Fri Sep 11, 2026 | 10:44 PM IST

Doctor Verified

மாதவிடாய் காலத்தில் அதிகமாக முடி உதிர்வது இயல்பானதா? மருத்துவரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

பெண்கள் பலரும் தங்கள் மாதவிடாய் காலத்தில் முடி உதிர்வதாக புகார் கூறுகின்றனர். இதற்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் உள்ளிட்ட ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்கலாம். உண்மையில், மாதவிடாய் காலத்தில் முடி உதிர்தல் அதிகமாக இருக்குமா என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

பெண்கள் மாதந்தோறும் சந்திக்கும் மாதவிடாய் காலத்தில் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை அனுபவிக்கின்றனர். இந்த மாற்றங்கள் அவர்களின் மனநிலை மற்றும் ஆற்றல் மட்டங்களை மட்டுமல்லாமல், அவரின் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கக்கூடும். இது அவர்களின் தோல், நகங்கள் மற்றும் முடியையும் பாதிக்கக்கூடும். மாதவிடாய் காலத்தில் முடி உதிர்தல் அதிகரிக்கிறது என்பது ஒரு பொதுவான நம்பிக்கையாகக் கருதப்படுகிறது. மேலும் பல பெண்கள் இதை அனுபவிக்கின்றனர்.

ஆனால் இந்த நம்பிக்கை வெறும் கட்டுக்கதையா அல்லது ஓரளவு உண்மையா? இந்த தலைப்பு குறித்து கூடுதல் தகவலுக்கு, முடி உதிர்தலுக்கான விரிவான வழிகாட்டி குறித்து லக்னோ, கோமதி நகர், செயின்ட் ஜோசப் மருத்துவமனை, மூத்த தோல் மருத்துவர், டாக்டர் தேவேஷ் மிஸ்ரா அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மாதவிடாய் காலத்தில் முடி உதிர்தல் உண்மையில் அதிகரிக்குமா?

மாதவிடாய் காலத்தின் போது, பொதுவாக முடி வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் போன்ற ஹார்மோன்களின் அளவு திடீரென குறைகிறது என்று மருத்துவர் தேவேஷ் மிஸ்ரா விளக்கினார். இந்த ஹார்மோன்களின் குறைவானது, முடி டெலோஜென் கட்டத்தை முன்கூட்டியே அடையச் செய்து, முடி உதிர்தலுக்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: தேனுடன் இந்த ஒரு பொருள் சேர்த்து முடிக்கு யூஸ் பண்ணி பாருங்க.. எக்கச்சக்க நன்மைகள் கிடைக்கும்

ஒரு நாளைக்கு 100 முடிகள் வரை உதிர்வது இயல்பானது என்றாலும், இதை விட அதிகமாக முடி உதிர்தல் ஏற்பட்டால், மருத்துவரை அணுகுவது முக்கியமாகும். முடி உதிர்தல் அசாதாரணமாக அதிகமாக இருந்தால், அது வேறு ஏதேனும் சிக்கலைக் குறிக்கலாம் (எ.கா.இரும்புச்சத்து குறைபாடு, பதற்றம்,தைராய்டு) என சுட்டிக்காட்டுகிறது.

ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உச்சந்தலையில் பிரச்சனைகளை ஏன் ஏற்படுத்துகிறது?

தேசிய மருத்துவ நூலகத்தின் ஆய்வில், சுமார் 17,009 பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வின் படி, ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிக்கும், சருமம் மற்றும் உச்சந்தலையின் நிலைக்கும் இடையே ஒரு சிறப்பு தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது.

மாதவிடாய் சுழற்சி முறைகேடுகள் ஹார்மோன் ஏற்ற இறக்கங்களை பிரதிபலிக்கின்றன, இது உச்சந்தலை மற்றும் முடியின் நிலையை பாதிக்கலாம் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. இந்த ஆய்வில், உச்சந்தலையின் ஆரோக்கியத்திற்கும், முடி உதிர்தலுக்கும் ஹார்மோன் ஏற்ற இறக்கங்கள் (எ.கா., ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்ட்டிரோன்) ஒரு காரணியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: மந்தமான கூந்தலுக்கு நாவல் பழம் ஹேர் மாஸ்க்.. 4 வாரங்களில் பளபளக்கும் முடி.!

மாதவிடாய் காலத்தில் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்க குறிப்புகள்

  • தலைமுடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இதற்கு, வாரத்திற்கு 2-3 முறை ஷாம்பு போட்டு குளிக்கலாம். வெளியே செல்வதற்கு முன் முடியை கட்ட வேண்டும்.
  • உணவில் நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும்.
  • மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்தி, ஆழ்ந்த சுவாசப் பயிற்சிகள் மற்றும் உடல் பயிற்சிகளில் கவனம் செலுத்த வேண்டும்.
  • மாதவிடாய் காலத்தில் ஆரோக்கியமான முடி வழக்கத்தைப் பின்பற்றலாம். மேலும் உங்கள் தலைமுடியில் கூடுதல் தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.

முடிவுரை

மாதவிடாய் காலத்தின் போது முடி உதிர்தல் ஏற்படுவதற்கு ஹார்மோன் சமநிலையின்மை, மன அழுத்தம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகள் போன்றவை காரணமாக இருக்கலாம். எனினும், இந்தப் பிரச்சனை மாதந்தோறும் தொடர்ந்தால், அது இரும்புச்சத்து குறைபாடு, தைராய்டு நோய் அல்லது PCOS போன்றவற்றின் அறிகுறியாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உங்க ஹெல்மெட்டை யாருடனும் பகிராதீங்க.. இதே பழக்கத்தால்தான் முடி உதிருது.!

Image Source: Freepik

Read Next

உங்க ஹெல்மெட்டை யாருடனும் பகிராதீங்க.. இதே பழக்கத்தால்தான் முடி உதிருது.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 26, 2025 22:19 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content