Thu Oct 29, 2026 | 12:55 PM IST

Curry Leaves : கெட்ட கொலஸ்ட்ரால் குறைய கறிவேப்பிலையை இப்படி சாப்பிடுங்கள்!

Curry Leaves : கெட்ட கொலஸ்ட்ரால் குறைய கறிவேப்பிலையை இப்படி சாப்பிடுங்கள்!Curry Leaves : கெட்ட கொலஸ்ட்ரால் குறைய கறிவேப்பிலையை இப்படி சாப்பிடுங்கள்!

கறிவேப்பிலை.. இதை சாப்பிடுவதால் ஆரோக்கியம் முதல் அழகு வரை பல நன்மைகள் கிடைக்கின்றன. இவற்றை சாப்பிடுவதால் இரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கிறது. இது பல அற்புதமான பண்புகளைக் கொண்டுள்ளது. இதை உணவில் சேர்த்துக் கொள்வதால் பல நன்மைகள் கிடைக்கும். பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என பார்க்கலாம்.

எலும்பு வலிமைக்கு:

கறிவேப்பிலையில் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகள் மற்றும் பற்களுக்கும் ஆரோக்கியத்திற்கு நல்லது. இவற்றை சாப்பிட்டால் மூட்டுவலி, சர்க்கரை நோய் உள்ளவர்களின் எலும்பு சம்பந்தமான வலிகள் குறைவதுடன் எலும்புகள் வலுவடையும்.

டீடாக்ஸ்:

கறிவேப்பிலையில் பாஸ்பரஸ் அதிகம் உள்ளது. எனவே, இது ஒரு இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படுகிறது. தினமும் காலையில் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் தேங்கியுள்ள கழிவுகள் முற்றிலும் வெளியேறி, அவற்றின் செயல்திறன் மேம்படும்.

ஒரு கிராம் மேஜிக்:

தினமும் காலையில் வெறும் வயிற்றில் ஒரு கிராம் கறிவேப்பிலையை சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. கறிவேப்பிலையில் புரதம் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது. தொற்றுகள் நீங்கும்.

சீக்கிரம் கரைஞ்சிடும்:

கறிவேப்பிலை சாப்பிடுவதால் எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் குறைகிறது. இது இரத்தக் குழாய்களில் கொலஸ்ட்ரால் சேர்வதைத் தடுக்கிறது. கெட்ட கொலஸ்ட்ரால் குறைந்தால் பிபியும் கட்டுப்படும். இதனால் இதயம் தொடர்பான பிரச்சனைகள் குறைந்து இதய ஆரோக்கியம் மேம்படும்.

இந்த தொல்லையே இல்ல:

கறிவேப்பிலையில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். அஜீரண பிரச்சனையால் அவதிப்படுவோர், தினமும் கறிவேப்பிலையை பச்சையாக சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட பிரச்சனைகள் நீங்கும். இருப்பினும், அதிகமாக சாப்பிடுவது வயிற்றுப்போக்குக்கு வழிவகுக்கும்.

முடி உதிர்வுக்கு ‘குட்பை’:

முடி உதிர்தலுக்குக் காரணம், புரதச் சத்து மற்றும் இரும்புச் சத்து குறைபாடுதான். இந்த இரண்டு குறைபாடுகளும் முடி உதிர்வை ஏற்படுத்துகின்றன. ஆனால் கறிவேப்பிலை சாப்பிட்டு வந்தால், இந்தப் பிரச்சனைகள் நீங்கும். கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் பி12 மற்றும் வைட்டமின் ஈ முடி உதிர்வை குறைக்கிறது.

Image Source: Freepik

Read Next

→ Postpartum Diet Plan: பிரசவத்திற்குப் பிறகு உடல் எடையை குறைக்க என்ன சாப்பிடணும்?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.