Fri Sep 11, 2026 | 11:45 PM IST

Doctor Verified

எடை குறைக்க தினமும் ஒரு கப் சுக்கு நீர்.. 30 நாட்களில் அதிசயம்.!

சுக்கு உடல் எடையை குறைப்பதில் எப்படி உதவுகிறது? தலைவலி, சைனஸ், வாந்தி மயக்கம் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் சுக்கு தரும் நன்மைகள் என்ன?  தெளிவான விளக்கம் இங்கே.

இன்றைய காலகட்டத்தில் உடல் எடை அதிகரிப்பு என்பது ஏராளமானோரைக் கவலைக்குள்ளாக்கும் முக்கிய சுகாதார பிரச்சனையாக மாறியுள்ளது. மாறிவரும் உணவு பழக்is-it-good-to-drink-ginger-tea-everyday-02கங்கள், விரைவான வாழ்க்கை நடைமுறைகள், உடற்பயிற்சி குறைவு போன்றவை இதற்கான முக்கிய காரணங்களாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். பலர் எடையை குறைக்க ஆங்கில மருத்துவம், டயட் திட்டங்கள் உள்ளிட்ட பல வழிகளை முயற்சித்தாலும், நம் வீட்டில் இருக்கும் இயற்கை மசாலா பொருட்கள் மூலம் பல சுகாதார பிரச்சனைகள் சரியாகும் என்பதை பலர் அறிந்திருக்கவில்லை. அத்தகைய பயனுள்ள மசாலா பொருட்களில் சுக்கு (காய்ந்த இஞ்சி) முக்கியமானது. சுக்கு பல்வேறு உடல்நலம் நன்மைகளை வழங்கும் சக்தி வாய்ந்த இயற்கை மருந்து என்றும் பதிவுகள் நிரூபிக்கின்றன.

is-it-good-to-drink-ginger-tea-everyday-main

ஒற்றைத்தலைவலி குறைக்க சுக்கு சிறந்த மருந்து

இந்திய இயற்கை மருத்துவ நிபுணர் டாக்டர் மைதிலி தனது வீடியோவில் கூறியதாவது, “ஒற்றைத்தலைவலியில் அவதிப்படுபவர்கள் 3 சிட்டிகை சுக்குப்பொடி + தென் கலந்து, காலை உணவுக்கு அரைமணி நேரம் முன்பு, இரவு உணவுக்கு அரைமணி நேரம் முன்பு தினமும் எடுத்துக் கொண்டால் தலைவலி படிப்படியாகக் குறையும்.

அதேபோல், சுக்கு உடலின் இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் திறன் கொண்டது என்பதால் தலைச் சுற்றல், சோர்வு போன்ற பிரச்சனைகளுக்கும் நன்மை தரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

சைனஸ் பிரச்சனைக்கு சுக்கு தைலம்

நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் சுக்கு தைலத்தை தலை குளிப்பதற்கு 45 நிமிடங்களுக்கு முன்பு, உச்சந்தலையில் தடவி அதன்பிறகு வெந்நீரில் தலைமுடியை கழுவ வேண்டும். இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால், சைனஸ் பிரச்சனை கணிசமாகக் குறையும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்த பதிவும் உதவலாம்: மஞ்சள், சுக்கு மற்றும் தேன்.. இதை சேர்த்து சாப்பிடலாமா.? இவை செய்யும் மாயாஜாலம் இங்கே..

பயணங்களின்போது வாந்தி, மயக்கத்தைத் தடுக்க சுக்கு

சிலர் வாகனப் பயணம் செய்யும்போது வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளை சந்திப்பார்கள். இதற்கு ஒரு எளிய தீர்வாக, 2 சிட்டிகை சுக்குப்பொடி + வெந்நீர் கலந்து, பயணம் தொடங்குவதற்கு அரைமணி நேரம் முன்பாக குடித்தால் வாந்தி, மயக்கம் போன்றவை தடுக்கப்படும். இது வயிற்றில் ஏற்படும் கோளாறுகளை சமப்படுத்தும் தன்மையைக் கொண்டது.

 

உடல் எடையை குறைக்கும் இயற்கை கருவி

சுக்கு உடலிலுள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கும் திறன் கொண்டது என்று பல ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. எடை குறைக்க விரும்புவோர், 1/4 டீஸ்பூன் சுக்குப்பொடி + ஒரு கிளாஸ் வெந்நீர், காலை உணவுக்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக சாப்பிட வேண்டும்.

காலை டீ, காபி குடிக்கும் பழக்கம் இருந்தால், அதற்கு பதிலாக இதை எடுத்துக்கொள்வது இன்னும் சிறப்பானது. 30–45 நாட்கள் தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டால் உடல் எடையில் கணிசமான மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

இறுதியாக..

சுக்கு என்பது சாதாரண மசாலா பொருள் மட்டுமல்ல; தலைவலி, சைனஸ், வாந்தி, மயக்கம், எடை அதிகரிப்பு போன்ற பல பிரச்சனைகளை சமாளிக்க உதவும் சக்திவாய்ந்த இயற்கை மருந்து. எளிய முறையில் தயாரிக்க முடியும் என்பதால் தினசரி உணவில் இதை சேர்ப்பது பல நன்மைகளை வழங்கும். ஆனால் ஏற்கனவே உடல்நலப் பிரச்சனைகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது சிறந்தது.

Disclaimer: இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பொது மருத்துவ ஆலோசனைகள் மற்றும் நிபுணர்களின் கருத்துக்களை அடிப்படையாகக் கொண்டது. எந்தவொரு மருந்தை அல்லது நாட்டு மருத்துவ முறையைப் பயன்படுத்துவதற்கு முன் உங்கள் மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

காலை உணவைத் தவிர்ப்பவர்களா நீங்க? இது உங்களுக்குத் தான்.. நிபுணர் தரும் அட்வைஸ்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 27, 2025 12:20 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content