
இன்றைய வேகமான வாழ்க்கையில் பைக், ஸ்கூட்டர் போன்ற இருசக்கர வாகனங்கள் பெரும்பாலான குடும்பங்களின் அங்கமாகிவிட்டன. அதோடு, பலரும் பைக் டாக்சி சேவைகள் (bike booking apps) மூலம் சுலபமாக பயணம் செய்கின்றனர். ஆனால், இத்தகைய பயணங்களில் ஒரு முக்கிய விஷயம் கவனிக்கப்படாமல் போகிறது - ஹெல்மெட்டை பகிர்ந்து கொள்வது.
பலரும் குடும்பத்தினருடனோ, நண்பர்களுடனோ அல்லது அந்நியர்களுடனோ ஹெல்மெட்டை பகிர்ந்து கொள்கிறார்கள். ஆனால், இதன் விளைவாக முடி மற்றும் தலையோட்டியில் ஏற்படும் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. இதுகுறித்து, டெல்லி ரஜோரி கார்டனில் உள்ள Cosmetic Skin Clinic-இல் பணியாற்றும் அழகுக்கலை நிபுணர் மற்றும் தோல் மருத்துவர் டாக்டர் கருணா மல்ஹோத்ரா முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.
ஹெல்மெட்டை பகிர்வது ஏன் ஆபத்தானது?
ஹெல்மெட்டை யாருடனும் பகிர்ந்து கொள்ளக் கூடாது. அது நெருங்கியவராக இருந்தாலும்கூட. ஏனெனில் ஒரே ஹெல்மெட்டை மீண்டும் மீண்டும் பயன்படுத்துவதால் அதில் வியர்வை, துர்நாற்றம் மற்றும் தலையிலிருந்து வரும் எண்ணெய், பொடுகு, தூசி ஆகியவை சேர்ந்து அழுக்காக மாறும். அதை மற்றொருவர் அணிந்தால், அந்த அழுக்கு, பூஞ்சை (fungus) மற்றும் பாக்டீரியா அவர்களின் தலைமுடியிலும் பரவக்கூடும். இதனால் முடி உதிர்வு, பொடுகு, தலையோட்டிப் பாதிப்பு போன்ற பிரச்சனைகள் உருவாகும்.
ஹெல்மெட்டை பகிர்வதால் ஏற்படும் பிரச்சனைகள்
அழுக்கு படிதல்
ஒரே ஹெல்மெட்டை பலர் பயன்படுத்தினால், அது தினசரி வியர்வை மற்றும் தூசி சேர்ந்து நுண்ணுயிர்கள் பெருகும் இடமாக மாறும். இதன் விளைவாக, தலையோட்டியில் பூஞ்சை தொற்று (Scalp infection) ஏற்படும் அபாயம் அதிகம்.
முடி சேதம் மற்றும் உதிர்வு
அழுக்கு ஹெல்மெட் அணிவதால் தலைமுடி வேர்கள் பலவீனமடையும். இதனால் முடி மெல்ல மெல்ல உதிர ஆரம்பிக்கும். தொடர்ந்து பயன்படுத்தினால், முடி வலிமை குறைந்து முறிவு அதிகரிக்கும்.
பொடுகு அதிகரிப்பு
ஹெல்மெட் அணியும் போது வியர்வை தலையில் அடைத்து விடுகிறது. இது பொடுகை (Dandruff) அதிகரிக்கும் முக்கிய காரணம். வேறு ஒருவரின் ஹெல்மெட்டை அணிந்தால், அந்த நபரின் பொடுகு பாக்டீரியா நம் தலையில் பரவ வாய்ப்பும் உள்ளது.
இந்த பதிவும் உதவலாம்: பொசுபொசுனு முடி ஸ்ட்ராங்கா வளர வீட்டிலேயே நீங்க பின்பற்ற வேண்டியவை..
ஹெல்மெட் சுகாதார குறிப்புகள் (Helmet Hygiene Tips)
தனிப்பட்ட ஹெல்மெட் பயன்படுத்துங்கள்
மற்றவர்களின் ஹெல்மெட்டை அணியாமல், உங்களுக்கென ஒரு ஹெல்மெட்டை வைத்திருங்கள்.
ஹெல்மெட்டின் கீழ் துணி (cloth liner) அணியுங்கள்
தலையோட்டியுடன் ஹெல்மெட் நேரடியாக தொடாதபடி மெல்லிய துணி அல்லது “helmet liner cap” அணியுங்கள்.
வாரத்திற்கு ஒருமுறை சுத்தம் செய்யுங்கள்
ஹெல்மெட்டின் உள்ள்புறம் வியர்வை மற்றும் தூசி படிந்திருக்கும். அதை சோப்பு நீரால் கழுவி, நன்கு உலர்த்துங்கள்.
தலைமுடி பராமரிப்பு
வாரத்தில் குறைந்தது இரண்டு முறை தலைமுடியை கழுவுங்கள். தலையில் எண்ணெய் மற்றும் அழுக்கு தேங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
மருத்துவர் பரிந்துரைக்கும் எச்சரிக்கை
“ஹெல்மெட்டை பகிர்வது சின்ன விஷயம்தான் என்று நினைப்பது தவறு. இது முடி உதிர்வை மட்டும் அல்லாமல் தலையோட்டிப் பூஞ்சை தொற்றுகள், சொறி, மற்றும் பொடுகு பரவல் போன்ற பிரச்சனைகளுக்கும் காரணமாகும். எனவே ஒவ்வொருவரும் தங்கள் சொந்த ஹெல்மெட்டை வைத்திருக்க வேண்டும்” என்று டாக்டர் கருணா மல்ஹோத்ரா கூறுகிறார்.
இறுதியாக..
ஹெல்மெட்டை பகிர்ந்து கொள்வது ஒரு சிறிய பழக்கமாக தோன்றினாலும், அது முடி மற்றும் தலையோட்டியின் ஆரோக்கியத்திற்கு பெரிய அச்சுறுத்தலாகும். உங்கள் பாதுகாப்பை காக்கும் ஹெல்மெட்டை, உங்கள் தலையின் ஆரோக்கியத்தையும் காக்கும் வகையில் சுத்தமாகவும் தனிப்பட்டதாகவும் வைத்திருக்க வேண்டும்.
Disclaimer: இந்தக் கட்டுரை பொதுவான தகவல்களுக்காக மட்டுமே எழுதப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்ட வழிமுறைகளை பின்பற்றுவதற்கு முன் உங்கள் தோல் மருத்துவர் அல்லது தலைமுடி நிபுணரை அணுகி ஆலோசனை பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
How we keep this article up to date:
We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.
Current Version
Oct 25, 2025 18:42 IST
Published By : Ishvarya Gurumurthy