Thu Oct 29, 2026 | 11:51 AM IST

Doctor Verified

வெற்றிலையின் அசத்தல் நன்மைகள்.! மருத்துவர் விளக்கம்..

வெற்றிலை சாப்பிடுவது பாதுகாப்பானதா? பாக்கு, புகையிலை இல்லாமல் வெற்றிலை மட்டும் சாப்பிட்டால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து மருத்துவர் கார்த்திகேயன் விளக்கம்.
வெற்றிலையின் அசத்தல் நன்மைகள்.! மருத்துவர் விளக்கம்..வெற்றிலையின் அசத்தல் நன்மைகள்.! மருத்துவர் விளக்கம்..

செரிமான மண்டலம் சீராக இயங்க, உடலில் நச்சுகள் தேங்காமல் இருக்க, பாரம்பரியமாக தமிழர்கள் பயன்படுத்தி வரும் ஒரு இயற்கை மூலிகை வெற்றிலை. ஆனால், வெற்றிலையுடன் சேர்த்து சாப்பிடப்படும் பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு போன்ற பொருட்கள் புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கக்கூடியவை என்று மருத்துவர் கார்த்திகேயன் எச்சரிக்கிறார்.

வெற்றிலை மட்டும் சாப்பிட்டால் பாதுகாப்பானதா?

மருத்துவர் கார்த்திகேயன் விளக்குகையில், “வெற்றிலையை மட்டும் தனியாக எடுத்துக் கொண்டால், அதனால் எந்த பக்கவிளைவும் ஏற்படாது” என்று தெளிவுபடுத்துகிறார். பிரச்சனை வெற்றிலையில் இல்லை; அதனுடன் சேர்க்கப்படும் பாக்கு, புகையிலை போன்ற தீங்கு விளைவிக்கும் பொருட்களில்தான் உள்ளது.

புற்றுநோயை தடுக்க உதவும் ஆற்றல்

வெற்றிலையில், வைட்டமின்கள், தாது சத்துகள், ஆன்டி-ஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால், உடலில் செல்கள் சேதமடைவதைத் தடுக்க, புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவக்கூடிய ஆற்றல் உள்ளது என்று மருத்துவர் கார்த்திகேயன் குறிப்பிடுகிறார்.

இதய ஆரோக்கியத்திற்கும் நன்மை

வெற்றிலை இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது, இதய நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் தன்மை கொண்டது என்று மருத்துவ ஆய்வுகளும் தெரிவிக்கின்றன.

இந்த பதிவும் உதவலாம்: Betel Leaf: தினமும் ஒரு வெற்றிலை சாப்பிட்டால் உடலில் உள்ள இந்த பிரச்சனை எல்லாம் சரியாகும்!!

சிறுநீர் தொற்று மற்றும் உடல் சுத்தம்

வெற்றிலைக்கு, சிறுநீர் தொற்று ஏற்படாமல் தடுக்கும், சிறுநீர் வெளியேற்றத்தை சீராக்கும் இயற்கை ஆற்றல் உள்ளது. இதன் மூலம் உடலில் தேங்கும் நச்சுகள் வெளியேற உதவுகிறது.

சர்க்கரை நோயாளிகள் சாப்பிடலாமா?

ஆம். மருத்துவர் கார்த்திகேயன் கூறுவதாவது, சர்க்கரை நோயாளிகளும் வெற்றிலையை சாப்பிடலாம். ஆனால் பாக்கு, புகையிலை, சுண்ணாம்பு ஆகியவற்றை முழுமையாக தவிர்க்க வேண்டும்.

எவ்வளவு சாப்பிட வேண்டும்?

ஒரு நாளைக்கு ஒரே ஒரு வெற்றிலை, வெறும் வெற்றிலையாக மட்டும் சாப்பிட்டால் போதுமானது என்று மருத்துவர் அறிவுறுத்துகிறார்.

இறுதியாக..

வெற்றிலை என்பது, செரிமானத்தை சீராக்கும், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும், புற்றுநோய் அபாயத்தை குறைக்க உதவும் ஒரு பாரம்பரிய இயற்கை மூலிகை. ஆனால், பாக்கு, புகையிலை சேர்த்தால் மட்டுமே அது ஆபத்தான பழக்கமாக மாறுகிறது. எனவே, வெற்றிலை மட்டும் – மிதமான அளவில் என்பதே ஆரோக்கியமான வழி.

Disclaimer: இந்தக் கட்டுரை, பொது தளங்களில் கிடைக்கும் தகவல்கள் மற்றும் நாங்கள் தொடர்பு கொண்டு பேசிய நிபுணர்களின் கருத்துகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது. இக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள உணவு அல்லது பழக்கங்களை நீங்கள் பின்பற்றுவதற்கு முன், உங்கள் குடும்ப மருத்துவர் அல்லது தகுந்த உடல்நல நிபுணரை அணுகி ஆலோசனை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Read Next

→ எதிர்ப்பு சக்தியை உயர்த்தும் புரதம்: தினமும் கொண்டைக்கடலை சாப்பிடலாமா? மருத்துவர் சிவராமன் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 16, 2025 22:30 IST

    Published By : Ishvarya Gurumurthy