Fri Sep 11, 2026 | 10:48 PM IST

Doctor Verified

சைனஸ் தொற்றுக்கு கடுகு எண்ணெய் எவ்வாறு உதவுகிறது? அதைப் பயன்படுத்துவது எப்படி?

குளிர்காலத்தில் சைனஸ் தொற்றுக்களால் பெரும்பாலானோர் அவதிறுகின்றனர். இந்நிலையில், கடுகு எண்ணெய் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதில் கடுகு எண்ணெய் சைனஸ் பிரச்சனைக்கு எவ்வாறு நன்மை பயக்கும் என்பது குறித்து ஆயுர்வேத மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

குளிர்காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியான காலமாக இருந்தாலும், பல்வேறு நோய்த்தொற்றுக்கள் ஏற்படும் அபாயத்தையும் அதிகரிக்கலாம். ஏனெனில், குளிர்ந்த காலநிலையில் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். குறிப்பாக இந்த காலகட்டத்தில் குழந்தைகள், பெரியவர்கள் போன்றோரின் உடலில் நோயெதிர்ப்புச் சக்தி குறைவாக இருக்கும். எனவே, இவர்களே பெரும்பாலும் பாதிக்கப்படக்கூடியவர்களாக இருப்பர். இந்நிலையில், குளிர்காலத்தில் அனைவரும் பாதிக்கப்படும் பொதுவான நோய்களில் ஒன்றாக சைனஸ் தொற்றுக்கள் அமைகிறது.

பொதுவாக, சைனஸ் தொற்றுகள் பெரும்பாலும் மூக்கு சைனஸில் வீக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் தொடர்ந்து மூக்கு ஒழுகுதல், தலைவலி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படக்கூடும். மேலும், சைனஸ் தொற்றுகள் பெரும்பாலும் குளிர் காற்றினால் தூண்டப்பட்டு, இந்த பருவத்தில் நீண்ட காலம் நீடிக்கும். இதுபோன்ற சூழ்நிலைகளில், மருந்து மற்றும் கடுகு எண்ணெய் போன்ற வீட்டு வைத்தியங்களின் கலவை பெரும்பாலும் உதவுவதாகக் கூறப்படுகிறது. ஏனெனில், சைனஸ் தொற்றுகளுக்கு கடுகு எண்ணெயைப் பயன்படுத்துபவர்கள், இது அறிகுறிகளைப் போக்க உதவும் என்று நம்புகின்றனர்.

இதில் சைனஸ் தொற்றுக்கு கடுகு எண்ணெய் உண்மையிலேயே பயனுள்ளதா, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்த தகவல்களை ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையைச் சேர்ந்த ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே சர்மா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: சைனஸ் பிரச்னை பாடாபடுத்துதா.? இத சிம்பிளா ஹாண்டில் பண்ணலாம்.. வீட்டுல இத மட்டும் பண்ணுங்க..

சைனஸ் தொற்றுக்கு கடுகு எண்ணெய் நல்லதா?

ஆயுர்வேத மருத்துவர் ஷ்ரே சர்மா அவர்களின் கூற்றுப்படி, சைனஸ் தொற்று ஏற்பட்டால் மக்கள் பல ஆண்டுகளாக கடுகு எண்ணெயைப் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் இது மிகவும் பயனுள்ள தேர்வாகக் கருதப்படுகிறது. இது மூக்கின் வறட்சியைக் குறைப்பதன் மூலம் சைனஸ் சவ்வுகளை ஆற்ற உதவுகிறது.

கடுகு எண்ணெயைப் பயன்படுத்துவது நீண்டகால மூக்கு நீரேற்றியாக செயல்படுகிறது. மேலும் இது சைனஸ் தொற்று அறிகுறிகளைக் குறைக்க உதவுகிறது. எனினும், பிரச்சினை கடுமையானதாக இருந்தால், இந்த ஒரு எண்ணெய் போதுமானதாக இருக்காது. நீங்கள் மற்றொரு எண்ணெயைப் பயன்படுத்தக்கூடியதாக இருக்கலாம்.

சைனஸ் தொற்றுக்கு கடுகு எண்ணெயின் நன்மைகள்

பாரம்பரிய மருத்துவத்தில் கடுகு எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரிசையில், சைனஸ் நெரிசலை நீக்குவதும் அடங்கும். மேலும், கடுகு எண்ணெயில் மூக்கு ஒழுகும் தன்மை உள்ளது. கடுகு எண்ணெயின் வெப்பமூட்டும் பண்புகள் சளியை தளர்த்தி அழிக்க உதவுகிறது.

மேலும் இது மூக்கு ஒழுகும் தன்மையிலிருந்து நிவாரணம் அளிக்க உதவுகிறது. கடுகு எண்ணெயில் சைனஸில் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும் சேர்மங்கள் உள்ளன. மேலும் இது தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. எனவே, சைனஸ் தொற்றுகளின் அறிகுறிகளைக் குறைப்பதில் இது உதவியாக இருக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Runny Nose : மூக்குல சளி நிக்காம ஒழுகுதா? - இந்த வீட்டு வைத்தியங்கள ட்ரை பண்ணுங்க, பட்டுன்னு நிக்கும்...!

சைனஸ் தொற்றுக்கு கடுகு எண்ணெயை எவ்வாறு பயன்படுத்துவது

  • சைனஸ் தொற்றுக்கு கடுகு எண்ணெயை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். ஆனால் மிகவும் பயனுள்ள வழியாக, கடுகு எண்ணெயை ஒரு கிண்ணம் வெதுவெதுப்பான நீரில் சேர்ப்பதாகும்.
  • மேலும், சில துளிகள் கடுகு எண்ணெயைச் சேர்த்து, தலையை ஒரு துண்டுடன் மூடி, நீராவியை உள்ளிழுக்க வேண்டும்.
  • எனினும், தேங்காய் அல்லது ஆலிவ் எண்ணெய் போன்ற மற்றொரு எண்ணெயுடன் கடுகு எண்ணெயைக் கலந்து, சைனஸ் பகுதி, நெற்றி மற்றும் கழுத்தில் மெதுவாக மசாஜ் செய்யலாம்.
  • மேலும் தூங்குவதற்கு முன் மூக்கில் சில துளிகள் கடுகு எண்ணெயையும் ஊற்றலாம்.

கவனிக்க வேண்டியவை

கடுகு எண்ணெயை சருமத்தில் தடவுவதற்கு முன்பு அல்லது உங்கள் மூக்கில் ஊற்றுவதற்கு முன்பு எப்போதும் ஒரு பேட்ச் டெஸ்ட் செய்வது அவசியமாகும். இதை மற்ற எண்ணெய்களுடன் கலந்தும் பயன்படுத்தலாம். இது தவிர, சளியை மெல்லியதாக மாற்ற நிறைய திரவங்களை குடிக்கலாம். மேலும், ஈரப்பதமூட்டியைப் பயன்படுத்தலாம். ஏனெனில் இது காற்றில் ஈரப்பதத்தை சேர்க்க உதவுகிறது, இது மூக்கு நெரிசலைப் போக்க உதவுகிறது. மேலும் தொற்று பரவுவதைத் தடுக்க கைகளை அடிக்கடி கழுவ வேண்டும். கடுமையான சைனஸ் தொற்று இருந்தால், சரியான சிகிச்சைக்கு ஒரு நிபுணரை அணுகுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: சைனஸ் பிரச்சனை உள்ளவர்கள் தயிர் சாப்பிடுவது நல்லதா? நிபுணர் தரும் விளக்கம்

Image Source: Freepik

Read Next

ஆஸ்துமா பிரச்சனையா? துளசி ஒன்னு போதும்.. எப்படி யூஸ் பண்ணனும்னு தெரிஞ்சிக்கோங்க

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 23, 2025 13:03 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content