Sat Sep 12, 2026 | 12:07 AM IST

Expert

உடல் கையாள்வதை விட அதிகளவு சர்க்கரை எடுத்துக் கொண்டதற்கான 4 தெளிவான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? நிபுணர் விளக்கம்

நம் உடல் கையாள்வதை விட அதிகளவு சர்க்கரை எடுத்துக் கொள்வதால், நம் உடலில் சில தெளிவான அறிகுறிகள் தோன்றலாம். இதில் உடல் அதிகளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளும் போது உடலில் என்னென்ன அறிகுறிகள் தோன்றும் என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

நம் அன்றாட உணவில் காலை எழுந்ததும் நாம் எடுத்துக் கொள்ளும் டீ, காபி முதல் பல்வேறு உணவுகளில் சர்க்கரை நிறைந்து காணப்படுகின்றன. எனவே தான், நாம் பெரும்பாலான நேரங்களில் சர்க்கரையைத் தவிர்க்க முடியாத சூழல் ஏற்படுகிறது. இந்நிலையில், ஒவ்வொருவரும் தங்களது அன்றாட உணவில் அதிக சர்க்கரையைச் சேர்க்கும் நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக, பல்வேறு உடல்நல அபாயங்களைச் சந்திக்கும் சூழ்நிலையும் ஏற்படுகிறது.

அவ்வாறு, உடல் ஏற்றுக் கொள்வதற்கு அதிகமான சர்க்கரையை எடுத்துக் கொள்ளும் போது, நம் உடலில் சில அறிகுறிகள் தோன்றலாம். இதில் நம் உடல் கையாள்வதை விட அதிகளவு சர்க்கரை எடுத்துக் கொண்டதற்கான 4 தெளிவான அறிகுறிகள் குறித்து உணவு சிகிச்சை உணவியல் நிபுணர் ஸ்வேதா ஜே பஞ்சால் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: நீரிழிவு நோயாளிகள் எடை குறைக்கும் போது செய்யக்கூடாத  பெரிய தவறுகள்.. நிபுணர் எச்சரிக்கை.!

நிபுணரின் கருத்து

நிபுணர் தனது பதிவில், “சர்க்கரை அதிகமாக உள்ளதா? நீங்கள் அதிகமாக சர்க்கரை உட்கொள்வதற்கான நான்கு அறிகுறிகள்” என்று தனது பதிவைத் தொடங்கியுள்ளார். அதனைத் தொடர்ந்து வீடியோவில் அறிகுறிகளைப் பகிர்ந்துள்ளார்.

  • முதலில், உங்கள் சருமத்தின் மேல் பகுதியில் வெள்ளை படலம் உருவாகிறது. பொதுவாக அதிகப்படியான சர்க்கரை காரணமாக கேண்டிடா அதிகமாக வளர்கிறது.
  • இரண்டாவது, இருமல், சளி, எந்த வகையான தொற்று அல்லது உங்கள் காயம் குணமடைய அதிக நேரம் எடுக்கும் என்பதை நீங்கள் சமாளிக்க முடியாது.

image

cold and cough home remedies in tamil

  • மூன்றாவது, உங்கள் தோல் மங்கத் தொடங்கிவிட்டது. இதன் காரணமாக, முகப்பரு, முன்கூட்டிய வயதானது, முன்கூட்டிய சுருக்கம் போன்றவை உருவாகிறது. இது கிளைசேஷன் மற்றும் அதிகப்படியான சர்க்கரை உட்கொள்ளலுக்கு ஒரு தெளிவான எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
  • நான்காவதாக, கழுத்தைச் சுற்றியுள்ள தோலில், குறிப்பாக உங்கள் அக்குள்களில் கூட இந்த திட்டு போன்ற கருமையான விஷயம் உருவாகத் தொடங்குகிறது. இது கேந்தோசிஸ் நிக்ரிகன்ஸ் என்று அழைக்கப்படுகிறது - இந்த அறிகுறியானது இன்சுலின் எதிர்ப்பின் முதல் அறிகுறியாகக் கருதப்படுகிறது.

நீங்கள் இப்போது அதை கவனித்துக் கொள்ளாவிட்டால், அது நீரிழிவு நோய்க்கு முந்தையதாகவும் பின்னர் நீரிழிவு நோயாகவும் மாறும்.

இதனைத் தொடர்ந்து, “இங்கே கவனிக்க வேண்டியது என்னவெனில், நீங்கள் வெல்லம், தேங்காய் சர்க்கரை போன்றவற்றைச் சாப்பிட்டாலும் சரி. இறுதியில் எல்லாமே சர்க்கரைகள்தான், நீங்கள் அதை மிகைப்படுத்திக் கொள்ள முடியாது” என்று குறிப்பிடுகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes: அளவுக்கு அதிகமாக சர்க்கரை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வருமா? பதில் இங்கே!

மேலும் அவர் தனது பதிவில் கூறியதாவது, “நீங்கள் "மிதமான" சர்க்கரையை சாப்பிடுகிறீர்கள் என்று நினைக்கிறீர்களா? உங்கள் உடல் வேறு கதையைச் சொல்லக்கூடும் - நீங்கள் தினமும் இனிப்புகளை சாப்பிடாவிட்டாலும் கூட” என்று இன்னும் சில எச்சரிக்கைகளைப் பதிவிட்டுள்ளார்.

உடல் தாங்க முடியாத அளவுக்கு சர்க்கரையை உட்கொள்கிறீர்கள் என்பதற்கான 4 தெளிவான எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே:

அதிக ஆற்றல் மற்றும் செயலிழப்புகள் - உணவுக்குப் பிறகு சுறுசுறுப்பாக உணர்கிறீர்கள். ஆனால் விரைவில் சோம்பலாக உணர்கிறீர்கள்.

தோல் பிரச்சினைகள் - முகப்பரு, மந்தமான தன்மை அல்லது வீக்கத்தால் ஏற்படும் முன்கூட்டிய வயதானது.

View this post on Instagram

A post shared by Dietitian Shweta J Panchal | The Diet Therapy (@dt.shwetashahpanchal)

முடிவடையாத பசி - சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை டோபமைனைத் தூண்டுகிறது. இதனால் நீங்கள் அதிகமாக ஏங்குகிறீர்கள்.

மோசமான தூக்கம் மற்றும் மனநிலை மாற்றங்கள் - நிலையற்ற இரத்த சர்க்கரை ஹார்மோன்கள் மற்றும் நரம்பு மண்டலத்தை பாதிக்கிறது.

கேண்டிடா அதிகப்படியான வளர்ச்சி - அதிகப்படியான சர்க்கரை கெட்ட குடல் ஈஸ்டை ஊட்டுகிறது. இது வீக்கம், சோர்வு மற்றும் மூளை மூடுபனிக்கு வழிவகுக்கிறது.

குறிப்பு

கிரானோலா பார்கள், பேக்கேஜ் செய்யப்பட்ட பழச்சாறுகள் அல்லது சுவையூட்டப்பட்ட தயிர் போன்ற "ஆரோக்கியமான" உணவுகள் கூட உங்கள் சர்க்கரை அளவை நாள் முழுவதும் உயர்த்தும் என நிபுணர் குறிப்பிடுகிறார்.

எனவே, உங்கள் தட்டில் நார்ச்சத்து, புரதம் மற்றும் நல்ல கொழுப்புகளுடன் சமநிலைப்படுத்துங்கள் - உங்கள் குடல் (மற்றும் தோல்) உங்களுக்கு நன்றி தெரிவிக்கும் என்று விளக்கியுள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: அதிக சர்க்கரை சாப்பிட்டால் சிறுநீரகம் பாதிக்கப்படுமா?

Image Source: Freepik

Read Next

சுகர் லெவலைக் கன்ட்ரோலில் வைக்கும் டாப் 5 மூலிகைகள்.. எப்படி பயன்படுத்துவது? நிபுணர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 21, 2025 18:16 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content