Fri Sep 11, 2026 | 11:17 PM IST

Doctor Verified

உயர் இரத்த சர்க்கரை உங்கள் கண்களை எவ்வாறு பாதிக்கிறது? நீங்க தெரிந்து கொள்ள வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள் இங்கே

அதிக இரத்த சர்க்கரை அளவுகள் உடல் ரீதியான பிரச்சினைகளை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், உங்கள் கண்களையும் பாதிக்கின்றன. இவை கண்களிலும் பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். இதில் உயர் இரத்த சர்க்கரை அளவின் காரணமாக கண்களில் எந்தெந்த பிரச்சனைகள் ஏற்படும் என்பது குறித்து காணலாம்.

இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டது. இது உடலில் இரத்த சர்க்கரை அளவை அதிகரிப்பது மட்டுமல்லாமல், உடலின் பல பாகங்களை பாதிக்கக்கூடும். இந்நிலையில், நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பது மிகவும் முக்கியமாகும். ஆனால், இரத்த சர்க்கரை அளவு தொடர்ந்து அதிகமாக இருந்தால், அது உடலை பல வழிகளில் பாதிக்கக்கூடும்.

பெரும்பாலும், பலவீனமான கண்களே பார்வைக் குறைபாட்டிற்குக் காரணமாகும். ஆனால் நீரிழிவு நோயில் அதிக இரத்த சர்க்கரை அளவு இருக்கும் போது கண்களை நேரடியாகப் பாதிக்கும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் நீரிழிவு நோயில் அதிக இரத்த சர்க்கரையின் எந்த அறிகுறிகள் கண்களில் தோன்றும் என்பது குறித்து NIT ஃபரிதாபாத்தில் உள்ள சாந்த் பகத் சிங் மகாராஜ் அறக்கட்டளை மருத்துவமனையின் பொது மருத்துவர் டாக்டர் சுதிர் குமார் பரத்வாஜ் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

கண்களில் உயர் இரத்த சர்க்கரை அளவின் அறிகுறிகள்

டாக்டர் சுதிர் குமார் பரத்வாஜ் அவர்களின் கூற்றுப்படி, நீரிழிவு நோயில் அதிக இரத்த சர்க்கரை அளவு அடிக்கடி சிறுநீர் கழிப்பது, காயம் ஆறுவதில் தாமதம், சோர்வு மற்றும் அடிக்கடி தாகம் எடுப்பது மட்டுமல்லாமல், அது கண்களின் ஆரோக்கியத்தையும் பாதிக்கிறது. நீரிழிவு நோயால் கண்களில் ஏற்படும் பாதிப்புகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Diabetes eye health: எகிறும் சுகர் லெவலால் கண் ஆரோக்கியம் பாதிக்கப்படுமாம்! எப்படி தவிர்ப்பது?

மங்கலான பார்வை

உடலில் அதிக இரத்த சர்க்கரை அளவு இருக்கும் போது, கண்ணின் லென்ஸ் வீங்கி, மங்கலான பார்வைக்கு வழிவகுக்கிறது. இரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதால் நீரிழிவு நோயாளிகளுக்கு இந்தப் பிரச்சனை பெரும்பாலும் ஏற்படுகிறது.

கண்களுக்கு முன்பாக இருள் 

கண்களுக்கு முன்பாக இருள் தோன்றும் நிலையானது நீரிழிவு விழித்திரை நோயாகக் கருதப்படுகிறது. இது விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களுக்கு ஏற்படும் சேதத்தால் ஏற்படும் ஒரு நிலை. இந்த நிலை, கண்ணின் சில பகுதிகளில் பார்வையை முழுமையாக இழக்கச் செய்யலாம்.

தோற்றத்தில் ஏற்படும் மாற்றங்கள்

நீரிழிவு நோயில் இரத்த சர்க்கரை அளவுகளில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் காரணமாக, பெரும்பாலும் கண் லென்ஸின் வடிவம் மற்றும் நெகிழ்ச்சித்தன்மை பாதிக்கப்படுகிறது. இதனால் சில நேரங்களில் மங்கலான பார்வை போன்ற கண் பார்வை பிரச்சினைகள் ஏற்படலாம்.

மிதவைகள்

கண்களின் விழித்திரை சேதமடைந்தால், இரத்த நாளங்களிலிருந்து இரத்தம் அல்லது திரவம் கண்ணின் ஜெல்லி போன்ற பகுதிக்குள் கசிந்து, மிதவைகள் எனப்படும் சிறிய புள்ளிகள் அல்லது மிதக்கும் நூல்களாகத் தோன்றக்கூடும். இந்தப் பிரச்சனையானது உடலில் அதிக இரத்த சர்க்கரை அளவுகளால் ஏற்படுகிறது. இது ஆரம்பத்தில் லேசானதாகத் தோன்றலாம். ஆனால் உடனடியாக சிகிச்சையளிக்கப்படாவிட்டால், இந்த பிரச்சனை கடுமையானதாகிவிடும்.

இந்த பதிவும் உதவலாம்: கண் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் சர்க்கரை நோய்! உடனே தடுத்து நிறுத்த இத ஃபாலோ பண்ணுங்க

திடீர் பார்வை இழப்பு

நீரிழிவு நோயாளியின் உடலில் உயர் இரத்த சர்க்கரை பிரச்சனை நீடிக்கப்பட்டு, சிகிச்சையளிக்கப்படாவிட்டால், அது கண்களில் இரத்தக்கசிவு, திசு புண்கள் அல்லது விழித்திரைப் பற்றின்மை போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும். இதன் காரணமாக, நாம் திடீரென்று பார்வையை இழக்க நேரிடலாம்.

முடிவுரை

உயர் இரத்த சர்க்கரை அல்லது நீரிழிவு நோயானது பல்வேறு கண் பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. எனவே, இந்த அறிகுறிகளை சந்தித்தால், அவற்றைப் புறக்கணிக்காமல் உடனடியாக ஒரு கண் மருத்துவரை அணுகுவது அவசியமாகும். நீரிழிவு நோயாளிகள் எந்தவொரு கடுமையான பிரச்சினைகளையும் தடுக்க, வருடத்திற்கு இரண்டு முறை அல்லது ஒவ்வொரு 6 மாதங்களுக்கும் தங்கள் கண்களை தவறாமல் பரிசோதிப்பது முக்கியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: கண் பாதிப்பைத் தடுக்க நீரிழிவு நோயாளிகள் செய்ய வேண்டிய  விஷயங்கள் இதுதான்..

Image Source: Freepik

Read Next

உடல் கையாள்வதை விட அதிகளவு சர்க்கரை எடுத்துக் கொண்டதற்கான 4 தெளிவான அறிகுறிகள் என்னென்ன தெரியுமா? நிபுணர் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 26, 2025 17:08 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content