Thu Oct 29, 2026 | 08:46 AM IST

Doctor Verified

ஆண்குறி வீக்கம்.. பராஃபைமோசிஸ் என்ற ஆபத்தான நிலை.! டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை..

ஆண்களின் உடல் நல பிரச்சனைகளில் பெரும்பாலும் பேசப்படாத ஒன்று — ஆண்குறி வீக்கம். இது “பராஃபைமோசிஸ்” எனப்படும் மருத்துவ நிலை. இதன் காரணம், அறிகுறிகள், தீர்வு குறித்து டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்.
ஆண்குறி வீக்கம்.. பராஃபைமோசிஸ் என்ற ஆபத்தான நிலை.! டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை..ஆண்குறி வீக்கம்.. பராஃபைமோசிஸ் என்ற ஆபத்தான நிலை.! டாக்டர் கார்த்திகேயன் எச்சரிக்கை..

பெண்கள் தங்கள் உடல் சார்ந்த பிரச்சனைகளை சக பெண்களிடம் பகிர்ந்துக் கொள்வது இயல்பு. ஆனால், ஆண்கள் பெரும்பாலும் தங்கள் உடல் பிரச்சனைகளை, குறிப்பாக பிறப்புறுப்பு (genital) ஆரோக்கியம் குறித்த பிரச்சனைகளை, நண்பர்களிடமும் கூட வெளிப்படையாகச் சொல்லத் தயங்குகிறார்கள். இதுவே பலரின் ஆண்மை ஆரோக்கியத்தை பாதிக்கக் காரணமாகிறது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

முக்கியமான ஒரு பிரச்சனை — ஆண்குறி வீக்கம் (Paraphimosis)

ஆண்களிடையே காணப்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று — ஆண்குறி வீக்கம். சில ஆண்களுக்கு, ஆண்குறியின் முன் தோலை (foreskin) பின்புறமாக ஓரளவிற்கும் மேலாக இழுக்க முடியாமல் இருக்கும். சிலர் காலை எழுந்ததும், வீக்கத்தால் சிறுநீர் கழிக்க முடியாத நிலைக்கும் ஆளாகிறார்கள். இந்த நிலையை மருத்துவ ரீதியில் “பராஃபைமோசிஸ் (Paraphimosis)” என்று அழைக்கப்படுவதாக மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகிறார்.

Video Link: https://youtu.be/GLvOtJLovQM

பராஃபைமோசிஸ் என்றால் என்ன?

முன் தோலை இயல்பான முறையில் பின்புறம் இழுக்க முடியாத நிலையே பராஃபைமோசிஸ். இது ஏற்பட்டால், சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல், வலி மற்றும் வீக்கம், சில சமயம் இரத்த ஓட்டம் பாதிப்பு போன்ற கடுமையான விளைவுகளும் ஏற்படும். தோலை மீண்டும் இயல்பு நிலைக்கு திருப்ப முடியாவிட்டால், உடனடியாக மருத்துவ உதவி தேவைப்படும்.

டாக்டர் கார்த்திகேயன் விளக்கம்

“ஆண்குறியின் முன் தோலை பின்புறமாக இழுக்க முடியாமல் இருந்தாலோ, அது வீங்கியிருந்தாலோ, இது ஒரு முக்கிய மருத்துவ பிரச்சனை. இதை கவனிக்காமல் விட்டால், சிறுநீர் கழிக்க முடியாத நிலை உருவாகும்,” என மருத்துவர் கார்த்திகேயன் கூறுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: இந்த 6 அறிகுறிகள் இருக்கா? உங்க கல்லீரலுக்கு உடனடி நச்சு நீக்கம் தேவை.. நிபுணர் தரும் கூடுதல் குறிப்புகள்

தீர்வு என்ன?

இத்தகைய பிரச்சனைகளுக்கு அறுவை சிகிச்சை (Circumcision) மூலம் நிரந்தர தீர்வு கிடைக்க முடியும் என அவர் கூறுகிறார். அறுவை சிகிச்சையின் மூலம் முன் தோலை நீக்கி விடுவதால், பராஃபைமோசிஸ் போன்ற நிலைகள் மீண்டும் உருவாகாது. மேலும், தினசரி தனிப்பட்ட சுத்தம் (personal hygiene) அவசியம் என்று அவர் வலியுறுத்துகிறார்.

தினசரி பராமரிப்பு முக்கியம்

* ஆண்குறியை தினமும் சுத்தம் செய்வது முக்கியம்.

* குளிக்கும்போது முன் தோலை மெதுவாக இழுத்து சுத்தம் செய்ய வேண்டும்.

* தீவிர வலி அல்லது வீக்கம் இருந்தால், தாமதமின்றி மருத்துவரை அணுக வேண்டும்.

* தாமாக மருந்து அல்லது கிரீம் பயன்படுத்த வேண்டாம்.

இறுதியாக..

ஆண்களின் உடல் நல பிரச்சனைகள் குறித்து பேசுவதில் வெட்கப்பட வேண்டாம். ஆண்குறி வீக்கம் அல்லது சிறுநீர் பிரச்சனை போன்ற அறிகுறிகள் தோன்றினால் உடனே மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியம். தாமதம் செய்தால், சிறிய பிரச்சனை பெரிய ஆபத்தாக மாறக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆண்மையை காக்கும் முதல் படி — சுத்தம் மற்றும் விழிப்புணர்வு!

Disclaimer: இந்தக் கட்டுரை பொது தளத்தில்/ நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களிடமிருந்து பெறப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள மருத்துவ விவரங்களைப் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சிறுநீரக நிபுணரிடம் (Urologist) ஆலோசனை பெறுவது அவசியம்.

Read Next

→ ஆண்களுக்கு ஏற்படும் உடல்நலப் பிரச்சனைகளும், அதை சரி செய்யும் முறைகளும்.. நிபுணரின் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 24, 2025 19:02 IST

    Published By : Ishvarya Gurumurthy