
குளிர்காலம் அனைவருக்கும் நிம்மதியான, மகிழ்ச்சியான காலநிலையாக இருப்பினும், பல்வேறு நோய்த்தொற்றுக்கள் அதிகரிக்கும் காலமாகவும் அமைகிறது. ஏனெனில், இந்த காலகட்டத்தில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைந்து காணப்படுகிறது. குறிப்பாக, நோயெதிர்ப்புச் சக்தி பலவீனமாக உள்ளவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என அனைவரும் எளிதில் நோய்த்தொற்றுக்களால் பாதிக்கப்படுகின்றனர். எனவே, இது போன்ற காலநிலையில் உடலை பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்வது அவசியமாகும்.
முக்கியமான குறிப்புகள்:-
அதன் படி, சில ஆரோக்கியமான உணவுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இது உடலை சூடாக வைத்திருக்கிறது மற்றும் குளிர்கால பிரச்சனைகளைத் தடுக்க உதவுகிறது. இப்போது ஆயுர்வேதத்தின் படி, குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் குறித்து ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய நிபுணரான இஷா லால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.
நிபுணரின் கருத்து
நிபுணர் தனது பதிவில்,”குளிர்காலம் குறைவாக சாப்பிடுவதற்கான பருவம் அல்ல” என்று கூறினார்.
குளிர் காலத்தில் வறண்ட மூட்டுகள், கடினமான முதுகு, உள்ளே மெதுவாக செரிமானம் போன்றவற்றை சந்திக்கலாம் எனக் குறிப்பிடுகிறார்.
உடலில் வெப்பநிலை குறையும் போது, வாத தோஷம் அதிகரிக்கிறது. இதனால் வறட்சி, மூட்டு விறைப்பு, மலச்சிக்கல், வீக்கம், தொந்தரவு செய்யப்பட்ட தூக்கம், வறண்ட முடி, தோல் மற்றும் உச்சந்தலை மற்றும் பலவற்றைக் கொண்டுவருகிறது. குறிப்பாக 35 வயதுக்குப் பிறகு, 40 வயதுக்குப் பிறகு என பதிவிட்டுள்ளார்.
இந்த உணவுகள் ஏன் முக்கியம்?
ஆயுர்வேதம் ஒருபோதும் உணவை கலோரிகளாகக் கருதவில்லை. இது சமையலறையை தடுப்பு மருந்தாகக் கருதியது. இதில் நிபுணர் பகிர்ந்த நட்ஸ், விதைகள் மற்றும் மசாலாப் பொருட்கள் பின்வரும் நன்மைகளைத் தருகின்றன.
• மூட்டு உயவு மற்றும் எலும்பு அடர்த்தியை ஆதரிக்க
• குடல் இயக்கம் மற்றும் மலச்சிக்கலை மேம்படுத்த
• தசைகள், நரம்புகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த
• ஹார்மோன்கள் மற்றும் இணைப்பு திசுக்களை வளர்க்க
nutritionist-shares-5-winter-foods-that-help-you-lose-weight-even-while-you-sleep-Main
ஏனெனில், பருவகாலத்திற்கு ஏற்ப சாப்பிடும் போது, உணவு சிகிச்சையாக மாறுகிறது. மேலும், குளிர்காலம் என்பது சப்ளிமெண்ட்ஸ் சாப்பிடுவது அல்லது உணவு கட்டுப்பாட்டிற்காக மட்டுமல்ல. இது இருப்புக்களை உருவாக்குவதற்கானதாகும் என விவரிக்கிறார்.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்கால நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சாப்பிட வேண்டிய காய்கறிகள்.. நிபுணர் பரிந்துரை..
குளிர்காலத்தில் சாப்பிட வேண்டிய ஆயுர்வேத உணவுகள்
வெள்ளை எள்
- இவை வாதத்தை ஆழமாக சமநிலைப்படுத்துகிறது மற்றும் ரசாயனப் பண்பு கொண்டதாகும்
- வெள்ளை எள் ஓஜஸ், மூட்டுகள், சருமம் மற்றும் இனப்பெருக்க திசுக்களை வளர்க்கிறது
- வெள்ளை எள்ளில் கால்சியம், துத்தநாகம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் லிக்னான்கள் நிறைந்துள்ளது.
- இது எலும்பு அடர்த்தி, ஹார்மோன் சமநிலை மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
கருப்பு எள்
- இது எலும்புகளை வலுவாக்கவும், முடி, பற்கள் மற்றும் சிறுநீரகங்களை பலப்படுத்தவும் உதவுகிறது
- கருப்பு எள் ஆனது வெள்ளை எள்ளை விட வலிமையானது, கனமானது மற்றும் அதிக உஷ்ணத்தைத் தரக்கூடியது
- இதில் இரும்புச்சத்து, ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ளன
- இது முடிக்கு நிறமூட்டுதல், இரத்த சோகை தடுப்பு மற்றும் செல் பாதுகாப்புக்கு உதவுகிறது
ஆளி விதைகள்
- இது வெப்பமானது, எண்ணெய் பசை கொண்டது, குடலுக்கு உகந்த விதையாகும்
- இதில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மலச்சிக்கல், ஈஸ்ட்ரோஜன் சமநிலை மற்றும் அழற்சி போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு உதவுகிறது
சுக்கு
- உடலில் அதிக வெப்பத்தை ஏற்படுத்தாமல், செரிமான சக்தியைத் தூண்டுவதற்கு உதவுகிறது
- வயிற்று உப்புசம், கனம் மற்றும் குளிர் உணர்திறனைக் குறைக்கிறது.
கிராம்பு
- கிராம்பு உட்கொள்வது ஜீரண சக்தியைத் தூண்டுகிறது, வாயுவைக் குறைக்கிறது, மற்றும் கப-வாத அடைப்புகளை நீக்குகிறது
- இதில் உள்ள யூஜெனால் வாய் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் குடல் வசதிக்கு ஏற்றதாகும்
ஜாதிக்காய்
- இவை உடலுக்கு ஆறுதல், வெப்பம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் சமநிலையைத் தருகிறது
- தூக்கம், நரம்புகள் மற்றும் வாத ஏற்றத்தாழ்வுக்கு ஜாதிக்காய் பெரிதும் உதவுகிறது
nutmeg-482-1751901150075.jpg
நெய்
- உணவில் நெய் சேர்ப்பது மூலிகைகளை திசுக்களின் ஆழத்திற்கு கொண்டு செல்கிறது
- மேலும் இது செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நரம்பு மண்டலத்தை பலப்படுத்துகிறது
மஞ்சள் மற்றும் கருப்பு மிளகு
- மஞ்சள் குணப்படுத்தும் பண்புகளைக் கொண்டுள்ளது. மிளகு அதைச் செயல்படுத்த உதவுகிறது
- இதில் உள்ள அழற்சி எதிர்ப்புப் பண்புகள் மூட்டு பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
பாதாம்
- இவை ஓஜஸை உருவாக்கவும், மூளை மற்றும் ஹார்மோன்களை வளர்க்கவும் உதவுகிறது.
- மேலும் இது வாதத்தை சமநிலைப்படுத்துகிறது, நினைவாற்றல் மற்றும் வலிமைக்கு உதவுகிறது.
வால்நட்ஸ்
- இது எண்ணெய் பசை கொண்டதாகும். மேலும் இது வெப்பமானது, ஆழமான நிலைத்தன்மையை அளிக்கிறது.
- மேலும் மூட்டுகள், நரம்புகள் மற்றும் குளிர்கால சோர்வுக்கு வால்நட்ஸ் சிறந்ததாகும்
- இந்த உணவுகளைக் குளிர்காலத்தில் தங்கள் அன்றாட உணவில் சேர்ப்பதற்கு நிபுணர் பரிந்துரைக்கிறார்.
பொறுப்புத்துறப்பு
இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.
இந்த பதிவும் உதவலாம்: குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்திருக்க நிபுணர் பரிந்துரைக்கும் 5 அற்புத உணவுகள்.!
Image Source: Freepik
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Dec 23, 2025 16:51 IST
Published By : கௌதமி சுப்ரமணி

