Can We Eat Banana In Rainy Season: அனைத்து சீசன்களிலும் கிடைக்கும் வாழைப்பழம் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், பல நோய்களுக்கான ஆபத்தை குறைக்கலாம் என ஆய்வுகள் கூறுகின்றனர். இதில், நார்ச்சத்து, புரதம், மாங்கனீசு, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகிய சத்துக்கள் அதிகமாக காணப்படுகின்றன. இது தவிர, வாழைப்பழத்தில் வைட்டமின் C மற்றும் வைட்டமின் B6 ஆகியவற்றின் சிறந்த மூலம்.
இதில், உள்ள கார்போஹைட்ரேட் உடலுக்கு ஆற்றலை வழங்க உதவுகிறது. மேலு இவை எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. இதை சாப்பிடுவதால் அஜீரணம், மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளும் நீங்கும். வாழைப்பழம் குளிர்ச்சியான பணப்பை கொண்டுள்ளது. எனவே, இதை சாப்பிடுவது உடலுக்கு குளிர்ச்சியைத் தருகிறது.
இந்த பதிவும் உதவலாம் : Banana Side Effects: காலை வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட்டால் என்ன நடக்கும்?
வாழைப்பழத்தை எந்த நேரத்திலும் உட்கொள்ளலாம். ஆனால், மழைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா? கூடாதா? என்ற கேள்வி அடிக்கடி நம்மில் பலருக்கு சந்தேகம். இது குறித்து, ஆரோக்யா டயட் மற்றும் நியூட்ரிஷன் கிளினிக்கின் டயட்டீஷியன் டாக்டர் சுகீதா முத்ரேஜாவிடம் பேசினோம். அவர் கூறிய விஷயங்களை இங்கே பார்க்கலாம்.
மழை காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா?

வாழைப்பழம் சாப்பிடுவதால் உடலுக்கு தேவையான ஆற்றல் கிடைக்கும். இதில், உள்ள கார்போஹைட்ரேட் மற்றும் பொட்டாசியம் உடலின் பலவீனத்தை நீக்குகிறது. மழைக்காலத்தில் பித்த தோஷம் அதிகரிக்கும். எனவே, வாழைப்பழத்தை பருவமழை காலத்தில் சாப்பிடுவது மிகவும் நல்லது. தினமும் வாழைப்பழம் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.
இந்த பதிவும் உதவலாம் : Benefits of Banana Milkshake: அருமையான நன்மைகளைத் தரும் வாழைப்பழ மில்க் ஷேக்!
அந்தவகையில், வாழைப்பழத்தை மழைக்காலங்களில் தினமும் சாப்பிட்டு வந்தால், செரிமான பிரச்சனைகள் நீங்கும். வாழைப்பழம் சாப்பிடுவதால் அஜீரணம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது.
மழைக்காலத்தில் மக்கள் பல நேரங்களில் வயிற்று வலியை சந்திக்க நேரிடும். இந்நிலையில், வாழைப்பழம் சாப்பிடுவது நன்மை பயக்கும். வாழைப்பழம் சாப்பிடுவது வயிற்று வலி மற்றும் பிடிப்புகளுக்கு நிவாரணம் அளிக்கிறது.
நீங்கள் பலவீனமாகவோ அல்லது சோர்வாகவோ உணர்ந்தாலோ, வாழைப்பழத்தை உட்கொள்வது நன்மை பயக்கும். வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் பலவீனம் நீங்கும்.
இந்த பதிவும் உதவலாம் : Banana Peel Benefits: சரும பிரச்சனையை நீக்க வாழைப்பழத் தோல் உதவுமா?
வாழைப்பழம் சாப்பிட எந்த பருவம் நல்லது?

வாழைப்பழத்தை அனைத்து பருவத்திலும் உட்கொள்ளலாம். ஆனால், கோடை மற்றும் மழைக்காலங்களில் வாழைப்பழங்களை உட்கொள்வது அதிக நன்மையை தரும் என நிபுணர்கள் கூறுகின்றனர். வாழைப்பழத்தின் தன்மை குளிர்ச்சியாக இருப்பதால், குளிர்காலத்தில் இதை சாப்பிடுவதால் சளி மற்றும் காய்ச்சல் ஏற்படலாம்.
Pic Courtesy: Freepik