Fri Sep 11, 2026 | 11:12 PM IST

Expert

ஃபேஷியல் செய்தாலும் முகம் மந்தமா இருக்க என்ன காரணம் தெரியுமா? நிபுணர் தரும் டிப்ஸ் இதோ

முகத்திற்கு ஃபேஷியல் செய்வதன் மூலம் முகத்தைப் பளபளப்பாக மாற்றலாம் என பலரும் நினைக்கின்றனர். எனினும் ஃபேஷியல் செய்த பிறகும் சிலர் மந்தமான சருமத்தையே பெறுகின்றனர். இதில் சருமம் மந்தமாவதற்கான காரணங்கள் மற்றும் அதை எவ்வாறு சரி செய்வது என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் இருக்க யார் தான் விரும்ப மாட்டார்கள். ஆனால், இன்றைய காலகட்டத்தில் ஆரோக்கியமற்ற உணவுமுறை, மோசமான வாழ்க்கை முறை காரணமாக பலரும் சரும பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். அதன் படி, சருமத்தில் எரிச்சல், அரிப்பு, வறட்சியான சருமம் மற்றும் இன்னும் பிற பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இந்நிலையில் சருமத்தை பொலிவாக்க பார்லருக்குச் சென்று ஃபேஷியல் செய்வர். ஆனால், ஃபேஷியல் செய்த பிறகும் சிலருக்கு சருமம் மந்தமாகிருப்பதை உணர்வர்.

சருமத்தை பளபளப்பாக ஃபேஷியல் மட்டும் போதும் என சிலர் நினைக்கின்றனர். ஆனால், இது உண்மையில் சருமத்திற்கு தற்காலிக பளபளப்பையேத் தரக்கூடும். ஆனால், உண்மையாக சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க சில இயற்கையான வீட்டு வைத்தியங்களைக் கையாளலாம். முக்கியமாக, சருமத்தை உள்ளிருந்து ஆழமாக பாதுகாப்பது அவசியமாகக் கருதப்படுகிறது. அதாவது உண்மையான சரும ஆரோக்கியம் உள்ளிருந்து வெளியே கட்டமைக்கப்படுகிறது.

இதில் சருமத்தை உள்ளிருந்து பாதுகாப்பதற்கு என்ன முக்கியம் என்பது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

சரும பராமரிப்பு போலவே ஊட்டச்சத்துக்கள் ஏன் முக்கியம்?

ஃபேஷியல்கள் தற்காலிக பளபளப்பைத் தருவதாக இருந்தாலும், உண்மையான சரும ஆரோக்கியம் உடலின் உள்ளிருந்து கட்டமைக்கப்படுவதாகும்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க ஸ்கின் கேர் வழக்கத்தில் இருக்க வேண்டிய மூன்று எளிய பராமரிப்பு முறைகள்..

மேற்பூச்சு சரிசெய்தல் vs. ஊட்டச்சத்து குறைபாடு

“மேற்பூச்சு செய்வது சருமத்தை அமைப்பை மென்மையாக்குகிறது. ஆனால் வைட்டமின்கள் A, C, E, துத்தநாகம் அல்லது ஒமேகா-3 குறைவாக இருந்தால், உங்கள் சருமத்தில் கொலாஜன் பழுது, பளபளப்பு மற்றும் செல்லுலார் உற்பத்தி ஆகியவற்றிற்குத் தேவையான மூலப்பொருட்கள் இல்லை.

சரும ஆரோக்கியத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ போன்றவை முக்கிய பங்கு வகிக்கிறது. வைட்டமின் ஏ ஆனது செல் புதுப்பிப்பைத் தூண்ட உதவுகிறது. மேலும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும், வயதான அறிகுறிகளைக் குறைக்கவும் உதவுகிறது. வைட்டமின் சி கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் ஈ, சருமத்தை ஈரப்பதமாக்கி, ஆக்ஸிஜனேற்ற சேதத்திலிருந்து பாதுகாக்கிறது.

புரதம் = தோல் அமைப்பு

“தோல் புரதத்தால் ஆனதாகும். கொலாஜன், எலாஸ்டின், கெரட்டின். போதுமான முழுமையான புரதங்கள் (பருப்பு + அரிசி, முட்டை, மீன், பால் பொருட்கள்) இல்லாமல், தோல் புதுப்பித்தல் குறைகிறது. இது மந்தநிலைக்கு வழிவகுக்கிறது” என நிபுணர் கூறுகிறார்.

கொலாஜன், எலாஸ்டின், கெரட்டின் போன்ற புரதங்கள் சருமத்திற்கு உறுதித்தன்மை மற்றும் அளவைக் கொடுக்கிறது. எலாஸ்டின் நெகிழ்ச்சித்தன்மையை அளிக்கிறது. இந்த புரதங்கள் சருமத்தின் ஆரோக்கியத்தை பராமரிக்கின்றன

குடல் ஆரோக்கியம் = தோல் ஆரோக்கியம்

“சமநிலையற்ற குடல் வைட்டமின்கள் பி, இரும்பு, துத்தநாகம் உறிஞ்சப்படுவதை கட்டுப்படுத்துகிறது மற்றும் வீக்கத்தை அதிகரிக்கிறது. இதனால் முகப்பரு, மந்தநிலை அல்லது முகத்தால் அழிக்க முடியாத சீரற்ற தொனி ஏற்படுகிறது” என நிபுணர் கூறுகிறார்.

குடல் ஆரோக்கியம் சரும ஆரோக்கியத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே வைட்டமின்கள் பி, இரும்பு, துத்தநாகம் உறிஞ்சுதலை மேம்படுத்த குடலை ஆரோக்கியமாக வைக்க வேண்டும். இவை சருமத்தின் தொனியை மேம்படுத்துகிறது.

இந்த பதிவும் உதவலாம்: முகத்தில் சிரிக்கும் போது தோன்றும் கோடுகள் மற்றும் சுருக்கங்களை குறைக்கும் சிறந்த வழிகள் இதோ.. மருத்துவர் பரிந்துரை

சர்க்கரை vs. கொலாஜன்

“அதிக சர்க்கரை உணவுகள் கிளைசேஷனை துரிதப்படுத்துகின்றன, கொலாஜன் மற்றும் எலாஸ்டினை சேதப்படுத்துகின்றன. இதனால் எத்தனை ஃபேஷியல்களை செய்தாலும், மந்தமான, தொய்வான மற்றும் வீக்கமடைந்த சருமம் உண்டாகும்” என கூறுகிறார்.

கிளைசேஷன் என்பது கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற சருமத்தில் உள்ள புரதங்களுடன் சர்க்கரை மூலக்கூறுகள் இணைவதால் ஏற்படும் ஒரு செயல்முறையாகும். இது சருமத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கிறது. எனவே சர்க்கரை நிறைந்த உணவுகளைக் கட்டாயம் குறைக்க வேண்டும்.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

தோல் தடைக்கான ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள்

“வால்நட்ஸ், ஆளிவிதை, கொழுப்பு நிறைந்த மீன் போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்களின் குறைந்த உட்கொள்ளல் லிப்பிட் தடையை பலவீனப்படுத்துகிறது, இதனால் வறட்சி மற்றும் செதில்கள் ஏற்படுகின்றன, இதை எந்த ஹைட்ரேட்டிங் மாஸ்க்காலும் சரிசெய்ய முடியாது” என நிபுணர் விளக்குகிறார்.

பொதுவாக ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் சருமத்தின் ஈரப்பதத்தை அதிகரிக்கவும், வீக்கத்தைக் குறைக்கவும், சுருக்கங்கள் இல்லாமல் இளமையாக வைத்திருக்கவும் உதவுகின்றன. எனவே வறட்சியைத் தடுக்க ஒமேகா-3 நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

உட்புற நீரேற்றம் முக்கியமானது

தோல் கிரீம்கள் நீர் உட்கொள்ளலை மாற்ற முடியாது. அதிக காஃபின்/உப்பு உணவுகள் மற்றும் குறைந்த நீரேற்றம், மோசமான நெகிழ்ச்சி மற்றும் துள்ளல் இல்லாமைக்கு வழிவகுக்கும் என நிபுணர் கூறுகிறார்.

சருமத்தை உள்ளிருந்து நீரேற்றமாக வைப்பதன் மூலம் அதன் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஆனால், அதிக காஃபின்/உப்பு உணவுகள் நீரிழப்பை ஏற்படுத்தும். எனவே, இதிலிருந்து விலகி இருப்பது அவசியமாகிறது.

பாதுகாப்பிற்கான ஆக்ஸிஜனேற்றிகள்

ஆக்ஸிஜனேற்றிகள் (பெர்ரி, கீரைகள், மூலிகைகள், மசாலாப் பொருட்கள்) குறைவாக உள்ள உணவு சருமத்தை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது, இது விரைவான வயதான மற்றும் சீரற்ற தொனிக்கு வழிவகுக்கும் என்று கூறுகிறார்.

குறைந்த ஆக்ஸிஜனேற்றிகள் சருமத்தை வயதான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே, சருமத்தின் தொனியை மேம்படுத்த ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்த உணவுகளைச் சேர்ப்பது அவசியமாகும்.

குறிப்பு

குறுகிய கால பளபளப்புக்கு முக அழகு சிறந்தது, ஆனால் நீண்ட கால பளபளப்பு ஊட்டச்சத்து, நீரேற்றம் மற்றும் குடல் சமநிலையிலிருந்து வருகிறது. எனவே சருமத்திற்கு உள்ளிருந்து உணவளிக்க வேண்டும் என நிபுணர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: வறண்ட சருமத்தை மென்மையாக மாற்ற உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்.. மருத்துவர் பரிந்துரை

Image Source: Freepik

Read Next

வறண்ட சருமத்தை மென்மையாக மாற்ற உதவும் சிறந்த வீட்டு வைத்தியங்கள்.. மருத்துவர் பரிந்துரை

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 17, 2025 18:23 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content