Sat Sep 12, 2026 | 12:04 AM IST

Expert

கிரீன் டீ குடிப்பதால் அடிக்கடி ஏற்படும் ஒற்றைத் தலைவலி அபாயத்தைக் குறைக்க முடியுமா? நிபுணர் தரும் பதில்

கிரீன் டீயில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பிற அத்தியாவசிய கூறுகள் உள்ளது. இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நன்மை பயக்கும். ஆனால், கிரீன் டீ குடிப்பது ஒற்றைத் தலைவலியைக் குறைக்குமா? அவ்வாறெனில், இது ஒற்றைத் தலைவலியைக் குறைக்க எவ்வாறு உதவுகிறது என்பது குறித்த விவரங்களைக் காணலாம்.

இன்றைய காலத்தில் அன்றாட வாழ்க்கையில் பலரும் பல உடல்நலப் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். இதில் ஒன்றாக விளங்கும் ஒற்றைத் தலைவலி என்பது வெறும் தலைவலி மட்டுமல்ல. இது மில்லியன் கணக்கான மக்களின் அன்றாட வாழ்க்கையைப் பாதிக்கும் ஒரு நாள்பட்ட நரம்பியல் நிலையைக் குறிப்பதாகும். இது அடிக்கடி கடுமையான தலைவலி, ஒளி மற்றும் ஒலிக்கு உணர்திறன், வாந்தி மற்றும் சோர்வு போன்ற அறிகுறிகளைக் கொண்டுள்ளது. இதற்கு மன அழுத்தம், தூக்கமின்மை, ஹார்மோன் மாற்றங்கள், வானிலை மற்றும் உணவு போன்றவை தூண்டுதல்களாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், மக்கள் ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் பெற பல வீட்டு வைத்தியங்களை முயற்சி செய்கிறார்கள்.

பலர் கிரீன் டீ குடிப்பது அவர்களுக்கு நிவாரணம் தருவதாக உணர்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், கிரீன் டீ உண்மையில் ஒற்றைத் தலைவலியைக் குறைக்கிறதா என்ற குழப்பம் அனைவருக்கும் எழுகிறது. இது குறித்த தகவல்களைப் பெற, ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஏஞ்சல்கேர்-ஏ ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கிய மையத்தின் இயக்குநர் உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் அவர்கள் சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். அது பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

இந்த பதிவும் உதவலாம்: எவ்ளோ வயசானாலும் இளமையா இருக்கணுமா? இந்த ஐந்து ட்ரிங்ஸ் குடிங்க

கிரீன் டீ குடிப்பது ஒற்றைத் தலைவலியின் அதிர்வெண்ணைக் குறைக்குமா?

உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் அவர்களின் கூற்றுப்படி, கிரீன் டீயில் பாலிபினால்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் உள்ளது. இவை ஒற்றைத் தலைவலியைத் தூண்டும் நரம்பியல் மற்றும் ஹார்மோன் காரணிகளை ஓரளவிற்கு கட்டுப்படுத்த உதவுகின்றன. மேலும், கிரீன் டீயில் ஃபிளாவனாய்டுகள் மற்றும் எல்-தியானைன் எனப்படும் அமினோ அமிலமும் உள்ளது.

இந்த கூறுகள் அனைத்துமே மன அழுத்தத்தைக் குறைக்க உதவுகின்றன. மேலும் இவை இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. கூடுதலாக, இது மூளையில் உள்ள நியூரோட்ரான்ஸ்மிட்டர்களின் சமநிலையை உருவாக்கவும் பராமரிக்கவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இது தவிர, இதில் ஒரு சிறிய அளவு காஃபினும் உள்ளது. சில சந்தர்ப்பங்களில் இது ஒற்றைத் தலைவலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. எனினும், அதிகப்படியான காஃபின் ஒற்றைத் தலைவலியைத் தூண்ட வாய்ப்புள்ளது.

கிரீன் டீ குடிப்பது அனைவருக்கும் பாதுகாப்பானதா?

கிரீன் டீ என்பது ஒரு இயற்கையான பானமாகும். எனவே இது பெரும்பாலான மக்களுக்கு பாதுகாப்பான பானமாகக் கருதப்படுகிறது. எனினும், இந்த டீ அருந்துவது சிலருக்கு வயிற்று உபாதையை ஏற்படுத்தலாம். இதன் காரணமாக, தூக்கமின்மை அல்லது இதயத் துடிப்பு அதிகரிப்பது போன்ற பிரச்சனைகளையும் ஏற்படுத்துகிறது.

குறிப்பாக வெறும் வயிற்றில் அல்லது அதிக அளவில் உட்கொண்டால் இந்த பிரச்சனைகள் ஏற்படக்கூடும்.எனவே ஒற்றைத் தலைவலிபாதிக்கப்பட்டவர்கள் குறைந்த அளவில் கிரீன் டீயை உட்கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, இந்த உடல்நலப் பிரச்சனையைக் கொண்டிருப்பவர்கள் முதலில் தங்கள் மருத்துவரை அணுக அறிவுறுத்தப்படுகிறார்கள்.

இந்த பதிவும் உதவலாம்: தவறுதலாக கூட சிலர் எந்த சூழ்நிலையிலும் கிரீன் டீ குடிக்கக்கூடாது - ஏன் தெரியுமா?

நிபுணர் அறிவுரை

உணவியல் நிபுணர் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் அர்ச்சனா ஜெயின் அவர்கள்,”ஒற்றைத் தலைவலிக்கு கிரீன் டீ ஒரு நிரந்தர சிகிச்சை அல்ல, ஆனால் அது ஒரு பயனுள்ள ஊடகமாக இருக்கலாம். ஒருவர் குறைந்த அளவில் தொடர்ந்து அதை உட்கொண்டால், அதன் நேர்மறையான விளைவுகளைக் காணலாம்” என குறிப்பிடுகிறார். கிரீன் டீயில் காணப்படும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஒற்றைத் தலைவலியின் போது ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

முடிவுரை

ஒற்றைத் தலைவலி ஒரு கடுமையான பிரச்சனை ஆகும். மக்கள் பலரும் இந்த கடுமையான தலைவலியால் அவதிப்படுகிறார்கள். இந்த ஒற்றைத் தலைவலியின் அதிர்வெண்ணைக் குறைப்பதற்கு கிரீன் டீ பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் கிரீன் டீயை மட்டும் நம்பியிருப்பது நல்லதல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். சரியான வாழ்க்கை முறை, மன அழுத்த மேலாண்மை மற்றும் மருத்துவரின் ஆலோசனையுடன் கிரீன் டீயின் நுகர்வு அதிக நன்மை பயக்கும்.

இந்த பதிவும் உதவலாம்: Green Tea vs Lemon Water – உங்கள் சருமத்தை காப்பாற்றும் சாம்பியன் யார்.?

Image Source: Freepik

Read Next

நவராத்திரி விரதம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்குமா.? நிபுணர் சொல்லும் சரியான வழிகள்.!

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Sep 21, 2025 21:06 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content