Fri Sep 11, 2026 | 11:43 PM IST

Expert

பெண்கள் இயற்கையாகவே ஹார்மோன்களை சமநிலைப்படுத்த என்ன உணவுகளை சாப்பிட வேண்டும்?

உடல் அதிகப்படியாகவோ அல்லது குறைவாகவோ ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் ஏற்படும் ஒரு நிலையே ஹார்மோன் சமநிலையின்மை ஆகும். இதில் பெண்களின் ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவுகள் சிலவற்றைக் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

அன்றாட வாழ்வில் நாம் பலவிதமான உடல் மற்றும் மனநலம் தொடர்பான பிரச்சனைகளைச் சந்திக்கிறோம். ஆனால், இதற்குப் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம். அதில் ஒன்றாகவே, ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனை அமைகிறது. பொதுவாக, ஹார்மோன் சமநிலையின்மை என்பது உடல் அதிகப்படியான அல்லது குறைவான ஹார்மோன்களை உற்பத்தி செய்வதால் ஏற்படும் ஒரு நிலை ஆகும். இதன் காரணமாக, சோர்வு, எடை மாற்றம், அரிப்பு, மனச்சோர்வு மற்றும் ஒழுங்கற்ற மாதவிடாய் போன்ற பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் எழக்கூடும்.

மேலும் இது நீரிழிவு, தைராய்டு நோய், PCOS போன்ற நிலைகளுடன் தொடர்புடையதாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, பெண்கள் ஹார்மோன் சமநிலையின்மை குறித்த விவரங்களைத் தெரிந்து கொள்வது அவசியமாகும். இந்நிலையில், ஹார்மோன் சமநிலைக்கான உணவுகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணரான நுபுர் பாட்டீல் அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: தொப்பையைக் குறைத்து ஹார்மோன்களை சமநிலையில் வைக்க இந்த மூன்று விதைகளை உங்க டயட்ல சேர்த்துக்கோங்க

ஹார்மோன்களை சமநிலைப்படுத்தும் உணவுகள்

நிபுணர் தனது பதிவில் கூறியதாவது, ஹார்மோன்கள் எதிரி அல்ல - அவை உங்கள் தட்டு அப்படி இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து,”நீங்கள் மனநிலை சரியில்லாமல், வீங்கியதாக, சோர்வாக உணர்ந்தால் அல்லது அசையாத எடையுடன் போராடிக்கொண்டிருந்தால்... உங்கள் ஹார்மோன்கள் உங்களுக்கு ஏதாவது சொல்ல முயற்சிக்கின்றன. நீங்கள் ஒவ்வொரு நாளும் சாப்பிடுவது உங்கள் ஹார்மோன்கள் இணக்கமாகப் பாய உதவுகிறது அல்லது அல்லது அவற்றை மொத்த குழப்பத்திற்கு அனுப்பும் என்று குறிப்பிடுகிறார்.

மேலும் அவர், ஈஸ்ட்ரோஜன் மற்றும் இன்சுலின் முதல் கார்டிசோல் மற்றும் தைராய்டு வரை - ஒவ்வொரு ஹார்மோனும் சிறப்பாக செயல்பட சரியான உணவு தேவை என பதிவிட்டுள்ளார்.

இவற்றை சரியாக எடுத்துக் கொள்ளத் தொடங்கியவுடன், கீழ்க்காணும் நன்மைகளைப் பெறலாம்.

  • உங்கள் தோல் பளபளக்கிறது
  • உங்கள் ஆற்றல் உயர்கிறது
  • உங்கள் மனநிலை நிலைபெறுகிறது
  • உங்கள் எடை மாறத் தொடங்குகிறது - இயற்கையாகவே!

ஏனெனில் உண்மையான ஹார்மோன் சமநிலை மாத்திரைகளிலிருந்து வருவதில்லை.. அது உங்கள் தட்டிலிருந்து வருகிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதில் நிபுணர் எந்தெந்த ஹார்மோன்கள் நமக்கு முக்கியம் என்பதையும், அதற்கு எந்தெந்த உணவுகளைச் சாப்பிட வேண்டும் என்பது குறித்தும் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

ஈஸ்ட்ரோஜன்

இது ஏன் முக்கியம்

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் ஆனது மாதவிடாய், மனநிலை மற்றும் சரும பளபளப்பைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

சாப்பிட வேண்டியவை

ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களைப் பெற ஆளி விதைகள் மற்றும் எள் விதைகள், கொண்டைக்கடலை மற்றும் பருப்பு, பெர்ரி மற்றும் மாதுளை போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இன்சுலின்

இது ஏன் முக்கியம்

இன்சுலின் உட்கொள்ளல் கொழுப்பு, சேமிப்பு மற்றும் சர்க்கரை அதிகரிப்பைக் கட்டுப்படுத்துகிறது

சாப்பிட வேண்டியவை

ஓட்ஸ், குயினோவா & தினை, வெள்ளரி, வெண்ணெய் மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களிடையே அதிகரித்து வரும் கருப்பை புற்றுநோய்.. அதன் முக்கியமான 5 காரணங்கள் இதோ

கார்டிசோல்

இது ஏன் முக்கியம்

உடலுக்கு சரியான கார்டிசோல் சமநிலை முக்கியமானதாகும். ஏனெனில், அதிகப்படியான கார்டிசோல் தொப்பை கொழுப்பு, குறைந்த ஆற்றல், மோசமான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது.

சாப்பிட வேண்டியவை

டார்க் சாக்லேட், வைட்டமின் சி உணவுகள் மற்றும் மூலிகை தேநீர் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

View this post on Instagram

A post shared by Nupuur Patil- Nutritionist (@nupuurpatil)

தைராய்டு

இது ஏன் முக்கியம்

இவை வளர்சிதை மாற்றம், மனநிலை மற்றும் உடல் எடையை ஒழுங்குபடுத்த உதவுகிறது.

சாப்பிட வேண்டியவை

அயோடின் நிறைந்த உப்பு, பிரேசில் கொட்டைகள், தயிர் மற்றும் முட்டைகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

இதனைத் தொடர்ந்து, நிபுணர் “ஹார்மோன்களை இயற்கையாகவே சமநிலைப்படுத்துங்கள். உங்கள் ஆற்றல், தோல் மற்றும் மனநிலையில் உள்ள வித்தியாசத்தை உணருங்கள்” என பதிவிட்டுள்ளார்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: அதிக கார்டிசோல் ஹார்மோன் எடை அதிகரிக்க காரணமா? ஊட்டச்சத்து நிபுணர் விளக்கம்!

Image Source: Freepik

Read Next

பெரிமெனோபாஸ் நிலையில் குடிக்க வேண்டிய 3 அழற்சிப் பண்புகள் நிறைந்த சிறந்த பானங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 10, 2025 23:48 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content