Fri Sep 11, 2026 | 10:17 PM IST

Custard apple for skin: முகம் தங்கம் போல ஜொலிக்கணுமா? சீதாப்பழம் ஒன்னு போதுமே

Benefits of custard apples for skin: சருமத்தைப் பொலிவாக்கவும், பளபளப்பாக்கவும் இயற்கையான வைத்தியங்களைக் கையாள்வது அவசியமாகும். இதில் சருமத்தை அழகாக வைப்பதற்கு சீதாப்பழம் உதவுகிறது. அதன் படி, சருமத்திற்கு சீதாப்பழம் தரும் நன்மைகள் மற்றும் பயன்படுத்தும் முறைகளைக் காணலாம்.

How custard apples gives glowing skin: இன்றைய காலகட்டத்தில் மோசமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமற்ற உணவுமுறை காரணமாக பலரும் பலதரப்பட்ட முயற்சிகளைக் கையாள்கின்றனர். இதில் சருமம் சார்ந்த பிரச்சனைகளும் அடங்கும். அவ்வாறு வறண்ட சருமம், கரும்புள்ளிகள், ஈரப்பதம் இல்லாமல் இருப்பது உள்ளிட்ட பல்வேறு சரும பிரச்சனைகள் அடங்கும். இந்நிலையில், இது போன்ற பிரச்சனைகளிலிருந்து விடுபட பலரும் இரசாயனங்கள் கலந்த பொருள்களை வாங்கி பயன்படுத்துகின்றனர் அல்லது பார்லருக்குச் சென்று சரும பராமரிப்புப் பொருள்களை வாங்கி பயன்படுத்துவர்.

ஆனால் இது மேலும் சில பாதிப்புகளை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்நிலையில் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த இயற்கையான வழிமுறைகளைக் கையாள்வது நல்லது. மேலும், இது சருமத்திற்கு பாதிப்புகளை ஏற்படுத்தாததாகவும் அமைகிறது. அந்த வகையில் சரும ஆரோக்கியத்திற்குப் பல்வேறு வகையான வைட்டமின்கள், ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் இன்னும் பிற முக்கிய தாதுக்கள் நிறைந்த சீதாப்பழத்தை பயன்படுத்தலாம். இதில் சரும பராமரிப்பு வழக்கத்தில் சீதாப்பழத்தை பயன்படுத்துவது எப்படி மற்றும் அதற்கான நன்மைகளைக் காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: சீத்தா பழ பிரியர்களே இந்த விஷயம் உங்களுக்கு தெரியுமா? உஷார்..

சருமத்திற்கு சீதாப்பழம்

சீதாப்பழத்தில் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் பி6, பொட்டாசியம், இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. மேலும், இதில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இவை செரிமான ஆரோக்கியத்திற்கும், முழுமை உணர்வை அளிக்கவும், எடையிழப்புக்கும் உதவுகிறது. சீதாப்பழத்தை சருமத்திற்குப் பயன்படுத்துவதன் மூலம் பளபளப்பான மற்றும் அழகான தோற்றத்தைப் பெறலாம்.

சருமத்திற்கு சீதாப்பழம் தரும் நன்மைகள்

ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்த

சீதாப்பழத்தில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் அதிகளவு இருப்பதால், இது செல்லுலார் சேதத்திற்கு எதிராக ஒரு சிறந்த தேர்வாக அமைகிறது. மேலும், இதில் பல்வேறு வகையான சேர்மங்கள் உள்ளது. இந்த சேர்மங்கள் சருமத்தை சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. ஏனெனில், ஃப்ரீ ரேடிக்கல்களால் முன்கூட்டிய வயதான மற்றும் நாள்பட்ட நோய்கள் ஏற்படலாம். ஆய்வில் வைட்டமின் சி மிகவும் இன்றியமையாததாக அமைகிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதிக்கு மிகவும் அவசியமாகும். கொலாஜன் உற்பத்தியை அதிகரிப்பதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது.

அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்த

சீதாப்பழத்தில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது. இது சருமம் நிவாரணம் மற்றும் அமைதியடைய உதவுகிறது. ஆய்வு ஒன்றில், சீதாப்பழத்தில் அழற்சி எதிர்ப்பு விளைவுகளுக்கு பங்களிக்கும் ஃபிளாவனாய்டுகள் மற்றும் பிற உயிரியக்க பொருட்கள் உட்பட பல கூறுகள் உள்ளது. வலுவான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஃபிளவனாய்டுகள் சேதப்படுத்தும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்குகிறது. இது முகப்பரு, அரிக்கும் தோலழற்சி மற்றும் தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க உதவுகிறது. இது சருமத்தின் பொதுவான எரிச்சலைக் குறைக்கிறது. மேலும், அமைதியான மற்றும் ஆரோக்கியமான தோற்றத்திற்கு வழிவகுக்கிறது.

இந்த பதிவும் உதவலாம்: Custard Apple Myths: இந்த 4 பிரச்சனை இருப்பவர்கள்… சீதாப்பழம் சாப்பிடலாமா?

சருமத்தை ஈரப்பதமாக்குவதற்கு

சருமத்திற்கு சீதாப்பழம் ஒரு இயற்கையான ஈரப்பதமூட்டியாகச் செயல்படுகிறது. அதாவது இது ஈரப்பதத்தை ஈர்க்க வைக்கவும், தக்கவைக்கவும் உதவுகிறது. இது அதிக நீர்ச்சத்துக்கள் கொண்டதாகவும், தேவையான நீரேற்றத்தை வழங்குவதன் மூலம் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும், பொலிவாகவும் வைக்க உதவுகிறது. இதற்கு சீதாப்பழத்தை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஃபேஸ் மாஸ்க்காகப் பயன்படுத்தலாம். இது இயற்கையான ஈரப்பதமூட்டும் பண்புகளிலிருந்து பயனடையலாம்.

புற ஊதா கதிர்களில் இருந்து பாதுகாக்க

சீதாப்பழத்தில் உள்ள சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் சருமத்தை புற ஊதா கதிர்களின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. இதில் உள்ள அதிகளவிலான வைட்டமின் சி கொலாஜன் உருவாவதை ஊக்குவிக்கிறது. இது சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை பாதுகாக்கிறது. கொலாஜன் ஆனது சருமத்தின் நெகிழ்ச்சி மற்றும் உறுதியை பாதுகாக்க தேவையான புரதமாகும். இதன் மூலம் சூரியக்கதிர்களால் சேதமடைந்த சருமத்தை குணப்படுத்தவும், முன்கூட்டியே வயதாவதைத் தடுக்கவும் உதவுகிறது.

இந்த தகவல் உங்களுக்கு பிடித்திருக்கும் என நம்புகிறோம். இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் பகிருங்கள். ஆரோக்கியம் தொடர்பான இதுபோன்ற பல சுவாரஸ்ய தகவல்களுக்கு தொடர்ந்து ஒன்லி மை ஹெல்த் உடன் இணைந்திருங்கள், மேலும் OnlyMyHealth பேஸ்புக் மற்றும் இன்ஸ்டா பக்கத்தை பின்தொடர இந்த இணைப்பை கிளிக் செய்யுங்கள்- Onlymyhealth Tamil FacebookOnlymyhealth Tamil Instagram

இந்த பதிவும் உதவலாம்: Custard Apple Leaves: சரும (ம) கூந்தல் பிரச்சினையை சரிசெய்ய சீதாப்பழ இலையை எப்படி பயன்படுத்துங்க!

Image Source: Freepik

Read Next

Coconut oil on face: இரவு தூங்கும் முன் முகத்தில் தேங்காய் எண்ணெய் தடவுவதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் தெரியுமா?

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.


    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content
    Medically reviewed content
    200+ medical reviewers in network
    17 Years of Trusted Health Content