Fri Sep 11, 2026 | 11:21 PM IST

Doctor Verified

UTI பிரச்சனையிலிருந்து உடனடி நிவாரணம் பெற இந்த ஒரு ஹெர்பல் டீ குடிங்க.. மருத்துவர் தரும் டிப்ஸ்

பெரும்பாலான மக்கள் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதிலிருந்து நிவாரணம் பெற, மூலிகை தேநீர்களைப் பயன்படுத்தலாம். இதில் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுக்களிலிருந்து விடுபட உதவும் மூலிகை தேநீர் குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

இன்றைய பரபரப்பான கால கட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை, உணவு முறை மற்றும் உடல் செயல்பாடுகள் இல்லாதது போன்றவை பல பிரச்சனைகளுக்கு வழிவகுக்கிறது. இதில் மக்கள் பெரும்பாலும் UTI அல்லது வேறு சில உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். பொதுவாக, UTI என்பது சிறுநீர் பாதையில் ஏற்படும் பாக்டீரியா தொற்றைக் குறிக்கிறது. இதன் காரணமாக, அடிக்கடி சிறுநீர் கழித்தல், இடுப்பு வலி, கடுமையான துர்நாற்றம் மற்றும் எரியும் உணர்வு போன்ற பல பிரச்சனைகள் ஏற்படலாம்.

இதிலிருந்து நிவாரணம் பெற, பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்த ஆயுர்வேத மூலிகைகளால் செய்யப்பட்ட மூலிகை தேநீர் தயார் செய்து உட்கொள்ளலாம். இது குறித்து, யோகா, இயற்கை மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் ஆயுர்வேத நிபுணர், மேவார் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் ஜெய்ப்பூரில் உள்ள பாபுநகரில் உள்ள இயற்கை மருத்துவ மருத்துவமனையின் மூத்த மருத்துவர் டாக்டர் கிரண் குப்தா அவர்கள், UTI பிரச்சனைகளிலிருந்து நிவாரணம் பெற மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார்.

UTI பிரச்சனைக்கு மூலிகை தேநீர்

டாக்டர் கிரண் குப்தா அவர்களின் கூற்றுப்படி, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் (UTIs) இப்போதெல்லாம் ஒரு பொதுவான பிரச்சனையாக மாறிவிட்டன. இது பெரும்பாலான பெண்களைப் பாதிக்கிறது. இது பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது. இதிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, உவா உர்சி இலைகள், பூண்டு மற்றும் உலர்ந்த செம்பருத்தி இதழ்களிலிருந்து தயாரிக்கப்பட்ட மூலிகை தேநீர் அருந்துவது நன்மை பயக்கும். இந்த மூலிகைகள் நுண்ணுயிர் எதிர்ப்பு மற்றும் டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளன. இவை UTI களைப் போக்க பெரிதும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: தும்மும்போது சிறுநீர் வெளியேறுகிறதா.? அது கருப்பைச் சுருக்கத்தின் அறிகுறியாக இருக்கலாம்.. சாதாரணமா விட்ராதீங்க..

பூண்டில் உள்ள பண்புகள்

பூண்டில் அல்லிசின் எனப்படும் ஒரு கலவை உள்ளது. இவை இயற்கையான நுண்ணுயிர் எதிர்ப்பு, அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது பாக்டீரியாவைக் குறைக்க உதவுகிறது. இது அசௌகரியம் மற்றும் வீக்கத்தைத் தணிக்கவும், சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளிலிருந்து (UTIs) நிவாரணம் அளிக்கவும் உதவுகிறது.

செம்பருத்தி இதழ்கள்

செம்பருத்தி வைட்டமின் சி, ஆக்ஸிஜனேற்றிகள், பாலிபினால்கள் நிறைந்துள்ளது. மேலும் இதில் இயற்கையான டையூரிடிக் பண்புகள் உள்ளன. இது சிறுநீர் பாதையில் பாக்டீரியா தொற்றுகளைக் குறைக்க உதவுகிறது மற்றும் சிறுநீர் பாதையை சுத்தம் செய்வதன் மூலம் சிறுநீர் உற்பத்தியை ஊக்குவிக்கிறது.

உவா உர்சி இலைகள்

பியர்பெர்ரி என்றும் அழைக்கப்படும் உவா உர்சி இலைகள் பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது. இது சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுக்கு நன்மை பயக்கும். இதில் அர்புடின் எனப்படும் ஒரு கலவை உள்ளது. இது சிறுநீர் திசுக்களின் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் மற்றும் கிருமி நாசினிகளைக் கொண்டுள்ளது. கூடுதலாக, இது டையூரிடிக் பண்புகளைக் கொண்டுள்ளது. இது சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும், சிறுநீர் அமைப்பை நச்சு நீக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: பெண்களுக்கு மீண்டும் மீண்டும் ஏற்படும் சிறுநீர் பாதை தொற்றுகள் - காரணங்கள் மற்றும் குறைக்கும் முறைகள்

UTI நிவாரணத்திற்கு மூலிகை தேநீர் தயாரிப்பது எப்படி?

செம்பருத்தி இதழ்கள், ஊவா உரசி இலைகள் மற்றும்பூண்டு பற்கள் போன்றவற்றிலிருந்து தயாரிக்கப்படும் மூலிகை தேநீர் உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும். இதற்காக, இரண்டு பூண்டு பற்களை நசுக்கி 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.

இப்போது பூண்டு, 1 டீஸ்பூன் செம்பருத்தி இதழ்கள் மற்றும் 1 டீஸ்பூன் உவா உர்சி இலைகள் போன்றவற்றை 1 கப் வெந்நீரில் சேர்த்து 10 முதல் 12 நிமிடங்கள் ஊற வைக்கலாம். அதன் பிறகு, இந்த தேநீரை வடிகட்டி குடிக்க வேண்டும். 7-14 நாட்களுக்கு மேல் உவா உர்சி இலைகள் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.

UTI-யிலிருந்து நிவாரணம் பெற என்ன செய்ய முடியும்?

சிறுநீர் பாதை நோய்த்தொற்று பிரச்சனையிலிருந்து நிவாரணம் பெறுவதற்கு, அதிக இனிப்பு மற்றும் வறுத்த உணவுகளை சாப்பிடுவதைத் தவிர்ப்பது அவசியமாகும். மேலும், 2-3 லிட்டர் தண்ணீரை தவறாமல் குடிக்க வேண்டும். இது இயற்கையாகவே உடலிலிருந்து நச்சுகளை அகற்ற உதவுகிறது.

முடிவுரை

சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளைப் போக்க, செம்பருத்தி இதழ்கள், உவா உர்சி இலைகள் மற்றும் பூண்டு ஆகியவற்றிலிருந்து தயாரிக்கப்பட்ட மூலிகை தேநீரை உட்கொள்ளலாம். இது பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. எனினும், ஏதேனும் அசௌகரியம் ஏற்பட்டால் இதை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும். கூடுதலாக, கடுமையான சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் ஏற்பட்டால் மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: வயிறு எரிச்சலை வேகமாக தணிக்கும் 10 சிறந்த உணவுகள் – மருத்துவர் பரிந்துரை..

Image Source: Freepik

Read Next

தொண்ட கறகறனு இருக்கா.? இது ஒன்னு போதும்.. மருந்து வேண்டாம்.! மருத்துவர் பரிந்துரை..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 26, 2025 23:33 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content