
இன்றைய வேகமான வாழ்க்கை முறையால் புற்றுநோய் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதில் பெருங்குடல் புற்றுநோய் (Colon Cancer) மிகவும் வேகமாக உயரும் வகையானது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஆனால் நல்ல செய்தி என்னவெனில், சில உணவுகள் இந்த ஆபத்திலிருந்து நம்மைக் காக்கக்கூடியவை என மருத்துவர் சௌரப் சேதி (Gastroenterologist) தெரிவித்துள்ளார். அவர் சமீபத்தில் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள தகவலின்படி, கீழே உள்ள 10 உணவுகள் பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதோடு மட்டுமின்றி குடல் நலத்தையும் உறுதியாக பாதுகாக்கின்றன.
பெருங்குடல் புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் 10 உணவுகள்
1. பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள்
பீன்ஸ் (Beans) மற்றும் பருப்பு வகைகள் (Lentils) ஆகியவை நார்ச்சத்து மற்றும் தாவர புரதம் நிறைந்தவை. இவை குடலின் இயக்கத்தை சீராக்கி, தீய கொழுப்புகளை நீக்க உதவுகின்றன.
2. ப்ரோக்கோலி மற்றும் கிரூசிஃபெரஸ் காய்கறிகள்
ப்ரோக்கோலி, காலிஃபிளவர், முட்டைகோசு போன்ற கிரூசிஃபெரஸ் காய்கறிகளில் Sulforaphane எனும் புற்றுநோய் எதிர்ப்பு மூலப்பொருள் உள்ளது. இது குடலில் புற்றுநோய் செல்கள் உருவாகுவதை தடுக்கிறது.
3. பெர்ரி
ஸ்ட்ராபெரி, புளூபெரி, ராஸ்பெரி போன்ற பேரிகனிகளில் ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளன. இவை செல்களில் உள்ள அழற்சியைக் குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.
4. ஓட்ஸ், பார்லி, கினோவா
இந்த தானியங்கள் நார்ச்சத்து மிகுந்தவை. குடல் இயக்கத்தை சீராக வைத்துக்கொண்டு, நச்சு பொருட்கள் உடலில் தேங்காமல் தடுக்கின்றன.
5. பச்சைக் கீரை வகைகள்
முருங்கைக்கீரை, பசலைக்கீரை, முளைக்கீரை போன்ற பச்சைக் கீரைகள் இரத்த சுத்திகரிப்பு மற்றும் குடல் சுத்தம் செய்ய சிறந்தவை. இவை உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை இயற்கையாக அதிகரிக்கின்றன.
6. பூண்டு
பூண்டு ஒரு இயற்கை ஆன்டி-மைக்ரோபியல் உணவாகும். இதில் உள்ள allicin எனும் மூலப்பொருள் புற்றுநோய் செல்களை வளராமல் தடுக்கிறது.
7. வெங்காயம்
வெங்காயத்தில் உள்ள quercetin எனும் ஆன்டி-ஆக்ஸிடென்ட் குடலில் புற்றுநோய் உருவாகும் அபாயத்தை குறைக்க உதவுகிறது. தினசரி உணவில் வெங்காயத்தை சேர்த்துக்கொள்ளலாம்.
8. தக்காளி
தக்காளியில் உள்ள lycopene புற்றுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. தக்காளியை சமைத்து சாப்பிடுவது குடல் நலத்திற்கு மிக சிறந்தது.
9. தயிர் மற்றும் புளித்த உணவுகள்
தயிர், பனீர், கிம்சி, கம்புசா போன்ற புளித்த உணவுகளில் probiotics நிறைந்துள்ளன. இவை குடலில் நன்மை தரும் பாக்டீரியாவை அதிகரித்து செரிமானத்தை மேம்படுத்துகின்றன.
10. வறுத்த பருப்பு, பாதாம், சியா விதைகள்
பாதாம், வேர்க்கடலை, சியா விதைகள் போன்றவை குடல் இயக்கத்தை சீராக வைத்துக்கொண்டு, புற்றுநோய் உருவாவதை தடுக்க உதவுகின்றன.
View this post on Instagram
இறுதியாக..
பெருங்குடல் புற்றுநோயைத் தடுக்க உணவின் பங்கு மிக முக்கியமானது. நம்முடைய தினசரி உணவில் மேற்கண்ட 10 உணவுகளையும் சேர்த்துக்கொண்டால், குடல் ஆரோக்கியம் மேம்பட்டு, புற்றுநோய் அபாயம் குறையும்.
Disclaimer: இந்தக் கட்டுரை மருத்துவ நிபுணர்களின் பொதுப் பரிந்துரைகளின் அடிப்படையில் எழுதப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆலோசனைகளை பின்பற்றுவதற்கு முன், உங்கள் மருத்துவரை அணுகுவது சிறந்தது.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 30, 2025 19:28 IST
Published By : Ishvarya Gurumurthy