Fri Sep 11, 2026 | 11:11 PM IST

Doctor Verified

குதிகால் வெடிப்பால் அவதியா? உங்க சமையலறையில் இருக்கும் இந்த பொருள்கள் போதும்.

குளிர்காலத்தில் பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக குதிகால் வெடிப்பு அமைகிறது. இதில் குதிவெடிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும், அதிலிருந்து விடுபட உதவும் குறிப்புகள் குறித்தும் மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

குளிர் காலம் பலருக்கும் நிம்மதியான மற்றும் மகிழ்ச்சியான காலமாக இருப்பினும், அவை பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தும் காலமாகவும் அமைகிறது.  இந்த காலகட்டத்தில் வறண்ட ஈரப்பதம் காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படலாம். இந்த வரிசையில், அழகு சார்ந்த பிரச்சனைகளில்  ஒன்றாக குதிகால் வெடிப்பு அமைகிறது.  இதில்,  குதிகால் வெடிப்பு எதனால் ஏற்படுகிறது என்பது குறித்தும், அதற்கான சிறந்த வீட்டு வைத்தியங்கள் குறித்தும் மருத்துவர் ஹன்சாஜி  அவர்கள் தி யோகா  இன்ஸ்டியூட் யூடியூப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.  அதைப் பற்றி இங்கு காண்போம்.

மருத்துவரின் கருத்து

மருத்துவர் தனது வீடியோவில்  கூறியதாவது,  பித்த வெடிப்பு என்பது ஒரு அழகு சம்பந்தமான பிரச்சனை என பலரும் நினைக்கின்றனர். ஆனால் உண்மையில் இது உடலில் வறட்சி, வாத தோஷத்தில் சமநிலையின்மை மற்றும் சரியான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பதை உணர்த்தும் அறிகுறியாகும். இதை க்ரீம் தடவுவதால் மட்டும் சரி செய்ய முடியாது. இந்த நிலையை வீட்டு வைத்தியங்கள்,  உணவு மற்றும் தினசரி பழக்கவழக்கங்கள் மூலம் கையாள முடியும்.

பித்த வெடிப்புக்கான காரணங்கள்

மருத்துவரின் கூற்றுப்படி, பாதங்களில் உள்ள தோல் வறண்டு, அதன் நெகிழ்ச்சித் தன்மையை இழக்கும் போது, பித்த வெடிப்பு ஏற்படும்.  இதற்கான சில காரணங்களைக் காணலாம்.

  • வெறுங்காலுடன் நடப்பது
  • நீண்ட நேரம் நிற்பது
  • குளிர்ந்த வானிலை
  • நீர் சத்து குறைபாடு
  • இரத்த ஓட்டம் குறைபாடு
  • வாதத்தில் ஏற்படும் சமநிலையின்மை

குதிகால் வெடிப்புக்கான சிறந்த வீட்டு வைத்தியம்

ஆயுர்வேதத்தில் குதிகால் வெடிப்பு 'பாததாரி' என்று அழைக்கப்படுகிறது.  இதில் பித்தம் மற்றும் வாதம், சருமத்தின் இயற்கையான ஈரப்பதத்தை  சீர்குலைக்கிறது. இந்நிலையில், வீட்டிலேயே கிடைக்கும் சில எளிய பொருள்களுடன்  குதிகால் வெடிப்பை சரியாக்கலாம்.

தேவையானவை

  • தேங்காய் எண்ணெய் -  இரண்டு டேபிள் ஸ்பூன்
  • தூய தேன் மெழுகு அல்லது நெய் -  ஒரு டேபிள் ஸ்பூன்
  • மஞ்சள் தூள் - ஒரு டீஸ்பூன்

தயாரிக்கும் முறை

  • ஒரு பாத்திரத்தில்  தேங்காய் எண்ணெயை லேசாக சூடாக்க வேண்டும்.
  • பின், அதில் மஞ்சள்,  தேன் மெழுகு அல்லது நெய்யை சேர்க்கலாம். இவை அனைத்தையும்  நன்றாக கலக்க வேண்டும்.
  • இதை ஆற வைத்து, பின்னர் ஒரு சிறிய பாட்டிலில் சேமித்து வைக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பித்த வெடிப்பு வராமல் தடுக்க சித்த மருத்துவர் சிவராமன் சொன்ன முக்கிய வழிமுறைகள்!

பயன்படுத்தும் முறை

  • ஒவ்வொரு இரவும் தூங்குவதற்கு முன்பு,  பாதங்களை வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
  • பின்னர், இறந்த சருமத்தை அகற்ற ஒரு பியூமிஸ் கல்லைக் கொண்டு மெதுவாகத் தேய்க்கலாம்.
  • இதை துடைத்து உலர்த்தி,  தயாரித்த கலவையை குதிகால்களில் தாராளமாக தடவலாம்.
  • ஒரு சுத்தமான பருத்தி காலுறைகளை அணிந்து  கொள்ளலாம்.  இதை ஏழு முதல் 10 இரவுகள் செய்வதன் மூலம்,  குதிகால்கள் மிருதுவாகவும் மென்மையாகவும் மாறுவதை காண முடியும்.

மற்ற வீட்டு வைத்தியங்கள்

மருத்துவர்,  குதிகால்களுக்கு உதவும் மற்றொரு வீட்டு வைத்தியமாக வாழைப்பழம் மற்றும் தேன் கலவை அல்லது வேம்பு மற்றும் துளசி பசை போன்ற வேறு சில கலவைகளையும் பயன்படுத்த அறிவுறுத்துகிறார்.

வாழைப்பழம் மற்றும் தேன் கலவை

  • ஒரு பழுத்த வாழைப்பழத்தை, ஒரு டீஸ்பூன் தேனுடன்  மசித்து  அதை குதிகால்களில் தடவ வேண்டும்.
  • இதை 20 நிமிடங்கள் அப்படியே வைத்து, பின்னர் கழுவலாம்.
  • இது சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து, குதிகால் வெடிப்பை சரி செய்கிறது.

வேம்பு மற்றும் துளசி பசை கலவை

  • வேம்பு மற்றும் துளசி இலை கலவையை சில துளிகள் எலுமிச்சை சாறுடன் அரைத்து தயாரிக்கலாம்.
  • தொற்று ஏற்பட்ட அல்லது ஆழமான பித்த வெடிப்புகள் கொண்டிருப்பவர்கள்,  அரிப்பை குறைக்கவும்,  தொற்று நோயை தடுக்கவும் இந்த பசையை பயன்படுத்தலாம்.

குதிகால் பராமரிப்பு குறிப்புகள்

  • பித்தவெடிப்பு என்று வரும்போது, குணப்படுத்துதல் என்பது வெளிப்புறம் மட்டும் சார்ந்ததல்ல.  நாம் உண்ணும் உணவும் சருமத்தின் அமைப்பை பாதிக்கிறது.
  • எனவே திசுக்களுக்கு ஊட்டமளிக்க நெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் போன்ற நல்ல கொழுப்புகளை உட்கொள்ள வேண்டும்.
  • வெள்ளரிக்காய், சுரைக்காய் மற்றும் ஊறவைத்த உலர் பழங்கள் போன்ற நீரேற்றம் தரும் உணவுகள் உங்களுக்கு நல்லது.

image

best-yoga-poses-that-can-help-with-heel-pain-Main-1732793119360.jpg

  • மேலும், வாதம் மற்றும் பித்தத்தை சமநிலைப்படுத்த சீரகம், கொத்தமல்லி, சோம்பு போன்ற மூலிகை தேநீரை சூடாக அருந்தலாம்.
  • உள் வறட்சியை அதிகரிக்கும் வறண்ட, காரமான, உப்பு நிறைந்த உணவுகளைக் குறைப்பதும் அவசியம்.

வாழ்க்கை முறை குறிப்புகள்

மருத்துவர் கூடுதலாக, குதிகால் ஆரோக்கியத்திற்கு சில வாழ்க்கை முறை குறிப்புகளையும் பகிர்ந்துள்ளார்.

  • கீழ் மூட்டுகளுக்கு ரத்த ஓட்டத்தை மேம்படுத்த தலாசனம், கருடாசனம் போன்ற யோகாசனங்களைக் கற்றுக்கொண்டு பயிற்சி செய்யலாம்.
  • நீண்ட நேரம் நிற்பதையும், கடினமான அல்லது அழுக்கான பரப்புகளில் வெறுங்காலுடன் நடப்பதையும் தவிர்க்க வேண்டும்.
  • இறந்த சருமத்தை மென்மையாக்கவும், சோர்வடைந்த பாதங்களைத் தளர்த்தவும், வாரந்தோறும் பாதங்களை ஒரு சிட்டிகை கல் உப்பு கலந்த வெந்நீரில் ஊறவைக்கலாம்.
  • கடுமையான சோப்பு மற்றும் வெந்நீர் குளியலைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை இயற்கையான எண்ணெயை அகற்றி வறட்சியை அதிகரிக்கலாம்.
  • மேலும், மென்மையான, சுவாசிக்கக்கூடிய காலணிகளை அணிய வேண்டும்.

இறுதியாக, குதிகால் வெடிப்பு போன்ற ஒரு எளிய விஷயம் கூட ஓய்வுக்கும் செயல்பாடுகளுக்கும் இடையிலான சமநிலையை நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. மேலும், பாதங்கள் ஒவ்வொரு நாளும் உங்கள் முழு எடையையும் தாங்குகின்றன. எனவே, பாதங்களைக் கவனித்துக் கொள்வதன் மூலம், அடித்தளத்தை பாதுகாக்கலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: குதிகால் வெடிப்பினை சரி செய்வது எப்படி.? மருத்துவர் விளக்கம்..

Image Source: Freepik

Read Next

ஒன்றா, இரண்டா.. பல நன்மைகளை அள்ளித் தரும் தேங்காய் எண்ணெயின் அற்புதங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 22, 2025 21:15 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content