Fri Sep 11, 2026 | 11:09 PM IST

மாசம் தவறாமல் Parlour போய் Skin clean up செய்றீங்களா.? நல்லது கெட்டது தெரிஞ்சு போங்க மேடம்..

மாதம் தோறும் parlour போய் skin clean up செய்வது பாதுகாப்பானதா? அதனால் கிடைக்கும் நன்மைகள், பக்கவிளைவுகள் மற்றும் மருத்துவர் கருத்துக்கள் இங்கே.

இன்றைய வாழ்க்கை முறை காரணமாக, அழகு நிலையங்களில் (Beauty Parlour) முக பராமரிப்பு செய்வது பலரின் வழக்கமாகிவிட்டது. குறிப்பாக, மாதம் தோறும் skin clean up செய்வது பெண்கள் மற்றும் ஆண்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஆனால், இதனால் தோலுக்கு உண்மையில் நல்ல பலன்கள் கிடைக்கிறது? அல்லது நீண்டகால பாதிப்புகள் ஏற்படுகிறதா? இது குறித்து அறிய பதிவை முழுமையாக காண்போம். 

Clean Up செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

முக சுத்தம் (Deep Cleansing):

தூசி, வியர்வை, மாசு காரணமாக முகத்தில் தேங்கும் கழிவுகளை clean up முற்றிலும் அகற்றுகிறது.

Blackheads மற்றும் Whiteheads அகற்றம்:

மாதம் ஒருமுறை parlour clean up செய்தால், துளைகளில் அடைபட்டு இருக்கும் பிளாக்ஹெட்ஸ், வைட்ஹெட்ஸ் நீங்கி முகம் சுத்தமாகும்.

Blood Circulation மேம்பாடு:

Massage முறைகள் காரணமாக இரத்த ஓட்டம் சீராகி, முகம் இயற்கையாக பளபளக்கும்.

Stress Relief:

Parlour clean up செய்யும் போது உடலுக்கும், மனதுக்கும் ஓய்வு கிடைப்பது நிபுணர்கள் கூறும் முக்கிய பலன்களில் ஒன்று.

artical  - 2025-08-18T214640.836

Clean Up செய்வதால் ஏற்படும் பாதிப்புகள்

அதிக கெமிக்கல்:

சில parlour-களில் பயன்படுத்தப்படும் creams, bleach மற்றும் face pack-கள் தோலுக்கு பொருந்தாமல் allergy, சிவப்பு, இரைச்சல் ஏற்படுத்தக்கூடும்.

சரும பாதிப்பு:

அடிக்கடி clean up செய்தால், skin barrier பாதிக்கப்பட்டு, வெளிப்புற மாசு மற்றும் சூரியக்கதிர்களால் பாதிப்பு அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

Pimples மற்றும் Breakouts:

சிலருக்கு deep cleansing காரணமாக pores open ஆகி bacterial infection ஏற்பட்டு pimples அதிகரிக்கலாம்.

செலவு அதிகம்:

மாதம் தவறாமல் parlour clean up செய்வது செலவு அதிகம். இயற்கையான வீட்டுச் சிகிச்சை முறைகளும் இதற்குச் சிறந்த மாற்றாக இருக்கலாம்.

இந்த பதிவும் உதவலாம்: வெறும் 10 ரூபாய் இருந்தா போதும்.. நீங்களும் வெள்ளையாகலாம் டூட்! அது எப்படி.? ரகசியம் இங்கே.. 

மருத்துவர் கருத்து

* Normal skin உள்ளவர்கள் மாதம் ஒருமுறை clean up செய்தால் பாதிப்பு இருக்காது.

* Sensitive skin உள்ளவர்கள் parlour clean up அடிக்கடி செய்வது தவிர்க்க வேண்டும்.

* Chemical products பயன்படுத்துவதற்குப் பதிலாக natural products (aloe vera, cucumber, rose water) பயன்படுத்துவது பாதுகாப்பானது.

artical  - 2025-08-18T214809.288

வீட்டிலேயே செய்யக்கூடிய Natural Clean Up

* Steam: வீட்டிலேயே வெந்நீரில் steam எடுத்தால் pores open ஆகும்.

* Scrub: கடலைமாவு + பால் கலந்து scrub செய்தால் dead cells நீங்கும்.

* Face Pack: மஞ்சள் + தயிர் + எலுமிச்சை சேர்த்து mask போட்டால் skin glow கிடைக்கும்.

இறுதிச் சொல்..

மாதம் தோறும் parlour-க்கு சென்று clean up செய்வது முற்றிலும் தீங்கு தருவதில்லை. ஆனால், skin type-ஐ பொருத்து செய்வது மிக அவசியம். அடிக்கடி chemicals பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும். வீட்டில் இயற்கை முறையில் clean up செய்வது பாதுகாப்பானதும், குறைந்த செலவில் கிடைக்கும் வழிமுறையாகும்.

Read Next

மழைக்காலத்திலும் சருமம் பளபளக்க வேண்டுமா.? ரகசியம் உங்கள் உணவில்தான் உள்ளது.. இப்போதே மாற்றம் செய்யுங்கள்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content