Sat Sep 12, 2026 | 12:23 AM IST

Doctor Verified

முகத்தின் சுருக்கங்களைப் போக்க உதவும் யோகா முத்திரைகள்.. எப்படி செய்வது மற்றும் அதன் நன்மைகள் இங்கே..

முகத்தில் உள்ள சுருக்கங்களைக் குறைக்கவும், சருமத்தைப் பொலிவாக்கவும் சில யோகா முத்ராக்கள் உதவுகின்றன. இதில் சுருக்கங்களைக் குறைக்க உதவும் பிராண முத்ரா, அபான வாயு, சூரியன், ஞானம் மற்றும் சங்கு முத்திரைகளை எவ்வாறு செய்யலாம் என்பதையும், இந்த யோகா ஆசனங்கள் சருமத்தை உள்ளிருந்து எவ்வாறு ஊட்டமளிக்க உதவுகிறது என்பதையும் காணலாம்.

அன்றாட வாழ்வில் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை மேற்கொள்வது அவசியமானதாகக் கூறப்படுகிறது. உண்மையில், யோகா என்பது உடல், மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவக்கூடியதாகும். ஆனால், இது சரும ஆரோக்கியத்திற்கும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம். சில யோகாசனங்களை மேற்கொள்வது பல்வேறு சரும பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது. குறிப்பாக, வயதாவதால் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவது கவலைக்குரியதாக மாறுகிறது. எனினும், அதிர்ஷ்டவசமாக முகச்சுருக்கங்களை நீக்க சில யோகா முத்திரைகள் உதவுகின்றன.

இது குறித்து லக்னோவில் உள்ள ரவீந்திர யோகா கிளினிக்கின் யோகா நிபுணர் டாக்டர் பிரியா ஸ்ரீவஸ்தவா அவர்கள் கூறுகையில், “சந்தையில் கிடைக்கும் விலையுயர்ந்த கிரீம்கள் அல்லது சிகிச்சைகளை நாடுவதற்குப் பதிலாக, தினமும் சில குறிப்பிட்ட யோகாசனங்களைப் பயிற்சி செய்வது முக சுருக்கங்களை இயற்கையாகவே குறைக்கும்” என்று விளக்குகிறார். யோகாசனங்கள் உடலில் ஆற்றல் சமநிலையை பராமரிக்கவும், சருமத்தை உள்ளிருந்து வளர்க்கவும் உதவுகின்றன. இதில் சுருக்கங்களைக் குறைக்க உதவும் ஐந்து யோகா ஆசனங்கள் குறித்து காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: 

முகச்சுருக்கங்களைப் போக்க உதவும் யோகா முத்திரைகள்

1.பிராண முத்திரை

இதைப் பயிற்சி செய்வதன் மூலம் உடலில் ஆக்ஸிஜனின் அளவு அதிகரிப்பதுடன், இரத்த ஓட்டமும் மேம்படுகிறது. மேலும், இது சரும செல்களை வளர்க்கிறது மற்றும் இதன் மூலம் சுருக்கங்கள் குறையத் தொடங்கி முகத்தின் பளபளப்பை அதிகரிக்கிறது.

பிராண முத்திரையை எப்படி செய்வது?

  • முதலில் இரண்டு கைகளின் மோதிர விரல் மற்றும் சுண்டு விரலின் நுனியை, கட்டைவிரல் நுனியால் இணைக்க வேண்டும்.
  • மீதமுள்ள இரண்டு விரல்களையும் நேராக வைத்திருக்கலாம்.
  • இதை ஒரு நாளைக்கு 10-15 நிமிடங்கள் செய்யுங்கள்.

பிராண முத்திரை நன்மைகள்

  • இந்த முத்திரை செய்வது முக சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.
  • மேலும் சருமத்தை பளபளப்பாக மாற்றுகிறது.
  • இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கின்றன.

2.சூரிய முத்திரை

இந்த முத்திரை உடல் வெப்பத்தையும் வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. இது சருமத்திற்கு சரியான ஊட்டச்சத்தை அளிக்கவும், சுருக்கங்களின் தோற்றத்தை குறைக்கவும் உதவுகின்றன.

சூரிய முத்திரையை எப்படி செய்வது?

  • இந்த முத்திரை செய்வதற்கு, கட்டைவிரலின் அடிப்பகுதியில் மோதிர விரலை வளைத்து, கட்டைவிரலால் மெதுவாக அழுத்தம் கொடுக்க வேண்டும்.
  • மீதமுள்ள விரல்களை நேராக வைத்திருங்கள்.
  • இந்த ஆசனத்தை தினமும் 10-15 நிமிடங்கள் பயிற்சி செய்யுங்கள்.

சூரிய முத்திரை நன்மைகள்

  • இவை சுருக்கங்கள் மற்றும் நேர்த்தியான கோடுகள் போன்ற பிரச்சனைகளை நீக்க உதவுகிறது.
  • இவை எடையிழப்புக்கு பெரிதும் உதவுகிறது.
  • இந்த முத்திரை சருமத்தை இறுக்கமாக்குகிறது.

3.அபான வாயு முத்திரை

இந்த ஆசனம் உடலில் இருந்து நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. உடல் சரியாக நச்சு நீக்கம் செய்யும்போது, சுருக்கங்கள் விரைவாக தோன்றாது.

அபான வாயு முத்திரையை எப்படி செய்வது?

  • இதில் கட்டைவிரலின் அடிப்பகுதியில் ஆள்காட்டி விரலை வளைக்க வேண்டும்.
  • அதைத் தொடர்ந்து, கட்டைவிரலால் நடுவிரல் மற்றும் மோதிர விரல்களின் நுனியை இணைத்து, சுண்டு விரலை நேராக வைக்க வேண்டும்.
  • இதை தினமும் 10 நிமிடங்கள் பயிற்சி செய்யலாம்.

அபான வாயு முத்திரையின் நன்மைகள்

  • சருமத்தில் உள்ள அழுக்குகளை சுத்தமாக்குகிறது.
  • இந்த முத்திரை செய்யும் போது வயதான அறிகுறிகள் குறைவாக உள்ளன.
  • இது இதயம் மற்றும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

4. ஞான முத்திரை

முகத்தில் ஏற்படும் சுருக்கங்களுக்கு மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாகும். இதற்கு ஞான முத்ரா ஒரு சிறந்த தீர்வாகும். இது மன அமைதியை அளிக்கிறது. மேலும் இது மன அழுத்தத்தின் அறிகுறிகளைக் குறைத்து சுருக்கங்களை குறைக்க வழிவகுக்கிறது

ஞான முத்திரையை செய்வது எப்படி?

  • இந்த முத்திரை செய்ய, ஆள்காட்டி விரல் மற்றும் கட்டைவிரலின் நுனிகளை இணைத்து, மீதமுள்ள விரல்களை நேராக வைக்க வேண்டும்
  • தியானம் செய்யும்போது அல்லது தினமும் காலையில் 10-15 நிமிடங்கள் இதைச் செய்யலாம்.

ஞான முத்திரையின் நன்மைகள்

  • இவை மன அழுத்தத்தைக் குறைப்பதன் மூலம் சுருக்கங்களைத் தடுக்கிறது.
  • நினைவாற்றல் மற்றும் செறிவு அதிகரிக்கிறது.
  • ஒருவருக்கு மன அமைதியை வழங்குகிறது.

5. சங்கு முத்திரை

சங்கு முத்ரா சருமத்தில் உள்ள அசுத்தங்களை நீக்கி சுருக்கங்களைக் குறைக்க உதவுகிறது.

சங்கு முத்திரை செய்வது எப்படி?

  • இடது கையின் நான்கு விரல்களாலும் வலது கையின் கட்டை விரலைப் பிடித்துக் கொள்ள வேண்டும்.
  • வலது கையின் நான்கு விரல்களையும் இடது கையின் கட்டைவிரலுடன் இணைக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நாளும் 5-10 நிமிடங்கள் செய்யுங்கள்.

சங்கு முத்திரையின் நன்மைகள்

  • சருமத்தில் உள்ள அழுக்குகள் நீக்க உதவுகிறது
  • முன்கூட்டியே தோன்றும் முதுமை அறிகுறிகளைக் குறைக்கிறது.
  • வழக்கமான பயிற்சி முகத்திற்கு இயற்கையான பளபளப்பைத் தருகிறது.

இந்த யோகாசனங்கள் சுருக்கங்களைக் குறைப்பது மட்டுமல்லாமல், உடலையும் மனதையும் சமநிலைப்படுத்த உதவுகின்றன. மேலும், இந்த ஆசனங்கள் சருமத்தின் அழகை இயற்கையாகவே மேம்படுத்த எளிதான வழியாகும்.

இந்த பதிவும் உதவலாம்: 10 நிமிடங்கள் மட்டும் இந்த யோகா செய்தாலே போதும் சருமம் சும்மா தகதகன்னு மின்னும்..!

Image Source: Freepik

Read Next

முடி உதிர்வதைத் தடுத்து அடர்த்தியான கூந்தலைப் பெற உதவும் டாப் 7 யோகாசனங்கள்.. மருத்துவர் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 15, 2025 18:54 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content