Shahrukh khan Injured: படப்பிடிப்பின் போது காயமடைந்த ஷாருக்கான்.!

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான், "King" என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு போது காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காயத்தின் தீவிரம் காரணமாக, அவர் உடனடியாக அமெரிக்கா புறப்பட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
  • SHARE
  • FOLLOW
Shahrukh khan Injured: படப்பிடிப்பின் போது காயமடைந்த ஷாருக்கான்.!


"King" திரைப்படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடந்தபோது, ஷாருக் கான் படப்பிடிப்பு நடுவே காயமடைந்துள்ளார். ஒரு ஸ்டண்ட் காட்சியை படமாக்கும் தருணத்தில் ஏற்பட்ட தவறான நகர்வால், அவரது கையில் கடுமையான காயம் ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயத்திற்கு உடனடியாக முதலுதவி வழங்கப்பட்டபின்பு, மருத்துவர்களின் பரிந்துரையின் பேரில் அமெரிக்கா செல்லும் முடிவை அவர் எடுத்துள்ளார். தற்போது அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்றே கூறப்படுகிறது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. SRK ரசிகர்கள் #GetWellSoonSRK என்ற ஹாஷ்டேக்கில் தனது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Vijay Devarakonda: அவசரமாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட விஜய் தேவரகொண்டா.! என்ன ஆனது.?

"King" திரைப்படத்தின் ஷூட்டிங் சில நாட்களுக்கு இடைநிறுத்தம் செய்யப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஷாருக் கானின் நிலைமை குறித்து அதிகாரபூர்வ தகவல் வெளியாகும் வரை, ரசிகர்கள் அமைதியாக காத்திருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

artical  - 2025-07-19T171324.336

ஷாருக்கான் தனது படங்களின் படப்பிடிப்பின் போது காயம் அடைவது இது முதல் முறையல்ல. 'டார்' படத்தின் படப்பிடிப்பின் போது, நடிகரின் மூன்று விலா எலும்புகள் மற்றும் இடது கணுக்காலில் முறிவு ஏற்பட்டது. 1993 ஆம் ஆண்டும், ஒரு படப்பிடிப்பின் போது நடிகரின் கால் விரலில் காயம் ஏற்பட்டது, அதே நேரத்தில் ஷாருக்கான் 'கொய்லா' மற்றும் ஜவான் படப்பிடிப்பின் போதும் காயமடைந்துள்ளார்.

'சக்தி' படத்தில் "இஷ்க் கமினா" என்ற ஐட்டம் பாடலுக்கு ஆடும்போது, ஷாருக்கானின் முதுகில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் பிறகு, அவருக்கு இங்கிலாந்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. 'துல்ஹா மில் கயா' படத்தில் ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பின் போது ஷாருக்கானின் இடது தோள்பட்டை எலும்பு சேதமடைந்தது.

 

 

Read Next

கருப்பை பலவீனமா இருக்க காரணங்கள் என்னவா இருக்கும் தெரியுமா? மருத்துவர் தரும் விளக்கம் இதோ

Disclaimer

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version


குறிச்சொற்கள்