Fri Sep 11, 2026 | 10:44 PM IST

யூரிக் ஆசிட்டைக் குறைக்கும் பச்சை பப்பாளி.. இப்படி எடுத்துக்கோங்க

Does raw papaya reduce uric acid level: உடலில் யூரிக் அமில அளவு அதிகரித்து காணப்படுவதால் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் அதிகளவிலான யூரிக் அமில அளவைக் குறைப்பதில் பச்சை பப்பாளி மிகவும் நன்மை பயக்கும். இதில் யூரிக் ஆசிட்டைக் குறைக்க பச்சை பப்பாளி எவ்வாறு உதவுகிறது என்பதைக் காணலாம்.

Is raw papaya good for uric acid: இன்றைய காலத்தில் நவீன வாழ்க்கை முறை மற்றும் மோசமான உணவுமுறை காரணமாக உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இதில் உடலில் அதிகளவு யூரிக் அமிலம் இருப்பதும் ஒரு காரணமாகும். இதனால் பலதரப்பட்ட உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படலாம். உடலில் யூரிக் அமிலம் அதிகரிப்பது ஹைப்பர்யூரிசிமியா எனப்படுகிறது. இது ஒரு பொதுவான நிலையாகும். இந்த யூரிக் அமில அதிகரிப்பானது ஆரம்ப கட்டங்களில் கவனிக்கப்படுவதில்லை.

உடலில் அதிகரிக்கும் யூரிக் அமிலத்தால் கீல்வாதம் அல்லது சிறுநீரக கற்கள் போன்ற அறிகுறிகள் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. எனவே இந்த யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபடுவது அவசியமாகும். இந்நிலையில், பியூரின்கள் குறைவாக உள்ள உணவைப் பின்பற்றுவதே ஹைப்பர்யூரிசிமியாவைத் தடுக்க ஒரு சிறந்த வழியாகக் கருதப்படுகிறது. ஆனால் சில நேரங்களில், இது அதிகரிப்பதால் சில வீட்டு வைத்தியங்கள் அல்லது சிகிச்சை முறை தேவைப்படுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: நீங்க தினமும் சாப்பிடக்கூடிய இந்த உணவுகள் உங்க யூரிக் அமிலத்தை அதிகரிக்கும்.. இதற்கு பதிலா என்ன சாப்பிடலாம்?

யூரிக் அமிலம் என்றால் என்ன?

யூரிக் அமிலம் என்பது நம் உடலில் உள்ள ஒரு கழிவுப் பொருளைக் குறிக்கிறது. இது பியூரின் எனப்படும் வேதிப்பொருளின் சிதைவால் உருவாகக் கூடியதாகும். பொதுவாக, சிறுநீரகங்கள் அதை வடிகட்டி, சிறுநீர் வழியாக உடலில் இருந்து அகற்றுகிறது. ஆனால், சிறுநீரகங்கள் சரியாக செயல்படத் தவறும்போது, அது மூட்டுகளைச் சுற்றி படிகங்களாகக் குவியத் தொடங்கலாம். இதன் காரணமாக, வீக்கம், மூட்டுவலி மற்றும் நடப்பதில் சிரமம் போன்ற பிரச்சனைகளை ஒருவர் எதிர்கொள்ளும் நிலை ஏற்படலாம்.

image

want-to-reduce-high-uric-acid-level-here-are-the-tips-to-follow-daily-Main

அதிக யூரிக் அமிலம் இருப்பதற்கான அறிகுறிகள்

அதிக யூரிக் அமிலத்தின் அறிகுறிகளில் பொதுவாக உடலில் கடுமையான மூட்டு வலி, வீக்கம், சிவத்தல் மற்றும் மென்மை போன்றவை அடங்குகிறது. இதில் வீக்கமானது பெருவிரல், கணுக்கால் அல்லது முழங்கால்களிலும் ஏற்படும். இது தவிர, சிறுநீரக கற்கள், வலி, சிறுநீர் கழிப்பதில் சிரமம் அல்லது சிறுநீரில் இரத்தம் போன்றவை அதிக யூரிக் அமிலத்தின் கடைசி அறிகுறிகளாகக் கருதப்படுகிறது.

யூரிக் அமிலத்தைக் குறைப்பதற்கான வீட்டு வைத்தியம்

உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் கட்டுப்படுத்துவதற்கு, அன்றாட உணவில் சிறப்பு கவனம் செலுத்துவது அவசியமாகும். மேலும் சில வீட்டு வைத்தியங்களின் உதவியுடன் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்தலாம். இத்தகைய வீட்டு வைத்தியங்களில் ஒன்றாக பச்சை பப்பாளியும் அடங்கும். ஆம். உண்மையில் பச்சை பப்பாளி உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதற்கு இதில் உள்ள வைட்டமின் சி, புரோட்டியோலிடிக் நொதி பப்பேன் போன்றவையே காரணமாகும். மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது.

இந்த பதிவும் உதவலாம்: யூரிக் அசிட்டைக் குறைத்து வலியிலிருந்து விடுபட விருப்பமா? இந்த 6 பொருட்கள் உங்களுக்கு உதவும்...!

பச்சை பப்பாளி யூரிக் அமிலத்தை எவ்வாறு குறைக்க உதவுகிறது?

உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைப்பதற்கு பச்சை பப்பாளி மிகவும் நன்மை பயக்கும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, நார்ச்சத்து, மெக்னீசியம் மற்றும் கால்சியம் போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை உடலில் யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகின்றன.

இந்த ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பச்சை பப்பாளி இரத்தத்தில் யூரிக் அமிலம் உருவாவதைத் தடுக்க உதவுகிறது. மேலும் இது வீக்கம் மற்றும் மூட்டு வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. இதனைத் தொடர்ந்து உட்கொள்வதன் மூலம் செரிமான அமைப்பை மேம்படுத்தலாம். மேலும், இதன் மூலம் உடலில் குவிந்துள்ள நச்சுகள் எளிதில் வெளியேற்றப்படுவதுடன், யூரிக் அமிலத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது.

image

raw-papaya-3946-1738501940-1738551604909.jpg

யூரிக் அமிலத்தைக் குறைக்க பச்சை பப்பாளி சாப்பிடும் முறை

பச்சை பப்பாளியை கஷாயம் வடிவில் காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதன் மூலம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவைக் குறைக்கலாம்.

செய்முறை

  • முதலில் பச்சை பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்க வேண்டும்.
  • இப்போது ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்ற வேண்டும்.
  • அதில் பப்பாளி துண்டுகளைச் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் சமைக்க வேண்டும்
  • அதன் பிறகு, இதை மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.
  • இப்போது இதை வடிகட்டி சிறிது கல் உப்பு சேர்த்து குடிக்க வேண்டும்.

இது தவிர, பச்சை பப்பாளியை சாலட் அல்லது சாம்பார் போன்ற வழிகளில் தயார் செய்தும் உட்கொள்ளலாம். எனினும், வேறு ஏதேனும் சில உடல்நலப் பிரச்சனைகளைக் கொண்டிருப்பவர்கள் பச்சை பப்பாளியை எடுத்துக் கொள்ளும் முன் மருத்துவ ஆலோசனைபெறுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Uric Acid Reduce: யூரிக் அமிலம் அதிகரிக்க காரணம் என்ன? உடலில் இந்த பிரச்சனைக்கு காரணமே இதான்!

Image Source: Freepik

Read Next

சம்மரில் வயிற்று வலியால் அவதியா? உடனே விடுபட நீங்க செய்ய வேண்டியவை இதோ

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content