Fri Sep 11, 2026 | 10:44 PM IST

Doctor Verified

எலும்பு வலுவாக இருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்.. மருத்துவர் சிவராமன் பரிந்துரை..

மருத்துவர் சிவராமன் கூறும் சித்த மருத்துவ அடிப்படையிலான உணவுப் பரிந்துரைகள். எலும்பை வலுவாக்கும் பால், மோர், கேழ்வரகு, பிரண்டைக் கீரை போன்ற உணவுகள் பற்றி முழுமையான விளக்கம் இங்கே.

சித்த மருத்துவமும் நம் பாரம்பரிய உணவுகளின் ஆரோக்கிய நன்மைகளும் பற்றிய விழிப்புணர்வை பரப்பி வருபவர் மருத்துவர் சிவராமன். ஹெல்தி தமிழ்நாடு என்ற யூடியூப் சேனலில் அவர் சமீபத்தில் பகிர்ந்த வீடியோவில், “எலும்புகளை வலுவாக்க எத்தகைய உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்?” என்ற கேள்விக்கு விரிவான பதிலை அளித்துள்ளார்.

அவர் கூறியதாவது, “நம்முடைய உடல் கட்டமைப்பை ஆதரிக்கும் முக்கிய உறுப்பு எலும்புகள். அதனை பாதுகாப்பாகவும் வலுவாகவும் வைத்துக்கொள்ள வேண்டும். எலும்புகளுக்குத் தேவையான முக்கிய சத்து கால்சியம். கால்சியம் குறைந்தால் எலும்பு பலவீனமடையும். குறிப்பாக பெண்களுக்கு 49–50 வயதிற்குப் பிறகு கால்சியம் அளவு குறைவதற்கான வாய்ப்பு அதிகம்” என்றார்.

Video Link: https://youtu.be/ytlP030bgq0

அவரின் கூற்றுப்படி, வளர்ந்துவரும் குழந்தைகளில் “கால் வளைகிறது”, “உடல் ஒல்லியாக இருக்கிறது” போன்ற பிரச்சனைகள் கால்சியம் குறைவினால் ஏற்படும். இதை சரிசெய்ய தினசரி உணவில் கால்சியம் நிறைந்த பொருட்கள் சேர்க்க வேண்டும் என அவர் அறிவுறுத்துகிறார்.

milk benefits for bone

கால்சியம் நிறைந்த உணவுகள்

பால் மற்றும் மோர்

பால் மற்றும் மோரில் அதிக அளவு கால்சியம் உள்ளது. சர்க்கரை வியாதி அல்லது உடல் பருமன் உள்ளவர்கள் பாலைத் தவிர்த்து, தினமும் ஒரு டம்பளர் மோர் குடிப்பது நல்லது. ஒரு டம்பளர் மோரில் சுமார் 280 மில்லிகிராம் கால்சியம் உள்ளதாக அவர் கூறுகிறார்.

கேழ்வரகு 

கேழ்வரகு ஒரு சிறந்த கால்சியம் மூலமாகும். இதை புட்டு, அடை, கஞ்சி, உருண்டை போன்ற வடிவங்களில் தினசரி உணவில் சேர்க்கலாம். இது எலும்புகளை வலுவாக்கவும், மூட்டு வலிகளைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த பதிவும் உதவலாம்: ஒவ்வொரு உணவிலும் புரதம் ஏன் அவசியம்.? டாக்டர் சந்தோஷ் ஜேக்கப் விளக்கம்..

பிரண்டைக் கீரை

பிரண்டைக் கீரை, தமிழில் ‘வஜ்ஜிரவல்லி’ என்றும் அழைக்கப்படுகிறது. வஜ்ஜிரம் என்றால் உறுதியாக இருப்பதைக் குறிக்கிறது. அதேபோல இந்த கீரையும் எலும்பை உறுதியாக வைத்திருக்க உதவுகிறது. இதை துவையல் வடிவில் அரைத்து சாதத்துடன் சாப்பிடலாம்.

இறைச்சி வகைகள்

மருத்துவர் சிவராமன் கூறுகையில், “மீன் மற்றும் கருப்புக் கோழி இறைச்சி போன்றவை எலும்புகளையும் தசைகளையும் வலுவாக்க உதவுகின்றன” என்று சித்த மருத்துவக் குறிப்புகளைச் சுட்டிக்காட்டுகிறார். குறிப்பாக கருப்புக் கோழி இறைச்சி, சித்த மருத்துவத்தில் எலும்பு மற்றும் தசை நலம் காக்கும் சிறந்த உணவாக கருதப்படுகிறது.

1

சிறப்பு பரிந்துரை

வெயில் காலங்களில் மோர் எடுத்துக்கொள்ளுவது உடல் வெப்பத்தை குறைத்து, எலும்பை வலுவாக்கும் சிறந்த வழி என மருத்துவர் கூறுகிறார். மேலும், தரையின் அடியில் விளையும் கிழங்குகளில் சுண்ணாம்புச் சத்து அதிகமாக இருப்பதால், அவையும் எலும்பு நலனுக்கு உதவும்.

இறுதியாக..

எலும்புகளை வலுவாக வைத்திருக்க வேண்டுமானால், தினசரி உணவில் கால்சியம் நிறைந்த உணவுகளைச் சேர்க்க வேண்டும். பால், மோர், கேழ்வரகு, பிரண்டைக் கீரை, மீன் போன்ற இயற்கை உணவுகள் எலும்பின் வலிமையையும் நீடித்த ஆரோக்கியத்தையும் தருகின்றன. மருத்துவர் சிவராமனின் இந்த பரிந்துரைகள், நம்முடைய பாரம்பரிய உணவின் சக்தியையும் சித்த மருத்துவத்தின் அறிவியலையும் மீண்டும் உறுதிப்படுத்துகின்றன.

Disclaimer: இந்தக் கட்டுரை, மருத்துவர் சிவராமனின் பொதுவான மருத்துவ ஆலோசனைகளை அடிப்படையாகக் கொண்டது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் கல்வி நோக்கத்திற்காக மட்டுமே. எந்தவொரு சிகிச்சையையோ உணவுமுறையையோ பின்பற்றுவதற்கு முன், உங்கள் தனிப்பட்ட உடல்நிலை அடிப்படையில் மருத்துவரை அணுகவும்.

Read Next

காலை உணவில் நீங்க ஒருபோதும் செய்யக்கூடாத 5 தவறுகள்.. டாக்டர் ஹன்சாஜி விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

Ishvarya Gurumurthy

Ishvarya Gurumurthy

துணை ஆசிரியர்

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Oct 15, 2025 11:54 IST

    Published By : Ishvarya Gurumurthy

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content