$
Healthy Breakfast For Weight Loss: நம்மில் பலர் தொப்பையை குறைக்க படாத பாடு படுவோம். நம்மில் பலர் தொப்பையை குறைக்க ஜிம்மிற்கு செல்வோம், இன்னும் சிலர் டயட்யை பின்பற்றுவோம். ஆனால், எந்த தீர்வும் கிடைத்திருக்காது. குறிப்பிட்ட சில உணவுகள் நமது ஆரோக்கியத்திற்கு மட்டும் அல்ல உடல் எடையை குறைக்கவும் சிறந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?
அனைத்து சீசன்களிலும் எளிமையாக கிடைக்கும் வாழைப்பழம், உடல் எடையை குறைக்க உதவும் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. ஆனால், அதை சரியான முறையில் உட்கொண்டால் மட்டுமே நல்ல பலனை பெற முடியும். ஒரு வாழைப்பழத்தில் சுமார் 110 கலோரிகள் உள்ளது. இதில் 0 கிராம் புரதம், 3 கிராம் நார்ச்சத்து மற்றும் 28 கிராம் கார்போஹைட்ரேட் மற்றும் 0 கொழுப்பு உள்ளடக்கம் உள்ளது.
இந்த பதிவும் உதவலாம் : Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
இது தவிர, வைட்டமின் பி6, பொட்டாசியம், மெக்னீசியம், வைட்டமின் சி மற்றும் மாங்கனீஸ் போன்றவையும் இதில் நிறைந்துள்ளது. இது ஆண்டு முழுவதும் சந்தையில் கிடைக்கும். மக்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப வெவ்வேறு வழிகளில் அதை உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள். ஆனால், உடல் எடையை குறைக்க வாழைப்பழத்தை உணவில் சேர்ப்பது எப்படி என்று பலருக்கு குழப்பம் உள்ளது. எடை குறைப்புக்கு பெரிதும் உதவும் பானங்களை வாழைப்பழத்தை வைத்து எப்படி தயாரிப்பது என இங்கே பார்க்கலாம்.
எடை இழப்புக்கு உதவும் 5 எளிய வாழைப்பழ ரெசிபி

ஓட்ஸ் மற்றும் வாழைப்பழ கஞ்சி
இதற்கு இரவு தூங்கும் முன் 40 கிராம் ஓட்ஸை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும். காலையில், ஒரு கப் வேகவைத்த வெதுவெதுப்பான பால், சில கொட்டைகள், விதைகள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து 1-2 வாழைப்பழங்கள் மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேரத்து நன்றாக கலந்து சாப்பிடவும். இதை காலை உணவாக சாப்பிடலாம். இது புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த காலை உணவாகும், இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாக இருக்கவும், நீண்ட நேரம் பசி எடுக்காமலும் இருக்க உதவும்.
இந்த பதிவும் உதவலாம் : Banana In Monsoon: மழைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது நல்லதா? வாழைப்பழம் சாப்பிட எது சிறந்த சீசன்
வாழைப்பழம் மற்றும் பீனட் பட்டர் சாண்ட்விச்

இதற்கு 2 மீடியம் சைஸ் பிரவுன் பிரட் அல்லது சாதாரண பிரட்டை எடுத்துக் கொள்ள வேண்டும். இப்போது அதில், 1-2 ஸ்பூன் பீனட் பட்டர் தடவி, 1 வாழைப்பழத்தை துண்டுகளாக வெட்டி ரொட்டியின் ஒரு பக்கத்தில் வைக்கவும். பின்னர், மற்றொரு பிரட்டை மேலே வைத்தால் சாண்ட்விச் தயார்.
நீங்கள் விரும்பினால், அதனுடன் ஒரு கப் பால் அல்லது மூலிகை தேநீரையும் எடுத்துக் கொள்ளலாம். இந்த சாண்ட்விச் பொதுவாக சிறிய பசியை திருப்திப்படுத்த சிறந்தது. எனவே, காலை உணவுக்கும் மதிய உணவிற்கும் இடையில் அல்லது மாலை நேர சிற்றுண்டியாக இதை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Banana Peel Benefits: சரும பிரச்சனையை நீக்க வாழைப்பழத் தோல் உதவுமா?
வாழைப்பழ ஸ்மூத்தி

இதற்கு, முதலில் நீங்கள் ஒரு கிளாஸ் பால், 1-2 வாழைப்பழங்கள், சில பருப்புகள் மற்றும் உலர் பழங்கள் சேர்த்து அரை டீஸ்பூன் இலவங்கப்பட்டை பொடியை மிக்ஸி ஜாரில் அல்லது பிளெண்டரில் சேர்த்து மிருதுவாக அரைக்க வேண்டும்.
நீங்கள் விரும்பினால், அதில் 1 டீஸ்பூன் பீனட் பட்டரையும் சேர்க்கலாம். அதன் பிறகு ஒரு குவளையில் எடுத்து மேலே சிறிது விதைகளை சேர்த்து சாப்பிடவும். காலை அல்லது மாலையில் இதை உடற்பயிற்சிக்குப் பிறகு உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Banana Side Effects: காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
வாழைப்பழ மில்க் ஷேக்

இதற்கு 1 கப் பால், 1 வாழைப்பழம் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் தூள் ஆகியவற்றை ஒரு பிளெண்டரில் சேர்த்து கலக்க வேண்டும். நீங்கள் விரும்பினால், அதில் ஒரு ஸ்பூன் வெண்ணிலா ஐஸ்கிரீம் சேர்த்துக்கொள்ளலாம். பிரதான உணவுக்கு இடையில் அல்லது பயிற்சிக்குப் பிறகு நீங்கள் அதை உட்கொள்ளலாம்.
இந்த பதிவும் உதவலாம் : Banana On Empty Stomach: வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடலாமா? அதை எப்படி சாப்பிடலாம்?
வாழைப்பழ லட்டு

இதற்கு முதலில் பழுத்த வாழைப்பழங்களை எடுத்து மசித்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு அதில் கடலை மாவை சேர்க்கவும். பின்னர், அதில் தேங்காய் துருவல் மற்றும் ஊறவைத்த ஓட்ஸ் சேர்க்கவும். அதன் பிறகு அதில் சியா விதைகள், ஆளி விதைகள் மற்றும் கொட்டைகள் போன்ற சில விதைகளை சேர்க்கவும். இனிப்புக்காக 1-2 ஸ்பூன் தேன் சேர்த்து, கைகளின் உதவியுடன் அனைத்து பொருட்களையும் கலக்கவும். அதன் பிறகு சிறிய லட்டு உருண்டைகளாக உருட்டவும்.
Pic Courtesy: Unsplash