Sat Sep 12, 2026 | 12:03 AM IST

Doctor Verified

குளிர்காலத்தில் பச்சை பப்பாளி சாப்பிட்டால் கிடைக்கும் 5 அசத்தலான நன்மைகள்.!

குளிர்காலத்தில் பச்சை பப்பாளி சாப்பிடுவது ஏன் மிகவும் நன்மை பயக்கும்? உணவியல் நிபுணர் காமினி குமாரியின் விளக்கம் இங்கே.

குளிர்காலத்தில் உடலின் ஆற்றல் தேவைகள் அதிகரிக்கும். குறைந்து வரும் வெப்பநிலையில் உடல் சூட்டை பராமரிக்க சரியான உணவு தேர்வு மிகவும் அவசியம். இதனால் “ஹீட்டிங் எஃபெக்ட்” கொண்ட உணவுகள் அதிகம் சாப்பிடப்படும் காலம் இது.

ஆனால் குளிர்காலத்தில் கூட நன்மை தரக்கூடிய கோடைகால உணவுகள் உள்ளன. அவற்றில் முக்கியமான ஒன்றாக பச்சை பப்பாளி உள்ளது. சாலட், கூட்டு அல்லது கறி ஆகிய வடிவங்களில் பொதுவாக பயன்படுத்தப்படும் பச்சை பப்பாளி, குளிர்காலத்தில் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை வழங்குகிறது என்று நொய்டா மனாஸ் மருத்துவமனையின் உணவியல் நிபுணர் காமினி குமாரி கூறுகிறார்.

பச்சை பப்பாளி சாப்பிடுவதால் கிடைக்கும் முக்கிய நன்மைகள்

1. உடலை இயற்கையாக ஈரப்பதமாக வைத்திருக்கும்

குளிர்காலத்தில் தண்ணீர் குடிக்கும் பழக்கம் குறையும். இதனால் நீர் இழப்பு (Dehydration) அதிகரிக்கும் அபாயம் உள்ளது. பச்சை பப்பாளியில் நீர் சத்து அதிகம் இருப்பதால், உடலின் ஈரப்பதம் சீராகும். பச்சை பப்பாளி செல்களுக்கு தேவையான நீர் கிடைக்கும். இதனால் குளிரால் உண்டாகும் உலர்ச்சி குறையும். எந்த உணவிலும் பச்சை பப்பாளியை சேர்ப்பது உடலை முழுவதும் நீரேற்றமாக வைத்திருக்க உதவுகிறது.

2. செரிமான அமைப்பு சீராகும்

குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாகப் பருகுவதால் அமிலத்தன்மை, மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கின்றன. பச்சை பப்பாளியில் உள்ள நார்ச்சத்து, நீர்ச்சத்து, இயற்கை நொதிகள் (enzymes), சிறிய அளவு புரதம் அனைத்தும் செரிமானத்தை வேகமாகவும் சீராகவும் மாற்றுகின்றன. உணவை சரியாக ஜீரணிக்க உதவி, வயிற்றுப் பிரச்சனைகளை குறைக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: இதயம் முதல் சரும ஆரோக்கியம் வரை.. ஆம்லாவை இந்த 10 வழிகளில் சாப்பிடுங்க!

3. உடல் நச்சு நீக்கத்தை ஊக்குவிக்கும்

உடலில் தேங்கும் நச்சுகள் சோர்வு, சுருக்கம், சரும பிரச்சனைகளை ஏற்படுத்தும். பச்சை பப்பாளியின் இயற்கை detoxifying பண்புகள் வயிற்றை சுத்தம் செய்யும், குடலில் உள்ள நச்சுகளை அகற்றும், கல்லீரல் நச்சு நீக்கத்திற்கு உதவும். குளிர்காலத்தில் ஒரு நல்ல Detox food தேவைப்பட்டால், பச்சை பப்பாளி அதற்கான சிறந்த தேர்வு.

4. எடை குறைவுக்கு உதவும்

பச்சை பப்பாளியில் கலோரி குறைவு, நார்ச்சத்து அதிகம். அதனால் நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு தரும். இது அதிகமாக சாப்பிடுவதைத் தடுக்கும், கொழுப்பு எரிப்பை ஊக்குவிக்கும், metabolism-ஐ மேம்படுத்தும். இயற்கை நொதிகள் உடலின் deep fat-ஐ உடைக்க உதவுகின்றன.

5. சருமம் நன்றாக சுத்தமாகும் 

பச்சை பப்பாளி உடலையும் சருமத்தையும் ஒரே நேரத்தில் நச்சு நீக்குகிறது. இதில் உள்ள பீட்டா கரோட்டின், நீர் மற்றும் நார்ச்சத்து, சரும வறட்சியை குறைத்து, இயற்கையான ஒளிர்வை அதிகரிக்கின்றன. தொடர்ந்து எடுத்துக்கொண்டால் சருமம் பளபளப்பாகவும், பிம்பிள் பிரச்சனைகள் குறைந்து தெளிவாகவும் இருக்கும்.

இறுதியாக..

குளிர்காலத்தில் பச்சை பப்பாளியை உணவில் சேர்ப்பது hydration முதல் digestion வரை பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. இயற்கை நொதிகளும், நார்ச்சத்தும், நீர்சத்தும் கொண்ட இந்த பழம், உடலை நச்சு நீக்கவும், எடை குறைக்கவும், சருமத்தை சுத்தமாக வைத்திருக்கவும் உதவுகிறது. ஆனால் ஏதேனும் மருத்துவ பிரச்சனை அல்லது மருந்து எடுத்துக்கொண்டு இருந்தால், உணவியல் நிபுணரின் ஆலோசனையைப் பெற்ற பிறகே புதிய உணவு மாற்றங்களைச் செய்ய வேண்டும்.

Disclaimer: இந்தக் கட்டுரை பொதுத் தகவல் நோக்கத்திற்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனை, diagnosis அல்லது treatment-க்கு மாற்றல்ல. உணவுப் பழக்க மாற்றங்களுக்கு முன் நிபுணரை அணுகவும்.

Read Next

இதயம் முதல் சரும ஆரோக்கியம் வரை.. ஆம்லாவை இந்த 10 வழிகளில் சாப்பிடுங்க!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 26, 2025 21:17 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content