Fri Sep 11, 2026 | 09:51 PM IST

Expert

பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தலுக்கான காரணங்களும், அதை சரி செய்யும் முறைகளும்.. நிபுணர் தரும் விளக்கம்

பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்வது இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாகும். இதைத் தவிர்க்க விரும்புபவர்களுக்கு உதவும் வகையில், நிபுணர் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தல் என்பது ஒரு பெரிய பிரச்சனையாகக் கருதப்படுகிறது. பொதுவாக, ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக, ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் அளவு அதிகரிக்கிறது. இதன் காரணமாக முடி வளர்ச்சி குறைகிறது மற்றும் முடி உதிர்தல் ஏற்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு, உடல் மற்றும் மன அழுத்தத்தால் முடி உதிர்தல் ஏற்படுகிறது. பிரசவத்திற்குப் பிறகு, குழந்தையை கவனித்துக்கொள்வது தூக்கமின்மைக்கு வழிவகுக்கிறது. இது முடி உதிர்தலுக்கு வழிவகுக்கும்.

இந்நிலையில், பிரசவத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய முடி உதிர்வு பிரச்சனையிலிருந்து விடுபட, ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா அவர்கள் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில குறிப்புகளைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

நிபுணரின் கருத்து

ஊட்டச்சத்து நிபுணர் லோவ்னீத் பத்ரா தனது வீடியோவில், பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தல் - உண்மையில் என்ன நடக்கிறது? என்ற கேள்வியுடன் தனது பதிவைத் தொடங்கியுள்ளார். அவரின் கூற்றுப்படி, “பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தல் முற்றிலும் இயல்பானது மற்றும் பொதுவாக 3–6 மாதங்களுக்குப் பிறகு உச்சத்தை அடைகிறது. காரணம்? ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்து இடைவெளிகள் மற்றும் மன அழுத்தம் - அனைத்தும் திரைக்குப் பின்னால் ஒன்றாகச் செயல்படுகின்றன” என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: Postpartum Hair Loss: குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு கொத்து, கொத்தாய் முடி கொட்டுவது ஏன்? - தடுக்கும் வழிகள்!

பிரசவத்திற்குப் பிந்தைய முடி உதிர்தல் மிகவும் பொதுவானது. மற்றும் முடி உதிர்வு ஏற்படுவதற்கான காரணங்கள்:

  • ஊட்டச்சத்து குறைபாடு
  • ஹார்மோன் மாற்றங்கள்
  • மன அழுத்தம்
  • ஓய்வு இல்லாமை

என்ன நடக்கிறது?

கர்ப்ப காலத்தில், ஈஸ்ட்ரோஜன்அதிகரிப்பானது முடியை வளர்ச்சி கட்டத்தில் வைத்திருக்கிறது. இந்நிலையில், பிரசவத்திற்குப் பிறகு, ஈஸ்ட்ரோஜன்அதிகரிப்பானது கூர்மையாகக் குறைகிறது. இவை முடியின் இழைகளை ஓய்வு கட்டத்திற்குத் தள்ளி, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.

எனினும், அதிர்ஷ்டவசமாக முடி உதிர்தல் பிரச்சனையிலிருந்து விடுபட முடியும். அதற்கான சில குறிப்புகளை நிபுணர் பகிர்ந்துள்ளார்.

தலைமுடிக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள்

வைட்டமின் டி

வைட்டமின் டி நிறைந்த உணவுகளை உட்கொள்வது முடியின் நுண்ணறைகளை சுறுசுறுப்பாக வைத்திருக்கிறது. இவை முடி வளர்ச்சியை ஆதரிக்கின்றன.

இரும்பு மற்றும் பி12

வைட்டமின் பி12 மற்றும் இரும்பு போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது முடியின் வேர்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை ஆதரிக்கிறது.

புரதம் & பயோட்டின்

இந்த இரண்டு ஊட்டச்சத்துக்களுமே முடி ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாததாகும். இவை முடியின் அமைப்பை வலுப்படுத்துகிறது. மேலும் இது முடி உதிர்தலைக் குறைத்து, முடி வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

துத்தநாகம்

துத்தநாகம் நிறைந்த உணவுகள், முடியின் நுண்ணறைகளை பழுது பார்க்கவும் மற்றும் முடி வளர்ச்சியை அதிகரிக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: Hairfall After Delivery: பிரசவத்திற்கு பின் முடி கொட்டுகிறதா.? இதை சமாளிக்க சூப்பர் டிப்ஸ் இங்கே..

புத்திசாலித்தனமாக சாப்பிடுவது

பருப்பு, முட்டை, பனீர், கீரைகள், வெல்லம், கொட்டைகள், விதைகள், காளான்கள் மற்றும் மீன் போன்ற உணவுகளை தினந்தோறும் சிறிய அளவு எடுத்துக் கொள்வது கூட தலைமுடி மீண்டும் வளர்வதை ஊக்குவிக்கவும், முடி உதிர்தலைக் குறைக்கவும் உதவும் என நிபுணர் கூறுகிறார்.

View this post on Instagram

A post shared by Lovneet Batra (@lovneetb)

இயற்கையாகவே ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது

முடி உதிர்தலைத் தவிர்க்க இயற்கையாகவே ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவது அவசியமாகக் கருதப்படுகிறது. அதன் படி, ஈஸ்ட்ரோஜன் ஆதரவுக்கு ஆரோக்கியமான கொழுப்புகள் நிறைந்த நெய், ஆலிவ் எண்ணெய், கொட்டைகள் போன்றவற்றையும், மன அழுத்தத்தைத் தணிக்க மெக்னீசியம் நிறைந்த உணவுகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும்.

1 டீஸ்பூன் வறுத்த ஆளி விதைகள், எள் மற்றும் பூசணி விதைகளையும், 10 ஊறவைத்த பாதாம் மற்றும் 4 ஊறவைத்த வால்நட்ஸ் போன்றவற்றையும் எடுத்துக் கொள்ளலாம்.

இது தவிர, “உங்கள் உடலுக்கு அன்பாக இருங்கள், நன்றாக ஓய்வெடுக்க மறக்காதீர்கள் - பிரசவத்திற்குப் பிறகு முடி உதிர்தல் தற்காலிகமானது. ஓய்வு, நல்ல உணவு மற்றும் பொறுமையுடன், உங்கள் தலைமுடி (மற்றும் பளபளப்பு) திரும்பும்” எனவும் நிபுணர் பகிர்ந்துள்ளார். நிபுணர் கூறிய இந்த குறிப்புகளைப் பின்பற்றுவதன் மூலம் பிரசவத்திற்குப் பிறகு ஏற்படக்கூடிய முடி உதிர்தலைத் தவிர்க்கலாம்.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: பிரசவத்திற்குப் பின் முடி உதிர்வால் அவதியா? நிபுணர் சொன்ன இந்த உணவுகளை சாப்பிடுங்க

Image Source: Freepik

Read Next

டெயிலி யூஸ் பண்ண.. கெமிக்கல் இல்லாத ஷாம்பூ.! மருத்துவர் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 27, 2025 23:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content