Garlic Tamarind Thokku: வெறும் ஒரு கைப்புடி பூண்டும் புளியும் இருந்தா போதும்… சுவையான பூண்டு தொக்கு செய்யலாம்!!

  • SHARE
  • FOLLOW
Garlic Tamarind Thokku: வெறும் ஒரு கைப்புடி பூண்டும் புளியும் இருந்தா போதும்… சுவையான பூண்டு தொக்கு செய்யலாம்!!


வெறும் ஒரு கைப்பிடி பூண்டும் நெல்லிக்காய் அளவு புளி இருந்தால் போதும் ஒரு அட்டகாசமான பூண்டு புளி தொக்கு செய்யலாம். இது இட்லி, தோசைக்கு மட்டும் அல்ல, சப்பாத்தி, பூரிக்கும் அட்டகாசமாக இருக்கும். வாருங்கள், பூண்டு புளி தொக்கு எப்படி செய்வது என பார்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம் : Monsoon Diet: மழைக்காலத்தில் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள் இங்கே.

தேவையான பொருட்கள்:

பூண்டு - 1 கப்.
நல்லெண்ணெய் - 4 ஸ்பூன்.
வர மிளகாய் - 8.
வெந்தயம் - ½ ஸ்பூன்.
சீரகம் - ½ ஸ்பூன்.
புளி - பெரிய நெல்லிக்காய் அளவு.
உப்பு - தேவையான அளவு.
நாட்டுச்சர்க்கரை - ¼ ஸ்பூன்.

பூண்டு புளி தொக்கு செய்முறை:

  • கடாயை அடுப்பில் வைத்து சூடாக்கவும். பின்னர், அதில் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும், பூண்டை சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
  • இதை தொடர்ந்து, பின்னர் வெந்தயம், வரமிளகாய், சீரகம் சேர்த்து எதையும் கறுக்கிவிடாமல் அடுப்பை குறைவான தீயில் வைத்து எண்ணெயிலே அவற்றையும் சேர்த்து அனைத்து பொருட்களையும் ஒன்றாக வறுத்து எடுக்கவும்.
  • பின் இந்த கலவையை ஆறவைக்கவும். அதனுடன், புளி, உப்பு, நாட்டுச்சர்க்கரை மற்றும் வறுக்கப்பயன்படுத்திய எண்ணெயில் சிறிது சேர்த்து மிக்ஸிஜாரில் போட்டுஅரைக்கவும்.

இந்த பதிவும் உதவலாம் : Almonds Side Effects: அடிக்கடி பாதாம் சாப்பிடும் பழக்கம் இருக்கா? இதன் தீமைகள் இங்கே!!

  • எண்ணெயில் வறுக்கும்போது, அடுப்பை எப்போதும் குறைவான தீயில் வைத்திருக்க வேண்டும். கருகிவிட்டால் சுவை நன்றாகவே இருக்காது. எனவே, வறுக்கும்போதும் கவனம் தேவை.
  • தேவைப்பட்டால் கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெய் சூடாக்கி, அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து துவையலில் சேர்த்தால், சூப்பர் சுவையில் பூண்டு தொக்கு தயார். தாளிக்காமலும் அப்படியே சாப்பிடலாம்.
  • இதை சூடான சாதத்தில் நல்லெண்ணெயுடன் சேர்த்து சாப்பிட சுவை அள்ளும்.

இந்த பதிவும் உதவலாம் : Benefits of Nithya Kalyani: அதிக கொலஸ்ட்ரால் பிரச்சினையால் அவதியா? நித்திய கல்யாணி பூவை இப்படி சாப்பிடுங்க!!

புளி சாப்பிடுவதன் ஆரோக்கிய நன்மைகள்

வயிறுக்கு நல்லது

புளி தண்ணீரில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது பெண்களுக்கு ஏற்படும் வாயு, வாய்வு மற்றும் அஜீரணம் போன்ற பிற பிரச்சனைகளை குணப்படுத்த உதவுகிறது.

ஆரோக்கியமான தோல்

புளியில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது சருமத்தை மேம்படுத்துகிறது. இந்த தண்ணீரை உட்கொள்வதால் முகப்பரு மற்றும் நிறமி போன்ற பிரச்சனைகள் நீங்கும்.

நீரிழிவு நோய்

புளி தண்ணீர் குடிப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும். குறைந்த கிளைசெமிக் தவிர, இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது இன்சுலின் மற்றும் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்கும்.

இந்த பதிவும் உதவலாம் : Coffee Before Workout: இவங்க மறந்தும் உடற்பயிற்சிக்கு முன் காபி குடிக்கக் கூடாது!

கருவுறுதலை மேம்படுத்தும்

மலட்டுத்தன்மை ஏற்பட்டால் பெண்கள் புளி நீர் அருந்தலாம். கருவுறுதலை அதிகரிப்பதில் புளி மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது.

ஹார்மோன் சமநிலை

பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் சமநிலையின்மை ஏற்படலாம். இதில் உள்ள ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை அதிகரிப்பதோடு, ஹார்மோன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது.

எடை குறைப்பு

புளியில் உள்ள ஹைட்ராக்ஸிசிட்ரிக் அமிலம் (HCA) உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது. இதனால், உடல் எடை கணிசமாக நிர்ணயிக்கப்படும்.

இந்த பதிவும் உதவலாம் : Guava Juice Benefits: கொய்யா ஜூஸ்.. கொட்டிகிடக்கும் நன்மைகள் இதோ..

இரத்த அழுத்தம்

புளியில் பொட்டாசியம் அதிகம், சோடியம் குறைவு. இது ஒரு சிறந்த வாசோடைலேட்டராக இருப்பதால், பொட்டாசியம் இரத்த நாளங்கள் ஓய்வெடுக்கவும், சரியான இரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகிறது.

Pic Courtesy: Freepik

Read Next

உணவு உண்ட பிறகு இஞ்சி தண்ணீரை ஏன் குடிக்கணும் தெரியுமா?

Disclaimer