Banana Side Effects: காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

  • SHARE
  • FOLLOW
Banana Side Effects: காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?


Banana Side Effects: வாழைப்பழத்தில் பல ஆரோக்கிய நன்மைகள் நிறைந்துள்ளது. பெஸ்ட் பழங்களில் பிரதான ஒன்றாக வாழைப்பழத்தை குறிப்பிடலாம். அதிக விலை பழங்களுக்கு நடுவே ஆங்காங்கே தெருவோர கடைகளிலும் கைக்கு எட்டிய தூரத்திலும் இது கிடைப்பதால் பலரும் இதற்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை. வாழைப்பழத்தில் உடலுக்கு தேவையான ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளது.

வாழைப்பழத்தின் விளைவுகள்

வாழைப்பழத்தை சரியான நேரத்தில் சரியான அளவு எடுத்துக் கொண்டால் அதன் ஆரோக்கியத்தை முழுமையாக பெறலாம். இது தவறும் பட்சத்தில் அதன் விளைவுகளையும் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். குறிப்பாக வாழைப்பழத்தை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டால் பல சிக்கலை சந்திக்க நேரும்.

இதையும் படிங்க: மலச்சிக்கல் இத்தனை பாதிப்பை ஏற்படுத்துமா?

வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள்

வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. மேலும் இதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியுள்ளன. இவை நமது ஆரோக்கியத்திற்கு நல்லது. இது பசியைக் குறைக்கிறது. கொழுப்பையும் குறைக்கிறது. இதெல்லாம் உங்களுக்கு நடக்க வேண்டுமானால். இந்த பலன்களை எல்லாம் பெற வேண்டும் என்றால் வாழைப்பழத்தை சரியான நேரத்தில் சரியான முறையில் எடுக்க வேண்டும்.

வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது

வாழைப்பழம் நமக்கு உடனடி ஆற்றலைத் தருகிறது. அதனால் ஜிம்மிற்கு செல்பவர்கள், வாக்கிங் செல்பவர்கள் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுகிறார்கள். ஆனால் இது உண்மையல்ல. வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் உட்கொண்டால், உடல் நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

காலை உணவாக வாழைப்பழம் கூடாது

பலர் அலுவலகம் செல்லும் அவசரத்தில் காலையில் வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவார்கள். ஆற்றல் நிரம்பிய பழம் என்பதால், அதன் மூலம் நாள் முழுவதும் வேலை செய்யும் ஆற்றல் நமக்கு கிடைக்கும் என நம்புகிறார்கள். பொதுவாகவே வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவது என்பது சிக்கலை தான் சந்திக்க வைக்கும். அவை என்னென்ன என்று பார்க்கலாம்.

செரிமான பிரச்சனை

வாழைப்பழத்தில் பொட்டாசியம், நார்ச்சத்து மற்றும் மக்னீசியம் நிறைந்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பழம் அமிலத்தன்மை கொண்டது. வெறும் வயிற்றில் அமிலத்தன்மை கொண்ட உணவுகளை சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும் என கூறப்படுகிறது. எனவே வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடவே கூடாது.

இதய பிரச்சனை

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் அதிகம் உள்ளது. எனவே இவற்றை வெறும் வயிற்றில் உட்கொள்வதால் இரத்தத்தில் இந்த இரண்டு சத்துக்களும் அதிகரித்து இதயத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிடும் முன் கவனமாக சிந்தியுங்கள்.

சோர்வான உணர்வு

வாழைப்பழம் சாப்பிட்டால் நாள் முழுவதும் சக்தி கிடைக்கும். ஆனால் அது வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் அல்ல. ஏனெனில் வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை சாப்பிட்டால் அது உடனடி ஆற்றலைத் தரும். ஆனால் அது தற்காலிகமாக இருக்கும். அதனால் நீங்கள் விரைவில் சோர்வடைவீர்கள். இது சலிப்பளிக்கும். உடனே பசி எடுக்கவும் வாய்ப்புள்ளது. எனவே காலை உணவுடன் வாழைப்பழத்தை எடுத்துக் கொள்ளுங்கள். முழு உணவாக வேண்டாம்.

வயிறு சம்பந்தமான பிரச்சனை வரும்

வாழைப்பழத்தை அதிகம் சாப்பிட்டால் வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகளும் மலச்சிக்கலும் ஏற்பட வாய்ப்புள்ளது. வாழைப்பழத்தின் சில கலவைகள் ஒற்றைத் தலைவலியை ஏற்படுத்தும். சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழத்தை முடிந்தவரை தவிர்க்க வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் உள்ளவர்கள் வாழைப்பழத்தை சாப்பிடக் கூடாது.

இதையும் படிங்க: Tooth Decay: தீரா பல் வலியை தடுக்க உகந்த வைத்தியம்!

ஒவ்வொரு வகை வாழைப்பழமும் ஒவ்வொரு வகை ஆரோக்கியத்திற்கு நல்லது. எனவே அதை அறிந்து சாப்பிடுவது நல்லது. அதேபோல் எந்தவொரு உணவும் அளவுக்கு மீறினால் அது நஞ்சுதான் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதேபோல் ஏதேனும் தீவிரத்தை உணரும்பட்சத்தில் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.

image source: freepik

Read Next

Good Sleep: இரவில் நிம்மதியான தூக்கம் வேண்டுமா? அப்போ இத ஃபாலோ பண்ணுங்க

Disclaimer

குறிச்சொற்கள்