Fri Sep 11, 2026 | 11:08 PM IST

ஹை லெவல் கொலஸ்ட்ராலை டக்குனு குறைக்க கறிவேப்பிலை ஒன்னு போதும்! எப்படி சாப்பிடணும் தெரியுமா?

Is curry leaves good for cholesterol: அன்றாட உணவில் நாம் சேர்க்கும் சில உணவுப்பொருள்களின் உதவியுடன் கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கலாம். அவ்வாறு எளிய உணவுப்பொருளான கறிவேப்பிலை அதிக கொலஸ்ட்ரால் அளவை எளிதில் குறைக்க உதவுகிறது. இதில் கொலஸ்ட்ராலைக் குறைக்க கறிவேப்பிலை தரும் நன்மைகள் குறித்து காணலாம்.

Does curry leaves reduce cholesterol: இன்றைய காலத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். குறிப்பாக, நீண்ட நேர உட்கார்ந்த வாழ்க்கை முறை, அதிக எண்ணெய் மற்றும் அதிக கொழுப்பு நிறைந்த ஆரோக்கியமற்ற உணவுகள் போன்றவை உடலில் கொலஸ்ட்ராலைத் தக்கவைக்கின்றன. இதனால், உயர் இரத்த அழுத்தம், எடை அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் எழுகிறது. மேலும் இவை இதய ஆரோக்கியத்தைப் பாதிக்கும் காரணிகளாகும். அதன் படி, உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும், அதிக கொலஸ்ட்ராலைக் குறைக்கவும் உணவுப்பொருளான கறிவேப்பிலை முக்கிய பங்கு வகிக்கிறது.

பொதுவாக, கறிவேப்பிலை அதன் நறுமணச் சுவைக்குப் பெயர் பெற்றதாகும். இது ஆல்கலாய்டுகள், கிளைகோசைடுகள் மற்றும் பீனாலிக் சேர்மங்கள் போன்ற சக்திவாய்ந்த தாவரப் பொருட்களால் நிறைந்ததாகும். மேலும் கறிவேப்பிலையில் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளது. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்கவும், ஃப்ரீ ரேடிக்கல்களுக்கு எதிராகப் போராடவும் உதவுவதாக ஆய்வுகளில் கூறப்படுகிறது. கறிவேப்பிலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. இதை நம் அன்றாட உணவில் பல்வேறு வழிகளில் சேர்க்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: என்ன செய்தாலும் உடலில் கொழுப்பு ஏறுதா? ஊட்டச்சத்து நிபுணர் தரும் உணவுமுறை மாற்றங்கள் இதோ

கொலஸ்ட்ராலைக் குறைக்க கறிவேப்பிலை

கறிவேப்பிலை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தரக்கூடிய முக்கிய மூலப்பொருளாக விளங்குகிறது. அவ்வாறு பலரும் அறியாத நன்மைகளில் ஒன்றாக கறிவேப்பிலை உட்கொள்வது கொழுப்பின் அளவைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மோசமான கொழுப்பின் அளவுகள் இதய நோய்க்கான ஆபத்தை அதிகரிக்கலாம். எனவே இதய ஆரோக்கியத்திற்கு கொழுப்பின் எண்ணிக்கையை பரிந்துரைக்கப்பட்ட வரம்பிற்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகக் கருதப்படுகிறது. இந்த கொழுப்பின் அளவைக் குறைக்க கறிவேப்பிலை எவ்வாறு உதவுகிறது மற்றும் அதை எப்படி எடுத்துக் கொள்வது என்பது குறித்து காணலாம்.

கொலஸ்ட்ராலைக் குறைக்க கறிவேப்பிலை எவ்வாறு உதவுகிறது?

  • ஆய்வுகளில், கறிவேப்பிலையை உட்கொள்வது பல வழிகளில் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும் எனக் கூறப்படுகிறது.
  • கறிவேப்பிலையில் ஆல்கலாய்டுகள் மற்றும் ஃபிளாவனாய்டுகள் போன்ற சேர்மங்கள் நிறைந்துள்ளது. இவை உடலிலிருந்து கெட்ட கொழுப்பின் (LDL) அளவைக் குறைக்க உதவுகிறது. இவை கல்லீரலில் கொழுப்பை வளர்சிதை மாற்றவும், இரத்த ஓட்டத்தில் கொழுப்பு சேருவதைத் தடுக்கவும் உதவுகிறது.
  • கறிவேப்பிலையில் அதிக ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பொருள் உள்ளது. இது அதிக கொழுப்பின் அளவிற்கு பங்களிக்கும் இரண்டு முக்கிய காரணிகளாக விளங்கும் வீக்கம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது.
  • மேலும், இதய நோய்க்கு பொதுவான ஆபத்து காரணிகளாக அதிக கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடு அளவுகள் அமைகிறது. இந்த ஆபத்து காரணிகளைக் குறைப்பதற்கு கறிவேப்பிலை பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Jackfruit Benefits: கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் பலாப்பழம் சாப்பிடலாமா? இது ஆரோக்கியத்திற்கு நல்லதா?

கறிவேப்பிலையின் மற்ற ஆரோக்கிய நன்மைகள்

  • கறிவேப்பிலையில் ள் ஏ, பி மற்றும் சி, இரும்புச்சத்து, கால்சியம், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் பிற தாதுக்கள் நிறைந்துள்ளது. இது ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கக் கூடியதாகும்.
  • மேலும், கறிவேப்பிலையில் அழற்சி எதிர்ப்புப் பண்புகள் நிறைந்துள்ளன.
  • கறிவேப்பிலை சாப்பிடுவது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.
  • இது உடலில் வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தவும், எடை நிர்வாகத்தை ஆதரிக்கவும் உதவுகிறது.
  • சில ஆய்வுகளில் கறிவேப்பிலை இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும் என்றும், நீரிழிவு நோயாளிகளுக்கு நன்மை பயக்கும் என்றும் கூறப்படுகிறது.
  • இது செரிமான நொதிகளின் உற்பத்தியைத் தூண்டி மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளைத் தடுக்க உதவுகிறது.

கொலஸ்ட்ராலைக் குறைக்க கறிவேப்பிலை சாப்பிடும் முறை

பச்சையாக மெல்லுதல்

கறிவேப்பிலையின் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதற்கு, வெறும் வயிற்றில் புதிய கறிவேப்பிலையை மென்று சாப்பிடலாம்.

சமையலில் பயன்படுத்துவது

சுவை மற்றும் நறுமணத்திற்காக கறிவேப்பிலையை பொரியல், அரிசி உணவுகள், சூப்கள் போன்ற உணவுகளில் சேர்க்கலாம்.

சட்னி, சாலட்கள் மற்றும் மசாலாப் பொருட்கள்

கூடுதல் சுவைக்காக சட்னி, சாலடுகள் மற்றும் மசாலாப் பொருட்களில் புதிய கறிவேப்பிலையைச் சேர்த்துக் கொள்ளலாம்.

கறிவேப்பிலை பொடி

கறிவேப்பிலையை வெயிலில் உலர்த்தி பொடியாக அரைத்து, பல்வேறு உணவுகளில் பயன்படுத்தலாம் அல்லது ஸ்மூத்திகளில் சேர்க்கலாம்.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உங்க சமையலில் இந்த எண்ணெய்களைச் சேர்க்கலாம்

Image Source: Freepik

Read Next

கொலஸ்ட்ராலைக் குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உங்க சமையலில் இந்த எண்ணெய்களைச் சேர்க்கலாம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content