Thu Oct 29, 2026 | 10:52 AM IST

Doctor Verified

ஹேர் சீரம் தடவுவது உண்மையில் முடி உதிர்தலை நிறுத்துமா? நிபுணர்கள் கூறும் உண்மை..

ஹேர் சீரம் முடியை மென்மையாக்கி, வெளிப்புற சேதத்திலிருந்து பாதுகாக்கும். ஆனால் அது உண்மையில் முடி உதிர்தலை நிறுத்துமா? நிபுணர்கள் சொல்வதை இங்கே அறிக.
ஹேர் சீரம் தடவுவது உண்மையில் முடி உதிர்தலை நிறுத்துமா? நிபுணர்கள் கூறும் உண்மை..ஹேர் சீரம் தடவுவது உண்மையில் முடி உதிர்தலை நிறுத்துமா? நிபுணர்கள் கூறும் உண்மை..

ஆண்கள், பெண்கள் என அனைவருக்கும் பொதுவான பிரச்சனையாக உள்ள ஒன்று முடி உதிர்தல். தினசரி மாசுபாடு, மோசமான உணவுமுறை, மன அழுத்தம், ரசாயன அடிப்படையிலான ஹேர் தயாரிப்புகள் ஆகியவை முடி உதிர்தலின் முக்கிய காரணிகளாக உள்ளன. இந்த பிரச்சனையை சமாளிக்க பலரும் ஹேர் ஆயில், ஹேர் மாஸ்க், ஹேர் சீரம் போன்றவற்றைப் பயன்படுத்துகிறார்கள்.

ஆனால் கேள்வி என்னவென்றால் – ஹேர் சீரம் தடவுவது உண்மையில் முடி உதிர்தலை நிறுத்துமா? இதற்கான விளக்கத்தை குருகிராமில் உள்ள ஸ்கைனாய்ட் கிளினிக் தலைமை தோல் நிபுணர் டாக்டர் அதுலா குப்தா பகிர்ந்துள்ளார்.

how to grow hair in tamilhow to grow hair in tamil

ஹேர் சீரம் என்றால் என்ன?

முடியை பளபளப்பாகவும், சிக்கலின்றி பராமரிக்கவும் ஹேர் சீரம் பயன்படுகிறது. இது எண்ணெயைவிட இலகுவான அமைப்பைக் கொண்டது. வெப்ப சேதம், கரடுமுரடு தன்மை, உலர்ச்சி போன்றவற்றிலிருந்து முடியை பாதுகாக்கும்.

சந்தையில் கிடைக்கும் சீரம்களில் சிலிகான் அடிப்படையிலானவை. ஆர்கான், ஜோஜோபா, வைட்டமின் ஈ போன்ற இயற்கை எண்ணெய்கள் கொண்டவை. பெப்டைட்ஸ், பயோட்டின், காஃபின் அடங்கியவையும் உள்ளன. முடியின் தன்மையைப் பொறுத்து எண்ணெய் நிறைந்த முடி, உலர்ந்த முடி, சாதாரண முடி என தனித்தனியான சீரம்களும் கிடைக்கின்றன.

ஹேர் சீரம் முடி உதிர்தலை நிறுத்துமா?

டாக்டர் அதுலாவின் கூற்றுப்படி, இது ஒரு பொதுவான தவறான நம்பிக்கை. சீரம் தடவுவது மட்டும் முடி உதிர்தலை நிறுத்தாது. ஆனால், அது முடியை வெளிப்புற சேதத்திலிருந்து பாதுகாக்கும். வெப்ப ஸ்டைலிங் (straightener, curler) பயன்படுத்தும் முன் சீரம் தடவினால், வெப்பத்தால் நேரடியாக ஏற்படும் சேதத்தை குறைக்க முடியும்.

சீரம் முடியை மென்மையாக்குவதால், சீப்பும்போது அதிகப்படியான உடைப்பு குறையும். இதுவே, முடி உதிர்தல் குறைந்தது போல தோற்றமளிக்கும். அதாவது, ஹேர் சீரம் முடி உதிர்வதைத் தடுக்கும் மருந்து அல்ல, ஆனால் முடியை ஆரோக்கியமாக வைத்திருக்கும் உதவியாளன்.

இந்த பதிவும் உதவலாம்: பார்லர் பேஷியல்.. அழகுக்குப் பின் மறைந்து இருக்கும் ஆபத்துகள்.! டெர்மடாலஜிஸ்ட் எச்சரிக்கை.!

தினமும் ஹேர் சீரம் பயன்படுத்தலாமா?

தினமும் கனமான சிலிகான் அடிப்படையிலான சீரம் தடவக் கூடாது. எண்ணெய் பசை நிறைந்த தலைமுடி இருந்தால், தினசரி சீரம் பயன்படுத்த வேண்டாம்.

தடவிய சீரமுடன் தூங்குவது தவிர்க்கப்பட வேண்டும். அது அழுக்கு ஒட்டிக் கொண்டு முடி உதிர்வதை அதிகரிக்கக்கூடும். சீரமின் அளவு அதிகமாக இருக்கக் கூடாது. முடியின் நீளத்தில் மட்டும் தடவ வேண்டும்; உச்சந்தலையில் தடவக் கூடாது.

oil for dry hairoil for dry hair

நிபுணர்கள் பரிந்துரை

முடி உதிர்தலைத் தடுக்க ஹேர் சீரம் மட்டும் போதாது. அதற்கு, ஆரோக்கியமான உணவுமுறை, வாரத்தில் 1–2 முறை ஹேர் ஆயில் மசாஜ், அதிக வெப்ப ஸ்டைலிங் தவிர்ப்பு, இயற்கையான ஹேர் கேர் வழக்கங்கள் பின்பற்றப்பட வேண்டும்.

இறுதியாக..

ஹேர் சீரம் முடியை வெளிப்புற சேதத்திலிருந்து பாதுகாக்க உதவினாலும், முடி உதிர்தலை நிறுத்தும் ஒரே தீர்வு அல்ல. ஆரோக்கியமான வாழ்க்கை முறை, சரியான உணவுமுறை மற்றும் நிபுணர்களின் ஆலோசனையுடன் செய்யப்படும் ஹேர் பராமரிப்பு மட்டுமே நீண்டநாள் பலனைத் தரும்.

Disclaimer: இந்தக் கட்டுரையில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. ஹேர் சீரம் அல்லது பிற தயாரிப்புகளைப் பயன்படுத்துவதற்கு முன், உங்கள் மருத்துவர் அல்லது தோல் நிபுணரின் ஆலோசனையைப் பெறுவது அவசியம்.

Read Next

→ என்ன செய்தாலும் முடி உதிர்வு நிற்க வில்லையா? நிபுணர் சொன்ன இந்த ட்ரிங்க் குடிங்க.. முடி ஸ்ட்ராங்கா வளரும்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 26, 2025 21:50 IST

    Published By : Ishvarya Gurumurthy