Fri Sep 11, 2026 | 10:19 PM IST

Bloating பிரச்னைக்கு உடனடி Solution.! உணவில் இருக்கும் தீர்வு..

வயிறு உப்புச பிரச்னையை உடனடியாக குறைக்க சில உணவுகள் இங்களுக்கு உதவலாம். அந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம். 

இன்றைய வாழ்க்கைமுறையில் பெரும்பாலானோர் தினமும் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நலக் கோளாறு வயிறு உப்புசம். சாப்பிட்டதும் வயிற்றில் வீக்கம், படுத்துக்கொண்டாலும் குறையாத அசௌகரியம் போன்ற அறிகுறிகள் சிலரை பெரிதும் பாதிக்கின்றன. இதற்கான முக்கியக் காரணம் தவறான உணவுப் பழக்கவழக்கங்கள், சீரற்ற வாழ்வியல் மற்றும் சிலருக்கு ஒழுங்கற்ற செரிமானமே ஆகும். இப்படிபட்ட இந்த வயிறு உப்புச பிரச்னையை உடனடியாக குறைக்க சில உணவுகள் இங்களுக்கு உதவலாம். அந்த உணவுகள் என்னென்ன, அவற்றை எப்போது உட்கொள்ள வேண்டும் என்பதை இங்கே தெரிந்துக் கொள்வோம்.

வயிறு உப்புசம் ஏற்படுவதற்கான காரணம்

* அதிக எண்ணெய், மசாலா, காரமான உணவுகள் சாப்பிடுவது.

* எடை குறைக்கும் நோக்கில் மிக குறைவாக சாப்பிடுவது.

* சீரற்ற நேரத்தில் உணவு உட்கொள்வது.

* அதிகமான கார்பொனேட்டட் பானங்களை குடிப்பது.

* மாதவிடாய் காலத்திலும் வயிறு உப்புசம் ஏற்படும்.

* அதிகமாய் காய்கறிகள், பீன்ஸ் வகைகள் சாப்பிடுவதால் ஏற்படும்.

artical  - 2025-07-30T155923.422

வயிறு உப்புசத்தை உடனடியாக போக்கும் உணவுகள்

இஞ்சி

இஞ்சி ஒரு சிறந்த இயற்கை செரிமான ஊக்கி. இது வயிற்றில் வாயு சேராமல் தடுக்கும். ஒரு கப் இஞ்சி டீ குடிப்பது, அல்லது சாப்பாட்டிற்கு முன் சிறிது இஞ்சி துண்டுகளை மென்று சாப்பிடுவது, வயிறு உப்புசத்தை தணிக்க உதவும்.

சுக்கு

இஞ்சி போலவே சுக்கும் செரிமானத்தை மேம்படுத்தும் சக்தி கொண்டது. வாயுவை வெளியேற்றி வயிறு உப்புசத்தை நீக்கவும் பயனுள்ளதாக உள்ளது.

தயிர்

தயிரில் உள்ள புரோபயாடிக் பாக்டீரியாக்கள் (good bacteria) வயிற்றில் உள்ள சேதமடைந்த பாக்டீரியாக்களை சமநிலைப்படுத்தி வாயு ஏற்படுவதை தடுக்கின்றன.

சீரகம்

சீரகம் ஒரு அற்புதமான செரிமான மூலிகை. இது குடலின் இயக்கத்தைக் தூண்டி வாயு வெளியேற உதவுகிறது.

how-to-take-jeera-water-for-weight-loss-01

வெந்நீர்

வயிறு உப்புசமாக இருந்தால் வெந்நீர் குடிக்கவும். இது குடலின் இயக்கத்தை தூண்டி வயிறு உப்புசத்தை குறைக்க உதவும்.

புதினா

புதினா குளிர்ச்சியான தன்மைகளை கொண்டது. செரிமான சாறுகளை ஊக்குவிக்கிறது. இது வயிறு உப்புசத்தை தணிக்க உதவும்.

மேலும் படிக்க: வயிறு உப்புசத்தைப் போக்க டாக்டர் சொன்ன இந்த 10 உணவுகளை சாப்பிடுங்க

எலுமிச்சை சாறு

எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் ஆசிட் செரிமானத்துக்கு உதவுவதுடன், வயிற்றில் உள்ள அமிலத்தை சமநிலைப்படுத்துகிறது.

ஓமம்

இது இந்திய மரபு மருத்துவத்தில் செரிமான பிரச்னைகளுக்காக பரிந்துரைக்கப்படும் முக்கிய மூலிகை. இது வாயுவை உடனே வெளியேற்றும் சக்தி கொண்டது.

பப்பாளி

பப்பாளியில் உள்ள பப்பைன் செரிமானத்திற்கு மிக உதவியாக உள்ளது. இது வயிறு உப்புசத்தை தணிக்கிறது.

papaya-seeds-benefits-for-heart-health-02

முன்னெச்சரிக்கை

வயிறு உப்புசம் இல்லாமல் செரிமானம் சிறப்பாக நடைபெற, நாம் எடுத்துக்கொள்ளும் உணவை குறைந்த அளவில் எடுத்துக்கொண்டு, நன்றாக மென்று சாப்பிட வேண்டும். சாப்பாட்டிற்குப் பிறகு உடனே படுத்துக்கொள்ளாமல், சிறிது நடக்கவும். தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்து, ஒழுங்கான பயிற்சியும் யோகாவையும் நடைமுறைப்படுத்துவது முக்கியம்.

குறிப்பு

வயிறு உப்புசம் ஒரு சாதாரண பிரச்சனை போலத் தோன்றினாலும், அதை பராமரிக்காமல் விட்டால் அது நாளடைவில் மிகுந்த பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடாது. வீட்டிலேயே உள்ள இயற்கை உணவுகள் மூலம் நம் உடலை கவனிப்பது உடல் நலத்திற்கு சிறந்த வழி. இருப்பினும் இரண்டு நாள்களுக்கு மேல் இந்த பிரச்னை நீண்டால், உடனடியாக மருத்துவரை அணுகவும்.

Read Next

Chia Seeds: சியா விதையை எப்போது எப்படி சாப்பிடணும்? சரியான முறையை தெரிந்து கொள்ளுங்கள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content