நீங்கள் எப்போதும் சோர்வாக உணர்கிறீர்களா? தோல் மங்கல், நகங்கள் உடைதல், அல்லது மூளை மந்தமாக இயங்குவது போன்றவை இருக்கிறதா? இவை எல்லாம் உங்கள் உடலில் முக்கியமான வைட்டமின் மற்றும் கனிமச்சத்துகள் குறைவதை சுட்டும் எச்சரிக்கைகள் ஆகும்.
AIIMS, Harvard, Stanford பல்கலைக்கழகங்களில் பயிற்சி பெற்ற காஸ்ட்ரோஎன்டரோலஜிஸ்ட் டாக்டர் சௌரப் சேதி, தன் சமீபத்திய பதிவில் “உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும் போது உடல் சில நுண்ணிய சிக்னல்கள் தரும்; அவற்றை புறக்கணிக்கக்கூடாது” என கூறியுள்ளார். அவர் குறிப்பிட்ட 8 முக்கிய அறிகுறிகள் பின்வருமாறு.
ஊட்டச்சத்து குறைபாடு அறிகுறிகள்
எப்போதும் சோர்வாக இருப்பது
போதுமான தூக்கம் எடுத்தாலும் தொடர்ந்து சோர்வாக உணரப்படுகிறதா? இது இரும்புச்சத்து (Iron), வைட்டமின் B12 அல்லது மக்னீசியம் குறைவின் விளைவாக இருக்கலாம். “இந்தச் சத்துக்கள் உடலுக்கு ஆற்றல் வழங்கி, ஆக்சிஜன் சுழற்சியை மேம்படுத்தும். இவை குறைந்தால் சோர்வு நீங்காது,” என டாக்டர் சேதி கூறுகிறார்.
முடி உதிர்வு மற்றும் நகங்கள் உடைதல்
ஜிங்க், பயோடின், புரதம், இரும்புச்சத்து குறைவினால் முடி மற்றும் நகங்கள் பலவீனமாகின்றன. “உடலில் சத்துகள் குறைந்தால், அது முதலில் முக்கிய உறுப்புகளுக்கே ஊட்டச்சத்து அனுப்பும்; முடி மற்றும் நகங்கள் புறக்கணிக்கப்படும்,” என்று அவர் விளக்குகிறார்.
எப்போதும் குளிர் உணர்வு
அனைவரும் சாதாரணமாக இருந்தாலும் நீங்கள் குளிராக உணர்கிறீர்களா? அது அயோடைன் அல்லது இரும்புச்சத்து குறைவின் அறிகுறி. இவை தைராய்டு செயல்பாட்டுக்கும் இரத்தத்தில் ஆக்சிஜன் சுழற்சிக்கும் முக்கியமானவை. “கைகளும் கால்களும் எப்போதும் குளிராக இருக்கும் போது அதை புறக்கணிக்க வேண்டாம்,” என அவர் எச்சரிக்கிறார்.
தசை நரம்புகளில் பிடிப்பு அல்லது துடிப்பு
மக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் குறைவால் தசை பிடிப்பு ஏற்படும். “பிடிப்பு வந்தாலே நீர்ச்சத்து குறைவு என்று மட்டும் நினைக்க வேண்டாம். உங்கள் குடல் ஊட்டச்சத்துகளை சரியாக உறிஞ்சவில்லையோ எனவும் சிந்திக்க வேண்டும்,” என்று அவர் கூறுகிறார்.
மூளை மந்தமாக இயங்குதல் அல்லது கவனம் குறைதல்
மூளை செயல்பாட்டுக்கு ஓமேகா-3, வைட்டமின் D, B12, கோலின் போன்றவை அவசியம். “இந்த சத்துக்கள் குறைந்தால் நினைவாற்றல், கவனம், மன தெளிவு அனைத்தும் பாதிக்கப்படும்,” என டாக்டர் சேதி கூறுகிறார்.
ஈறுகள் இரத்தம் சிந்துதல்
இது வைட்டமின் C அல்லது வைட்டமின் K குறைபாட்டின் அறிகுறி. வைட்டமின் C இரத்த நாளங்களை வலுப்படுத்தும்; வைட்டமின் K இரத்த உறைவு செயல்பாட்டுக்கு உதவும்.
வாயின் மூலைகள் பிளவுதல்
வாயின் மூலையில் பிளவுகள் ஏற்படுவது வைட்டமின் B2, B6 அல்லது இரும்புச்சத்து குறைவின் அடையாளமாகும். “இது மீண்டும் மீண்டும் ஏற்படுகிறதா என்றால் ரத்தச் சோதனை அவசியம்,” என மருத்துவர் கூறுகிறார்.
உணவு ஆசை குறைதல்
பனி, மண், சுண்ணாம்பு போன்றவற்றை தின்னவேண்டும் என்ற ஆசை இருந்தால் அது இரும்பு அல்லது ஜிங்க் குறைவால் ஏற்படும். உணவு ஆசை குறைவது வைட்டமின் B12 குறைபாடு அல்லது குடல் செயலிழப்பு காரணமாக இருக்கலாம்.
இறுதியாக..
உடலின் ஒவ்வொரு குறைபாடும் ஒரு எச்சரிக்கை மணி. சீரான உணவுமுறை, போதுமான நீர்ச்சத்து, பழம், காய்கறி, தானியங்கள் ஆகியவற்றை அடிக்கடி எடுத்துக்கொள்வது ஊட்டச்சத்து குறைபாட்டைத் தடுக்க உதவும். உடல் சொல்லும் ஒவ்வொரு சிக்னலையும் புறக்கணிக்காமல் கவனித்து, தேவையான சத்துகளை உணவின் மூலமாக பெறுவது தான் ஆரோக்கிய வாழ்க்கையின் ரகசியம்.
Disclaimer: இந்த கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே. எந்த வகை சோர்வோ அல்லது உடல் குறைபாடோ நீடித்தால், மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது அவசியம். தானாக மருந்து அல்லது சப்பிளிமெண்ட் எடுத்துக்கொள்ள வேண்டாம்.
தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
-
Current Version
Nov 11, 2025 17:39 IST
Published By : Ishvarya Gurumurthy