Fri Sep 11, 2026 | 11:42 PM IST

சுகர் சாப்பிடணும் போல இருக்கா? இந்த மசாலா பொருள்கள் உங்களுக்கு உதவும்

What spice stops sugar cravings: சர்க்கரை சாப்பிடுவது அதை மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்ட வைக்கிறது. இந்நிலையில், சர்க்கரை பசியைக் குறைக்க சில ஆரோக்கியமான மசாலா பொருள்கள் உதவுகின்றன. இதில் சர்க்கரை பசியைக் குறைக்க என்னென்ன மசாலா பொருள்கள் உதவும் என்பதைக் காண்போம்.

What herb makes you not want sugar: யாருக்குத் தான் இனிப்பு என்றால் பிடிக்காது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருமே இனிப்பு சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதில் இனிப்பு என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சர்க்கரை ஆகும். ஆனால், இந்த சுவையான சர்க்கரை உட்கொள்ளல் ஆனது மீண்டும் மீண்டும் அதை சுவைக்கத் தூண்டுகிறது. இவ்வாறு சுவைக்காக சர்க்கரையை சாப்பிடுவது பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இது உடல் எடை அதிகரிப்பு, இதய நோய் பாதிப்பு மற்றும் இன்னும் சில உடல்நல அபாயங்களுக்கு வழிவகுக்கலாம்.

எனவே, இந்த அதிகளவிலான சர்க்கரை உட்கொள்ளலைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். பொதுவாக, உணவு உணர்திறன், நீண்ட மன அழுத்தம், தனிமை உணர்வுகள், இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்றத்தாழ்வு அல்லது ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் போன்றவை கூட நம்மை இனிப்புப் பொருள்கள் சாப்பிட ஏங்க வைக்கலாம். எனினும், அதிக இனிப்பு உணவுகள் சாப்பிடுவது சிறந்ததாக இருக்காது. சர்க்கரை மிகவும் அடிமையாக்கும் என்பதை மறந்துவிடக் கூடாது.

எனவே, நீண்ட காலத்திற்கு நல்ல ஆரோக்கியத்தை விரும்பினால், சர்க்கரை உட்கொள்ளலைக் குறைக்கலாம். அதிர்ஷ்டவசமாக, சில மசாலா பொருள்கள் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதில் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவும் மசாலா பொருள்களைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஸ்வீட் சாப்பிடனும் போல தேனுதா.? அப்போ இந்த பழங்களை சாப்பிடுங்க..

சர்க்கரை பசிக்குக் காரணங்கள்

ஹெல்த்ஷாட்ஸ் தளத்தில் குறிப்பிட்டபடி, சர்க்கரையைச் சேர்க்கும் போது, நம் உடலில் மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர் செரோடோனின் சுரப்பை அதிகரிக்கிறது. அதே சமயம், பீட்டா-எண்டோர்பின்கள் என்ற இயற்கையான வலி நிவாரணிகள் மிகவும் நன்மை பயக்கும். இவை பதட்டத்தைத் தணிக்க உதவுகிறது.

மேலும், நம் உடலில் மக்னீசியம் இல்லாததே சர்க்கரைக்கான நமது முடிவில்லாத விருப்பத்திற்குப் பின்னால் உள்ள முக்கிய காரணமாக அமைகிறது. எனவே கீரை, டார்க் சாக்லேட், பூசணி விதைகள் மற்றும் கீரை போன்ற மக்னீசியம் நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்த உதவும் மசாலாப் பொருட்கள்

சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்துவது சவாலானதாகும். குறிப்பாக இந்திய உணவு வகைகளில் பிரபலமாக இருக்கும் சர்க்கரை நிறைந்த இனிப்புகள் மற்றும் சிற்றுண்டிகளின் பரவலின் காரணமாக, சர்க்கரை பசியைக் குறைப்பது சவாலானதாக அமைகிறது. இதில் சர்க்கரை பசியைக் குறைக்க உதவும் மசாலா பொருள்களைக் காணலாம்.

வெந்தய விதைகள்

வெந்தய விதைகள் என்ற மெத்தி விதைகளில் இன்சுலின் சுரப்பைத் தூண்டும் ஒரு அமினோ அமிலம் நிறைந்துள்ளது. சிறந்த வழியாக, இவற்றை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது, அல்லது பொடியாக அரைத்து கறி மற்றும் பருப்புகளில் சேர்ப்பது மிகவும் நன்மை பயக்கும்.

கிராம்பு

கிராம்பு உட்கொள்வது இன்சுலின் செயல்பாட்டை மேம்படுத்துவதாகவும், இரத்தத்தில் குளுக்கோஸ் செறிவைக் குறைப்பதாகவும் கூறப்படுகிறது. இதை கறிகள், அரிசி உணவுகள் அல்லது தேநீர்களில் கூட சேர்த்து சாப்பிடலாம்.

இந்த பதிவும் உதவலாம்: ஸ்வீட்ஸ் சாப்பிடுவதை விடாமலே சர்க்கரை பசியைக் குறைக்கலாம்.. நிபுணர் சொன்ன இந்த 4 டிப்ஸ் ஃபாலோ பண்ணுங்க

இலவங்கப்பட்டை

டால்சினி என்றழைக்கப்படும் இலவங்கப்பட்டை, இன்சுலின் செயல்பாட்டைப் பின்பற்றுவதன் மூலம் இரத்த சர்க்கரை அளவை நிலைப்படுத்துவதாகவும், செல்களுக்குள் குளுக்கோஸ் போக்குவரத்தை அதிகரிப்பதாகவும் அறியப்படுகிறது.

ஏலக்காய்

இது ஒரு தனித்துவமான சுவை கொண்ட ஒரு பிரபலமான நறுமண மசாலா மற்றும் சர்க்கரை பசியைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதை தேநீர், இனிப்பு வகைகள் அல்லது அரிசி உணவுகளில் கூட சேர்க்கலாம்.

இஞ்சி

இஞ்சி உட்கொள்வது இரத்த சர்க்கரையை ஒழுங்குபடுத்த உதவுகிறது. இதன் சுவையானது பசியைக் குறைக்கிறது. இது காலை தேநீரில் ஒரு பிரபலமான கூடுதலாகும்.

ஆரோக்கியமான, சர்க்கரை இல்லாத உணவிற்கு மசாலாப் பொருள்களைச் சேர்க்கலாம். இதை மெலிந்த புரதங்கள், நிறைய பழங்கள் மற்றும் காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் முழு தானியங்களுடன் உணவில் சேர்க்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனினும், இந்த மசாலா பொருள்களில் ஏதேனும் ஒவ்வாமை அல்லது எதிர்வினையை கவனித்தால், உடனடியாக ஊட்டச்சத்து நிபுணரை அணுகுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: சீனி சாப்பிடுவதை சட்டுனு நிறுத்தினால் என்ன ஆகும் தெரியுமா.?

Image Source: Freepik

Read Next

எலுமிச்சை விதையை தெரியாமல் விழுங்கினால் என்னவாகும் தெரியுமா? நன்மை தீமைகள் இங்கே!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content