Sat Sep 12, 2026 | 12:22 AM IST

Doctor Verified

நெல்லிக்காய் தேநீர்: நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் குளிர்கால சூப்பர் உணவு!

நெல்லிக்காயை தினசரி உணவில் சேர்த்தால் உடல் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். வைட்டமின் சி நிறைந்த நெல்லிக்காய் தேநீர் எப்படி குடிக்க வேண்டும் என்பதை நிபுணர் சிவராமன் விளக்குகிறார்.

நெல்லிக்காய் (Amla) தினசரி உணவில் சேர்த்தால் உடலுக்கு பலவிதமான நன்மைகள் கிடைக்கும் என்று மருத்துவர் சிவராமன் கூறுகிறார். வெளிநாட்டு பழங்களுடன் ஒப்பிடுகையில், நெல்லிக்காயில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

நெல்லிக்காயை எவ்வாறு தினசரி உணவில் சேர்க்கலாம் என்று மருத்துவர் விளக்குகிறார். பொதுவாக காலை எழுந்ததும் தேநீர் குடிக்கும் பழக்கம் அதிகம் உள்ளது. ஆனால், தேயிலையை அதிக பால், சர்க்கரை சேர்த்து குடிப்பது ஆரோக்கியத்திற்கு நல்லது அல்ல.

நெல்லிக்காய் தேநீர் எப்படி தயாரிப்பது?

மருத்துவர் சிவராமன் பரிந்துரைக்கிறார்:

  • கொதிக்கும் தண்ணீரில் இரண்டு ஸ்பூன் தேயிலை போட்டு மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் மூடி வைத்து விட்டு வடிகட்டி குடிக்கலாம்.
  • தினசரி தேயிலை மட்டும் குடிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.
  • தேயிலையின் பதிலாக, நெல்லிக்காய் பொடி கொதிக்கும் சுடுநீரில் கலந்து குடிக்கலாம்.

இவ்வாறு குடித்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Nellikai Juice Benefits: சீரான செரிமானம் முதல்.. எடை மேலாண்மை வரை.. நெல்லிக்காய் ஜூஸ் நன்மைகள் இங்கே.!

நெல்லிக்காய் மற்றும் வைட்டமின் சி நன்மைகள்

  • கிவி போன்ற பழங்களுடன் ஒப்பிடுகையில், நெல்லிக்காயில் அதிக வைட்டமின் சி உள்ளது.
  • சில பழங்களில் வைட்டமின் சி வெயில் காரணமாக அழியக்கூடியது. ஆனால் நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி கொதிக்க வைத்தாலும் காப்பாற்றப்படும்.
  • இதனால் குளிர்காலத்தில் உடலை நோய் எதிர்ப்பு சக்தியுடன் வைக்க உதவும்.

நெல்லிக்காய் உட்கொள்ள வேண்டிய காரணங்கள்

  • நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது
  • உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
  • வைட்டமின் சி மூலம் தோல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பு

இத்தகைய நன்மைகள் உள்ள நெல்லிக்காயை உணவில் வழக்கமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர் சிவராமன் தெரிவிக்கிறார். 

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. உங்கள் உடல்நலத் தேவைக்கு ஏற்றது குறித்து மருத்துவரை அணுகி உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

 

Read Next

குளிர்காலத்தில் வயிறு சரியில்லையா? ஒரு கப் மோர் போதும்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 12, 2025 13:18 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content