Fri Sep 11, 2026 | 11:08 PM IST

Doctor Verified

குளிர்காலத்தில் வயிறு சரியில்லையா? ஒரு கப் மோர் போதும்!

குளிர்காலத்தில் அஜீரணம், வீக்கம், வாயு, அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்ற வயிறு பிரச்சனைகளில் மோர் ஏன் நிவாரணம் தருகிறது? அதை எவ்வாறு சரியாக உட்கொள்ள வேண்டும்? உணவியல் நிபுணர் விளக்கம்.

குளிர்காலத்தில் வாயு, மலச்சிக்கல், வீக்கம், அஜீரணம் போன்ற செரிமானப் பிரச்சனைகள் அதிகரிப்பது பொதுவானது. இந்நிலையில் உணவில் மாற்றங்கள், போதிய தண்ணீர், உடற்பயிற்சி மற்றும் மனஅழுத்தக் கட்டுப்பாட்டுடன் சேர்த்து மோர் போன்ற புரோபயாடிக் உணவுகள் பெரும் உதவியாக இருக்கும்.

மருத்துவ குணங்கள் நிறைந்த மோர், வயிற்று சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை குறைக்கும் திறன் உடையது என ஜெய்ப்பூரில் உள்ள “ஏஞ்சல்கேர்-ஏ நியூட்ரிஷன் அண்டு ஹெல்த் சென்டர்” இயக்குநர், ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் கூறுகிறார்.

மோர் குடிப்பதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

1. செரிமானத்தை மேம்படுத்தும்

மோரில் புரோபயாடிக்குகள் அதிகம். உணவுடன் மோர் குடிப்பது செரிமான செயல்முறையை எளிதாக்கி, அஜீரணம் மற்றும் வாயு தொல்லைகளை குறைக்கிறது.

2. குடல் பாக்டீரியாவை பலப்படுத்தும்

மோரின் இயற்கை நுண்ணுயிர்கள் குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களை அதிகரித்து, குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.

3. வயிற்று வீக்கம், கனத்த உணர்வு குறையும்

அமிலத்தன்மை, வீக்கம், பசியின்மை போன்றவற்றை தணித்து செரிமான அமைப்பை சமநிலைப்படுத்துகிறது.

4. எடை குறைப்பில் உதவும்

மோர் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வை தருவதால் அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும். ஒவ்வொரு நாளும் மதிய உணவுடன் ஒரு கப் மோர் எடுத்துக் கொள்வது ஆரோக்கியமான எடை குறைப்புக்கு உதவுகிறது.

வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்க மோர் எப்படி குடிக்க வேண்டும்?

மோரில் சிறிதளவு கல் உப்பு, வறுத்த சீரகம் பொடி, கருப்பு மிளகு தூள் சேர்த்து குடிக்கலாம். இது வாயு, அஜீரணம், வீக்கம் போன்றவற்றை விரைவாக நிவாரணம் அளிக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: சோறுடன் மோர் சாப்பிடலாமா? சாப்பாட்டுக்கு பின் மோர் குடிக்கலாமா? எது நல்லது?

எப்போது மோர் குடிக்கக்கூடாது?

கீழ்க்கண்ட பிரச்சனைகள் இருந்தால் மாலை அல்லது இரவில் மோர் தவிர்க்கலாம்:

  • சளி, இருமல்
  • தொண்டைவலி
  • உடல் குளிர்ச்சி
  • மூட்டு வலி
  • ஒவ்வாமை
  • சிறுநீரகப் பிரச்சனை
  • உயர் இரத்த அழுத்தம் (உப்பு சேர்த்து குடிக்கக் கூடாது)

மிகவும் மிதமாக மட்டுமே எடுத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியாக..

மோர் குளிர்காலத்தில் வயிற்று ஆரோக்கியத்தை பாதுகாக்கும் இயற்கையான, மலிவு மருத்துவ உணவு. அஜீரணம், வாயு, வீக்கம், அமிலத்தன்மை, மலச்சிக்கல் போன்றவற்றை குறைத்து குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. எனினும், உடல் குளிர்ச்சி அல்லது பிற உடல்நல பிரச்சனைகள் உள்ளவர்கள் கவனமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரை பொதுவான தகவல் நோக்கத்திற்காக மட்டுமே வழங்கப்படுகிறது. இது மருத்துவ ஆலோசனை, நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாகாது. செரிமானப் பிரச்சனைகள் தொடர்ந்தால் உங்கள் மருத்துவரை அணுகுவது அவசியம்.

Read Next

உடலுக்கு நன்மை தரும் சக்கரவள்ளி கிழங்கு.! கிடைத்தால் விட்ராதீங்க..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 12, 2025 09:42 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content