குணப்படுத்த உதவுகிறது
  • ஊட்டச்சத்து உறிஞ்சுதலை மேம்படுத்த உதவுகிறது
  • வாத மற்றும் பித்தாவை சமநிலைப்படுத்துகிறது

எப்படி பயன்படுத்துவது

  • தினமும் 1-2 தேக்கரண்டி
  • பருப்பு, சாதம் அல்லது ரொட்டியில் சேர்க்கலாம்
  • எப்போதும் சூடாக உட்கொள்ள வேண்டும்

பழைய சாதம்

நன்மைகள்

  • பலவீனமான செரிமானத்தை மென்மையாக்குகிறது
  • பழைய சாதம் உட்கொள்வது நிலையான ஆற்றலை வழங்குகிறது
  • இவை குடல் மீட்சியை ஆதரிக்கிறது

எப்படி பயன்படுத்துவது

  • புதியதை விட பழைய அரிசியை விரும்ப வேண்டும்
  • நெய் மற்றும் பாசிப்பருப்புடன் இணைக்கலாம்
  • குடல் மீட்சி கட்டத்தில் இது சிறந்ததாகும்

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் வயிறு சரியில்லையா? ஒரு கப் மோர் போதும்!

Image Source: Freepik

Read Next

கடும் குளிரால் அவதியா? நீங்க கட்டாயம் உட்கொள்ள வேண்டிய 10 உணவுகள்.. ஆயுர்வேதம் சொல்லும் ரகசியம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 23, 2025 20:40 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content