Sat Sep 12, 2026 | 12:04 AM IST

Expert

கைகளில் எடை வேகமா அதிகரிக்குதா? அதற்கு என்ன காரணங்கள் தெரியுமா? நிபுணர் தரும் விளக்கம்

மோசமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவதன் காரணமாக, கைகளில் எடை அதிகரிப்பதற்கு மிகப்பெரிய காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக, குப்பை மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிட்டால், அல்லது புகைபிடித்தால் மற்றும் மது அருந்தினால், உடலின் ஒரு பகுதியில் கொழுப்பு சேர வாய்ப்புள்ளது. இதில் கைகளில் வேகமாக எடை அதிகரிப்பதற்கான காரணங்களைக் காணலாம்.

இன்றைய நவீன காலத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. குறிப்பாக, உடல் எடை அதிகரிப்பு இன்று பலரும் சந்திக்கும் ஒரு பொதுவான உடல்நலப் பிரச்சனையாக மாறிவிட்டது. இதனால், உடலில் ஆங்காங்கே உள்ள சில பகுதிகளில் கொழுப்பு சேமிக்கப்பட்டு உடல் பருமன் பிரச்சனை ஏற்படுகிறது. சிலருக்கு, உடல் முழுவதும் கொழுப்பு சேராது. ஆனால் உடலின் ஒரு சில பகுதிகளில் சேரக்கூடும். சிலருக்கு, இடுப்பில், சிலருக்கு தோள்களில், முதுகு மற்றும் தொடைகளில் கொழுப்பு சேர்கிறது.

அதே சமயத்தில், சிலருக்கு கைகளில் கொழுப்பு சேர்கிறது. ஆனால், கைகளில் தொங்கும் கொழுப்பு அழகையும், தோற்றத்தையும் பாதிப்பது மட்டுமல்லாமல், பல்வேறு உடல்நல பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது. இவ்வாறு, உடலின் ஒரு பகுதியில் கொழுப்பு குவிந்து, அதைத் தொடர்ந்து புறக்கணித்தால், அவ்வாறு செய்வது சில நேரங்களில் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கக்கூடும். எனினும், கைகளில் கொழுப்பு சேர்வதற்குப் பின்னால், பல்வேறு காரணங்கள் உள்ளது. இவை பொதுவாக, உட்கார்ந்த வாழ்க்கை முறை அல்லது மோசமான வாழ்க்கை முறையால் ஏற்படுகிறது. சில நேரங்களில் இது மரபணு ரீதியாகவும் ஏற்படலாம்.

இந்த பதிவும் உதவலாம்: Arm Fat Reduce Yoga: கைகளில் தொங்கும் கொழுப்பைக் கரைக்க இந்த யோகாசனங்களை செய்யுங்க.

எனினும், இதைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக, அதைக் குறைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். இதில் டெல்லியில் உள்ள AS உடற்பயிற்சி மையத்தின் ஜிம் பயிற்சியாளரான சாய் ஸ்ரீவஸ்தவா அவர்கள், கைகளில் எடை அதிகரிப்பதற்குப் பின்னால் உள்ள காரணங்கள் என்ன என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

கைகளில் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்கள்

மோசமான வாழ்க்கை முறை

கைகளில் எடை அதிகரிப்பதற்கு முக்கிய மற்றும் மிகப்பெரிய காரணமாக மோசமான வாழ்க்கை முறை அமைகிறது. குறிப்பாக, குப்பை உணவுகள் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடுவது, புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது போன்றவற்றால் உடலின் ஒரு சில பகுதிகளில் கொழுப்பு தேங்கியிருக்க அதிக வாய்ப்புள்ளது. உண்மையில் மோசமான உணவுப் பழக்கவழக்கங்ளின் காரணமாக, உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளை கொழுப்பாக ஒரு பகுதியில் குவிக்கச் செய்கிறது. சில சமயங்களில் இந்த கொழுப்பானது கைகளிலும் சேர்வதற்கு அதிக வாய்ப்புள்ளது.

மரபியல்

பெரும்பாலான நேரங்களில், கை எடை அதிகரிப்பு என்பது உடல் ரீதியாக ஏற்படக்கூடிய பிரச்சனையின் அறிகுறியாக இருக்காது. இது மரபணு காரணிகளாலும் ஏற்படலாம். அதாவது, ஒருவரது மரபு சார்ந்த பெற்றோருக்கோ அல்லது குடும்ப உறுப்பினர்களுக்கோ இந்த பிரச்சனைகள் ஏற்பட்டால், அது அவர்களையும் பாதிக்கக்கூடும். எனினும், இதைக் குறைப்பதற்கு சில பயிற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: Arm Fat Exercise: கஷ்டமே வேணாம்! கை சதை குறைய இந்த உடற்பயிற்சி செய்யுங்க

உடல் செயல்பாடுகள் இல்லாமை 

சில சமயங்களில், உடல் செயல்பாடு மற்றும் உடற்பயிற்சி இல்லாததும் கைகளில் கொழுப்பு சேர வழிவகுக்கிறது. அதிலும் மோசமான வாழ்க்கை முறையைக் கொண்டிருப்பது, நிறைய குப்பை மற்றும் காரமான உணவுகளை உட்கொள்வது, உடல் ரீதியாகவும் சுறுசுறுப்பாக இல்லாமல் இருப்பது போன்றவை உங்கள் கைகளில் உடல் எடையை அதிகரிக்கக்கூடும். இவை உடலில் கலோரிகள் குவிவதற்கு வழிவகுக்கிறது. அதே நேரத்தில் கலோரிகளை எரிக்கும் செயல்முறை நிறுத்தப்படுகிறது. இவையே கைகளில் எடை அதிகரிக்க வழிவகுக்கிறது.

ஹார்மோன் சமநிலையின்மை 

கைகளில் கொழுப்பு படிதல் காரணமாக, சில சமயங்களில் உடலில் உள்ள ஹார்மோன் சமநிலையின்மையின் அறிகுறியாக இருக்கலாம். சில நேரங்களில், ஈஸ்ட்ரோஜன் மற்றும்டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்களில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இது சில நிபந்தனைகளாலும் ஏற்படலாம். இவை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக, பெண்களில் இந்த நிலை மாதவிடாய் நின்ற பிறகு, கர்ப்ப காலத்தில் மற்றும் சில சந்தர்ப்பங்களில், PCOS காரணமாக ஏற்படலாம்.

இவை அனைத்தும் கைகளில் எடை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக அமைகிறது.

பொறுப்புத்துறப்பு

இதில் வழங்கப்பட்ட தகவல்கள் பொதுவான தகவல் நோக்கங்களுக்காக மட்டுமே. எனினும், தனிப்பட்ட தகவல்களைப் பெற விரும்புபவர்கள் அல்லது புதிய முயற்சிகளைக் கையாள விரும்புபவர்கள் எப்போதும் தகுதிவாய்ந்த நிபுணரை அணுகுவது நல்லது.

இந்த பதிவும் உதவலாம்: Arm Fat : கையில் தொளதொளவென தொங்கும் சதையைக் குறைக்க இந்த 5 விஷயங்கள பாலோப் பண்ணுங்க!

Image Source: Freepik

Read Next

நீர் எடை பற்றி தெரியுமா? அதற்கான காரணங்களும், தடுப்பு முறைகளும்.. நிபுணரிடமிருந்து தெரிந்து கொள்ளுங்கள்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 02, 2025 20:00 IST

    Modified By : கௌதமி சுப்ரமணி
  • Oct 02, 2025 20:00 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content