Sat Sep 12, 2026 | 02:48 AM IST

Hair Dye Tips: கொஞ்சம் மஞ்சள் தூள் இருந்தா போதும் உங்க நரைமுடியை 10 நிமிடத்தில் கறுப்பாக்கலாம்!

How To Dye Hair With Turmeric: கரு கருவென நீளமான கூந்தல் யாருக்குத்தான் பிடிக்காது. ஆனால், இன்றைய வாழ்க்கை, மாசுபாடு, ஊட்டச்சத்து குறைபாடுகள், ஹார்மோன் சமநிலையின்மையால் முடி உதிர்வு, தலை முடி மெலிவு, வழுக்கை, நரைமுடி என பல வகையான பிரச்சனைகளை சந்தித்து வருகிறோம். அதில் குறிப்பாக இளநரை பலரையும் பாதிக்கும் விஷயங்களில் ஒன்று.

நரைமுடி இருப்பதால், இளம் வயதிலேயே நாம் வயதான தோற்றத்தை பெறுவோம். சில சமயங்களில் இதன் காரணமாக நம்பிக்கையும் பலவீனமாகும். கூந்தலை கருமையாக்க பலர் சந்தைகளில் விற்கப்படும் பொருட்களை வாங்கி உபயோகிப்போம். இதில், அதிக அளவு ரசாயனம் இருப்பதால், கருமையான முடிகள் விரைவாக வெள்ளையாக மாறத் தொடங்குகின்றன. மேலும், அவற்றின் பயன்பாடு உடலுக்கு பல வகையான சேதங்களையும் ஏற்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம் : Cinnamon for hair : அடர்த்தியான கூந்தலை பெற இலவங்கப்பட்டையை இப்படி யூஸ் பண்ணுங்க!

இயற்கையான முறையில் நீங்கள் உங்கள் கூந்தலை கறுப்பாக்க விரும்பினால், உங்கள் சமையல் அறையில் உள்ள மஞ்சள் பொடியை பயன்படுத்தலாம். மஞ்சள் உணவின் சுவை மற்றும் நிறத்தை அதிகரிப்பதோடு, இயற்கையாகவே முடியை கருமையாக்கும். இதனை தலைமுடியில் தடவுவதால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. கூந்தலை கருமையாக்க மஞ்சளை எப்படி தடவுவது என்று பார்ப்போம்.

மஞ்சள் மற்றும் தேன்

முடியை கருமையாக்க ஒரு கிண்ணத்தை எடுக்கவும். அதில் 1 டீஸ்பூன் மஞ்சள், 2 டீஸ்பூன் தேன் மற்றும் 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய் கலந்து பேஸ்ட் தயார் செய்யவும். இப்போது இந்த கலவையை முடி முதல் வேர்கள் வரை தடவி 15 முதல் 20 நிமிடங்கள் வைத்திருக்கவும். அதன் பிறகு, தலைமுடியை தண்ணீரில் கழுவவும். இந்தக் கலவையைத் தடவினால் கூந்தல் கருப்பாகவும் மென்மையாகவும் பட்டுப் போலவும் மாறும்.

இந்த பதிவும் உதவலாம் : இந்த 9 பழக்கங்கள் முடி ஆரோக்கியத்தை பாதிக்கும்!

மஞ்சள் மற்றும் அலோ வேரா

மஞ்சள் மற்றும் கற்றாழையின் உதவியாலும் நரை முடியை கருப்பாக்கலாம். இதற்கு முதலில், ஒரு கிண்ணத்தில் 1 தேக்கரண்டி மஞ்சள், 1 கப் தண்ணீர் மற்றும் 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் ஆகியவற்றைக் கலந்து ஒரு கலவையைத் தயாரிக்கவும்.

இப்போது இந்த கலவையை 1 ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும். பின்னர், இந்த கலவையை முடி மற்றும் வேர்களில் ஸ்ப்ரே செய்து 1 மணி நேரம் அப்படியே விடவும். அதன் பிறகு, தலைமுடியை தண்ணீரை கொண்டு கழுவவும். இந்த ஸ்ப்ரே முடியை கருமையாக்குவதுடன் கூந்தலை பளபளப்பாகவும் மாற்றுகிறது.

இந்த பதிவும் உதவலாம் : ஆரோக்கியமான கூந்தல் வேண்டுமா? உங்களுக்கான 6 ஆசனங்கள் இங்கே…

மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய்

மஞ்சள் மற்றும் தேங்காய் எண்ணெய் கூட முடியை கருப்பாக்க பயன்படுத்தலாம். இதைப் பயன்படுத்த, ஒரு பாத்திரத்தில் 3 முதல் 4 ஸ்பூன் தேங்காய் எண்ணெயை எடுத்துக் கொள்ளவும். எண்ணெயை சிறிது சூடாக்கிய பிறகு, அதில் 1 தேக்கரண்டி மஞ்சள் சேர்த்து கலவையை தயார் செய்யவும்.

இப்போது இந்தக் கலவையைக் கொண்டு முடியை மசாஜ் செய்யவும். இந்த கலவையை தலைமுடியில் 20 நிமிடங்கள் விடவும். அதன் பிறகு முடியை சுத்தம் செய்யவும். இந்த கலவை முடியை கருமையாக்குவது மட்டுமின்றி முடி வளர்ச்சியையும் அதிகரிக்கும்.

Pic Courtesy: Freepik

Read Next

Hair Fall Control: முடி உதிர்வு குறைந்து போதும் போதும் என கூறும் அளவுக்கு முடி வளர இந்த இலைகளை யூஸ் பண்ணுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Devaki Jeganathan

Devaki Jeganathan

Senior Sub Editor

நான் தேவகி ஜெகநாதன், டிஜிட்டல் மீடியாவில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றி வருகிறேன். கல்வி, வேலைவாய்ப்பு, லைஃப்ஸ்டைல் மற்றும் ஜோதிடம் மீது அதீத ஆர்வம் கொண்டவர். தற்போது, குழந்தை நலன், வீட்டு வைத்தியம், அழகு குறிப்பு, உடற்பயிற்சி மற்றும் உணவு தொடர்பான தலைப்புகளில் கட்டுரைகளை எழுதி வருகிறேன். மக்களுக்கு தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் அவர்களை விழிப்புணர்வுடன் வைத்திருப்பதே எனது நோக்கம். எனக்கு பயணம் செய்வதும், புகைப்படம் எடுப்பதும் பிடிக்கும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content