How Many Pista To Eat Per Day: ட்ரை ஃப்ரூட்ஸ் உடலில் ஆற்றலைப் பராமரிக்க மிகவும் நல்லது. இதில், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். அந்த வரிசையில், பிஸ்தா ஆரோக்கியத்திற்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. பிஸ்தா பருப்பை தினமும் காலையில் எழுந்தவுடன் சாப்பிட்டு வந்தால், உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். ஆனால், ஒரு நாளைக்கு எவ்வளவு பிஸ்தா சாப்பிட வேண்டும் என்று தெரியுமா?
அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பார்கள். அதே போலத்தான், பிஸ்தா பருப்பை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால் ஆரோக்கியத்திற்கும் தீங்கு விளைவிக்கும். இது குறித்த மேலும் தகவலுக்கு பூனம் டயட் மற்றும் வெல்னஸ் கிளினிக் மற்றும் அகாடமியின் நியூட்ரிஃபை இயக்குனர் பூனம் துனேஜாவிடம் பேசினோம். அவர் கூறியது இங்கே_
இந்த பதிவும் உதவலாம் : காய்கறிகளை சமைக்காமல் சாப்பிடுவதால் கிடைக்கும் 5 ஆரோக்கிய நன்மைகள்!!!
அதிக அளவு ஊட்டச்சத்துக்கள்

ட்ரை ஃப்ரூட்ஸ் வகைகளில் மிகவும் பிரபலமான பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6, வைட்டமின் சி, புரதம், நார்ச்சத்து, துத்தநாகம், தாமிரம், மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளன. எனவே, இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.
ஒரு நாளைக்கு எவ்வளவு பிஸ்தா சாப்பிட வேண்டும்?

நிபுணர்களின் கூற்றுப்படி, ஒரு நாளைக்கு 15 முதல் 20 கிராம் பிஸ்தாவை உட்கொள்ளலாம். ஆனால், பிஸ்தா இயற்கையில் சூடானது. எனவே, இவற்றை கொஞ்சமாக உட்கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக கோடை காலத்தில் பிஸ்தாவை குறைவாக உட்கொள்ளுங்கள். ஏனெனில் அதன் வெப்ப தன்மை காரணமாக அது செரிமானத்திற்கு தீங்கு விளைவிக்கும்.
இந்த பதிவும் உதவலாம் : குயினோவா ஏன் சாப்பிட வேண்டும்?
பிஸ்தாவை எப்படி உட்கொள்ள வேண்டும்?

பிஸ்தாவை இரவு முழுவதும் தண்ணீரில் ஊறவைத்து, காலையில் தண்ணீர் அல்லது பாலுடன் சேர்த்து சாப்பிடலாம். இதன் மூலம் பிஸ்தாவில் உள்ள தீமைகள் நீங்கி, அதனை உட்கொள்வதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. இது தவிர, ஹல்வா, கீர் அல்லது மில்க் ஷேக் செய்ய பிஸ்தாவைப் பயன்படுத்தலாம்.
அதிகப்படியான பிஸ்தா சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள் என்ன?

செரிமான பிரச்சனைகள்
தேவைக்கு அதிகமாக பிஸ்தா சாப்பிடுவது செரிமான பிரச்சனைகளை உண்டாக்கும். பிஸ்தாவில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால், அதிகப்படியான நுகர்வு வயிற்றுப் பாதிப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாக வயிற்று வலி, மலச்சிக்கல், அமிலத்தன்மை போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.
இந்த பதிவும் உதவலாம் : வெறும் வயிற்றில் வெண்டைக்காய் தண்ணீரை குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
ஒவ்வாமை பிரச்சனை

பிஸ்தாவை அதிகமாக உட்கொள்வதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். உண்மையில், பிஸ்தாவின் விளைவு மிகவும் சூடாக இருக்கிறது, இதன் காரணமாக அதை அதிக அளவு உட்கொள்வதன் மூலம் உடலில் ஒரு ஒவ்வாமை எதிர்வினை காணப்படுகிறது.
நீரிழிவு நோயாளிகளுக்கு தீங்கு
நீங்கள் நீரிழிவு நோயாளியாக இருந்தா, பிஸ்தா சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். அதிகப்படியான நுகர்வு இரத்த சர்க்கரையை அதிகரிக்கும். மேலும், அதை தேவையான அளவில் மட்டுமே உட்கொள்வது நல்லது.
Pic Courtesy: Freepik