Fri Sep 11, 2026 | 11:17 PM IST

PCOS, டயாபடிஸ்க்கு ஒரே தீர்வு.. வீட்டிலேயே ஈஸியா தயார் செய்த இந்த ஒரு ட்ரிங்ஸ் குடிங்க. நிபுணர் சொன்ன டிப்ஸ் இதோ

How can i control my pcos with diabetes: இன்று பலரும் PCOS உடன் நீரிழிவு நோய் தொடர்பான பிரச்சனைகளைச் சந்தித்து வருகின்றனர். இந்த நீரிழிவு நோய் சார்ந்த PCOS-ஐ நிர்வகிப்பதற்கு நிபுணர் பரிந்துரைத்த வீட்டிலேயே தயாரிக்கக்கூடிய பானம் குறித்து காணலாம்.

Best drinks for pcos and diabetes: அன்றாட வாழ்வில் பலரும் பல்வேறு உடல்நலம் சார்ந்த பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் நீரிழிவு நோய் மற்றும் PCOS அடங்கும். இவை இரண்டுமே பல்வேறு உடல் பிரச்சனைகளுக்கு வழிவகுக்ககூடியதாகும். இவை இரண்டும் சில பொதுவான காரணிகளால் ஏற்படக்கூடியதாகும். அதன் படி, PCOS மற்றும் நீரிழிவு நோயானது இன்சுலின் எதிர்ப்பு மற்றும் ஹார்மோன் சமநிலையின்மை போன்றவற்றுடன் தொடர்புடையவை ஆகும். PCOS ஆல் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீரிழிவு நோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கக்கூடிய இன்சுலின் எதிர்ப்பு PCOS-ன் ஒரு பொதுவான அம்சமாக விளங்குகிறது.

PCOS மற்றும் நீரிழிவு நோய்க்கான தொடர்பு

PCOS மற்றும் நீரிழிவு நோய் இரண்டுமே பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடியதாக இருப்பதால், இவை இரண்டுமே பொதுவான காரணிகளை உள்ளடக்கியதாகும்.

அதிக உடல் எடை

பிசிஓஎஸ் உள்ள பெண்கள் அதிக உடல் எடையுடன் காணப்படுவர். மேலும் இவர்கள் எளிதாக உடல் எடையைக் குறைக்க முடியாத சூழல் ஏற்படலாம். இவ்வாறு உடல் எடை அதிகமாக காணப்படுவது நீரிழிவு நோய்க்கான ஆபத்து காரணியாக அமைகிறது.

இந்த பதிவும் உதவலாம்: PCOS பிரச்சனையால் பெண்கள் உடலில் ஏற்படும் 5 முக்கிய மாற்றங்கள் என்னென்ன?

இன்சுலின் எதிர்ப்பு

இன்சுலின் எதிர்ப்பு என்பது இன்சுலின் செல்களைப் பயன்படுத்தும் திறனைப் பாதிக்கிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கலாம்.

ஹார்மோன் சமநிலையின்மை

பிசிஓஎஸ் உள்ள பெண்களுக்கு ஆண்ட்ரோஜன் எனப்படக்கூடிய ஆண் ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கிறது. இது இன்சுலின் எதிர்ப்பை ஏற்படுத்துவதால் நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கிறது.

PCOS உடன் நீரிழிவு நோய்க்கான வீட்டு வைத்தியம்

நீரிழிவு நோய் மற்றும் PCOS உடன் இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் உதவும் வகையில், மென்மையான ஆனால் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு பெயர் பெற்ற ஒரு மசாலா பொருளாக சிலோன் இலவங்கப்பட்டை அமைகிறது.

PCOS மற்றும் நீரிழிவு போன்ற நிலைமைகளை நிர்வகிப்பதற்கு ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. மேலும், சில நேரங்களில் எளிமையான வைத்தியங்கள் கூட ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இந்நிலையில், சிலோன் இலவங்கப்பட்டையின் பயன்பாடு கவனத்தை ஈர்க்கும் ஒரு இயற்கையான தந்திரமாக அமைகிறது. இவை இரத்த சர்க்கரை அளவுகள் மற்றும் ஒட்டுமொத்த நல்வாழ்வில் அதன் மென்மையான ஆனால் சக்திவாய்ந்த விளைவுகளுக்கு பெயர் பெற்ற ஒரு மசாலாவாக அமைகிறது.

நீரிழிவு அல்லது PCOS உடன் போராடுபவர்களாக இருப்பின் ஊட்டச்சத்து நிபுணர் பாலக் நாக்பால் அறிகுறிகளை நிர்வகிக்க உதவும் ஒரு எளிய ஆனால் சக்திவாய்ந்த தீர்வை வழங்குகிறார்.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு இலவங்கப்பட்டை தேநீர் குடிப்பது எவ்வாறு நன்மை பயக்கும்?

இந்த பானத்தைத் தயார் செய்வதற்கு, ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீரில் நான்கில் ஒரு பங்கு முதல் அரை தேக்கரண்டி சிலோன் இலவங்கப்பட்டையைச் சேர்த்து, உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன் குடிக்கலாம் என்று பகிர்ந்துள்ளார். மேலும் நிபுணரின் கூற்றுப்படி, இந்த இலவங்கப்பட்டை கலவையை தொடர்ந்து உட்கொள்வது இரத்த சர்க்கரை அதிகரிப்பைக் குறைப்பதாகக் கூறப்படுகிறது. மேலும் இது இன்சுலின் உணர்திறனை மேம்படுத்தவும், நாள் முழுவதும் மிகவும் சமநிலையானதாக மற்றும் உற்சாகமாக உணரவும் உதவுகிறது.

ஏன் சிலோன் இலவங்கப்பட்டை?

வழக்கமான இலவங்கப்பட்டை அல்லாமல், சிலோன் இலவங்கப்பட்டை ஏன் என்று பலரும் நினைப்பர். ஆம் உண்மையில், சிலோன் இலவங்கப்பட்டையானது உடலுக்கு மென்மையானது மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் நிறைந்ததாக அமைகிறது. குறிப்பாக, இது இரத்த சர்க்கரை அளவை ஆதரிப்பதிலும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இயற்கை மூலப்பொருளானது எளிமையானது, மலிவு விலையில் கிடைப்பதுடன், ஆழமான குணப்படுத்துதலையும் வழங்குகிறது. என்று கூறியுள்ளார்.

இந்த பதிவும் உதவலாம்: PCOS-ஐ இயற்கையாகவே நிர்வகிக்க தினமும் நீங்க செய்ய வேண்டிய பழக்கங்கள்

Image Source: Freepik

Read Next

Dragon Fruit Benefits: தினமும் ஒரு டிராகன் பழம் சாப்பிடுவதால் உடலுக்கு கிடைக்கும் 9 நன்மைகள்!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content