Fri Sep 11, 2026 | 11:09 PM IST

Expert

கார்டிசோலைக் குறைக்கவும், மாதவிடாய் ஹார்மோனை இயற்கையாகவே மீட்டெடுக்க உதவும் 6 உணவுகள்

கார்டிசோல் ஹார்மோனைக் குறைக்கவும், மாதவிடாய் ஹார்மோனை இயற்கையாகவே மீட்டெடுக்கவும் அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான உணவுகளைச் சேர்க்க வேண்டும். இதில் ஹார்மோன் சமநிலைக்கு உதவக்கூடிய சில ஊட்டச்சத்துக்களையும், அவை நிறைந்த உணவுகளையும் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

அன்றாட உணவில் ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியமாகும். ஆனால், இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கைமுறை, ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பல்வேறு உடல்நல பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். மேலும் இதன் காரணமாக, ஹார்மோன் சமநிலையின்மை தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுகின்றன. ஆனால் இதனால் மன ஆரோக்கியமும் பாதிக்கப்படும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம். உண்மையில் மன அழுத்தம் சார்ந்த பிரச்சனைகளுக்கு உணவுமுறையும் காரணமாக இருக்கலாம்.

அதிர்ஷ்டவசமாக, சில ஆரோக்கியமான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் மன அழுத்தத்தைக் குறைப்பதுடன் சுறுசுறுப்பாக காணப்படலாம். அவ்வாறு மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும், நல்ல தெளிவான மன ஆரோக்கியத்தைப் பெறவும் ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சலி அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: எமோஷனல் ஸ்ட்ரெஸ் இருக்கும் போது உங்க உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்க இந்த குறிப்புகளை பின்பற்றுங்க.. நிபுணர் பரிந்துரை

கார்டிசோலைக் குறைக்க உதவும் உணவுகள்

நிபுணர் தனது பதிவில்,”அதிக கார்டிசோலைக் குறைத்து உங்கள் மாதவிடாய் இணக்கத்தை மீட்டெடுக்கும் 6 உணவுகள் - இயற்கையாகவே” என்று கூறி தனது பதிவைத் தொடங்கியுள்ளார்.

மேலும் அவர், உங்கள் ஹார்மோன்களுக்கு கடுமையான திருத்தங்கள் தேவையில்லை - அவற்றுக்கு ஊட்டச்சத்து தேவை என்று குறிப்பிட்டுள்ளார்.

கார்டிசோலை சமநிலைப்படுத்தவும், PMS ஐக் குறைக்கவும், உங்கள் சுழற்சியை இயற்கையாகவே ஒழுங்குபடுத்தவும் இந்த 6 உணவுக் குழுக்கள் திரைக்குப் பின்னால் அமைதியாகச் செயல்படுகின்றன என்று கூறி மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் ஊட்டச்சத்துக்களையும், அதற்காக எடுத்துக் கொள்ள வேண்டிய உணவுகள் குறித்தும் பகிர்ந்துள்ளார்.

1-ஆரோக்கியமான கொழுப்புகள்

ஆரோக்கியமான கொழுப்புகள் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன, ஏனெனில் அவை மனநிலையை மேம்படுத்தும் ஹார்மோன்களை உற்பத்தி செய்ய உதவுகின்றன மற்றும் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. அதன் படி, ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த வெண்ணெய், ஆளி விதைகள், வால்நட்ஸ் போன்ற ஹார்மோன் உற்பத்தியை ஆதரிக்கின்றன.

2-குருசிஃபெரஸ் காய்கறிகள்

பொதுவாக, சிலுவை காய்கறிகள் (Cruciferous Vegetables ) கார்டிசோலைக் குறைக்கவும், மன அழுத்தத்தைக் குறைக்கவும் உதவக்கூடிய ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளன. எனவே, மன அழுத்தத்தைக் குறைக்க ப்ரோக்கோலி, கேல், முட்டைக்கோஸ் போன்றவற்றை எடுத்துக் கொள்ள நிபுணர் பரிந்துரைக்கிறார். இவை உடலில் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜனை நீக்குகிறது.

3-சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள்

மன அழுத்தத்தைக் குறைக்க சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் பெரிதும் உதவுகின்றன. ஏனெனில், இவை செரடோனின் என்ற மனநிலையை மேம்படுத்தும் நரம்பியல் கடத்தியை உற்பத்தி செய்ய உடலுக்குத் தேவையான ட்ரிப்டோபனை வழங்குகின்றன. இனிப்பு உருளைக்கிழங்கு, தினை, ஓட்ஸ் போன்ற சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம். இவை இரத்த சர்க்கரை மற்றும் கார்டிசோலை உறுதிப்படுத்துகின்றன.

இந்த பதிவும் உதவலாம்: அதிக மன அழுத்தத்தால் அவதியா? நொடியில் போக குங்குமப்பூ ஒன்னு போதும்..

4-மெக்னீசியம்-சத்துள்ள உணவுகள்

பொதுவாக மன அழுத்தத்தின் போது உடலின் மெக்னீசியம் தேவை அதிகரிக்கிறது, எனவே போதுமான அளவு மெக்னீசியம் உட்கொள்வது மனநிலை மற்றும் தூக்கத்தை மேம்படுத்த உதவுகிறது. எனவே, உடலில் மெக்னீசியம் உட்கொள்ளலை அதிகரிப்பதற்கு டார்க் சாக்லேட், கீரை, பாதாம் போன்றவற்றை சேர்த்துக் கொள்ளலாம். இவை நரம்பு மண்டலத்தை அமைதிப்படுத்துகின்றன.

View this post on Instagram

A post shared by Nutritionist Anjali (@nutritionistanjali_official)

5-வைட்டமின் சி-சத்துள்ள உணவுகள்

மன அழுத்தத்தைக் குறைக்க வைட்டமின் சி நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது, மனநிலையை மேம்படுத்தவும், கவலை மற்றும் மனச்சோர்வின் அறிகுறிகளைக் குறைக்கவும் உதவும் என்று சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதன் படி, அன்றாட உணவில் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிட்ரஸ் பழங்கள், கிவி, குடை மிளகாய் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம். இவை மன அழுத்த ஹார்மோன் கூர்மையைக் குறைக்கின்றன.

6-இரும்பு மற்றும் பி12-சத்துள்ள உணவுகள்

இவை இரண்டுமே மன அழுத்தத்தைக் குறைக்க உதவும் அவசியமான ஊட்டச்சத்துக்களாகும். இவை இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கும், உடல் செயல்பாடுகளுக்கும் உதவுகின்றன. அதன் படி, பேரீச்சம்பழம், பீட்ரூட், பருப்பு, முட்டைகள் வலிமையை மீட்டெடுக்கின்றன மற்றும் சுழற்சி சோர்வைத் தடுக்கின்றன.

உண்மை:

கார்டிசோல் குறையும் போது, உடல் இறுதியாக ஹார்மோன்களை சமநிலைப்படுத்தவும், மனநிலையை மேம்படுத்தவும், மாதவிடாய் வலியைக் குறைக்கவும் போதுமான அளவு பாதுகாப்பாக உணர்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Cortisol reducing tips: உங்க கவலைக்கு கார்டிசோல் அதிகரிப்பு தான் காரணமா? விரைவில் குறைக்க உதவும் டிப்ஸ் இதோ

Image Source: Freepik

Read Next

குடல் ஆரோக்கியம் ரொம்ப முக்கியம் பாஸ்.. நல்ல குடல் ஆரோக்கியத்திற்கு உதவும் 4 உணவுகள் இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 13, 2025 15:15 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content