Sat Sep 12, 2026 | 12:59 AM IST

Doctor Verified

அவுரி பொடி சரியாக பயன்படுத்தினால் மட்டுமே நரை குறையும்! மருத்துவர் சொல்வது என்ன?

அவுரி பொடி நரைமுடியை இயற்கையாகக் குறைக்க உதவும் சக்திவாய்ந்த மூலிகை. அதை எப்படி சரியாகப் பயன்படுத்த வேண்டும்? எலுமிச்சையும் உப்பும் சேர்க்க வேண்டிய காரணம் என்ன? மருத்துவர் விளக்கம் இங்கே.

இயற்கையாகவே நரைமுடியை குறைத்து கூந்தலுக்கு கருப்பு நிறம் பெற விரும்பும் பலருக்கும் அவுரிப்பொடி ஒரு சிறந்த மாற்றாக திகழ்கிறது. செயற்கை ஹேர் டெய் பயன்படுத்த விரும்பாதவர்களின் விருப்பப் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது இந்த பாரம்பரிய மூலிகை.

சமீபத்தில், தோல் மற்றும் முடி நல நிபுணர் டாக்டர் தீபா அருளாளன், அவுரிப்பொடி எப்படி சரியாகப் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற முக்கிய தகவல்களை பகிர்ந்துள்ளார். பொதுவாக மக்கள் பயன்படுத்தும் தவறான முறைகளால் நிறம் வராதது போல தோன்றினாலும், உண்மையில் முறையே சரியில்லை என்பதே காரணம் என அவர் விளக்குகிறார்.

அவுரிப்பொடியை பயன்படுத்தும் சரியான முறை

1. அளவு முக்கியம்

குளிப்பதற்கு முன் சுமார் 5 நிமிடங்களுக்கு முன்னதாக மூன்று டீஸ்பூன் அவுரிப்பொடியை எடுத்துக் கொள்ள வேண்டும்.

2. தண்ணீரில் கலக்கும்போது செய்ய வேண்டியது

லேசாக கதகதப்பான (சற்று வெந்நீர்) தண்ணீரில் அவுரிப்பொடியை 10 விநாடிகள் மட்டும் கலக்க வேண்டும். முக்கியமான விஷயம், ஒரு சிட்டிகை உப்பு, நான்காக வெட்டிய எலுமிச்சை துண்டின் ஒரு பகுதி - இவை இரண்டும் சேர்த்தால் அவுரி கலவைக்கு நிறத்தை கூட்டும் இயற்கை ஊக்கமாக செயல்படும்.

இந்த பதிவும் உதவலாம்: முடி கொட்டுதா? மருத்துவர் சொல்வது இந்த 2 அயில்தான் – வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

3. கலவை ஊற வேண்டிய நேரம்

கலந்ததும், சுமார் 30 வினாடிகள் மூடி ஊற விடுங்கள். இந்த நேரத்தில் கலவையின் நிறம் பர்பிள் கலந்த நீல நிறம் (Indigo shade) ஆக மாறும். இந்த நிறத்திற்கே அவுரியின் சக்தி.

4. எப்படி அப்ளை பண்ணுவது?

* பர்பிள் நிறம் தெளிவாக மாறியவுடன், அதை முடிக்குச் சமமாகப் பூசிக் கொள்ள வேண்டும்.

* சுமார் 1 மணி நேரம் விட்டுப் பின்னர் தலையை கழுவிக் கொள்ளுங்கள்.

* இப்படி செய்தால் கூந்தலில் அடர்ந்த கருப்பு நிறம் உருவாகும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

பயன்படுத்தியும் நிறம் வரவில்லை என்றால்?

பலர் “அவுரிப்பொடி வேலை செய்யவில்லை” என்று சொல்லக் கூடும். அதற்கான ஒரே காரணம் - சரியான முறையைப் பின்பற்றாததால்.. உப்பும் எலுமிச்சையும் சேர்க்காமல் பயன்படுத்துவது, அல்லது ஊற விட வேண்டிய நேரம் தவறுவது, அதேபோல் நீண்ட நேரம் கலக்குவது - இவை அனைத்தும் நிறத்தை கெடுத்துவிடும்.

மருத்துவர் அறிவுரை

அவுரிப்பொடி இயற்கையானது என்பது உண்மை. ஆனால்:

* கர்ப்பிணிகள்

* தாய்ப்பால் கொடுப்பவர்கள்

* அலெர்ஜி பிரச்சனை உள்ளவர்கள்

இந்த கலவயை பயன்படுத்துவதற்கு முன் மருத்துவரை ஆலோசிக்க வேண்டும் என்று நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

இறுதியாக..

அவுரிப்பொடி சரியான முறையில் பயன்படுத்தினால் நரைமுடியை இயற்கையாகக் குறைக்க உதவும் ஒரு மிகப் பயன்படும் மூலிகை. எலுமிச்சையும் உப்பும் சேர்க்கும் சிறிய மாற்றமே அதன் செயல்திறனை பலமடங்கு உயர்த்துகிறது. செயற்கை ரசாயனங்களுக்குப் பதிலாக பாதுகாப்பான ஒரு இயற்கை தீர்வைத் தேடுபவர்களுக்கு இது சிறந்த தேர்வு.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணர்கள் பகிர்ந்த தகவல்கள் மற்றும் பொதுத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிடப்பட்ட முறைகளைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது சுகாதார நிபுணரை ஆலோசிப்பது நல்லது. தனிப்பட்ட உடல்நிலை, அலெர்ஜி, மருந்து பயன்படுத்தல் போன்றவை விளைவுகளை மாற்றக்கூடும்.

Read Next

முடி கொட்டுதா? மருத்துவர் சொல்வது இந்த 2 அயில்தான் – வீட்டிலேயே எளிதாக செய்யலாம்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 26, 2025 19:16 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content