Fri Sep 11, 2026 | 09:31 PM IST

Expert

வீக்கத்தைக் குறைக்க எளிதில் கிடைக்கும் இந்த ஒரு பொருள் மட்டும் போதும்.. நிபுணர் தரும் டிப்ஸ்

கற்பூரத்தில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகள் போன்றவை நிறைந்துள்ளன. இவை சருமத்திற்கு பல்வேறு நன்மைகளைக் கொண்டுள்ளன. எனவே, கற்பூரத்தைப் பயன்படுத்துவது எவ்வாறு தோல் வீக்கத்தைக் குறைக்கிறது என்பது குறித்து நிபுணர் பகிர்ந்துள்ளதைக் காண்போம்.

பொதுவாக, அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய சில பொருள்களின் உதவியுடனே, நாம் சந்திக்கும் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண முடியும். அவ்வாறே, நம் வீடுகளில் நாம் பயன்படுத்தக்கூடிய கற்பூரம் பெரும்பாலும் வீட்டு வைத்தியத்தில் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, கற்பூரம் பாக்டீரியா எதிர்ப்பு, பூஞ்சை எதிர்ப்பு மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளிட்ட பல்வேறு தனித்துவமான பண்புகளுக்கு பெயர் பெற்றதாகும். பொதுவாக, கற்பூரத்தைப் பயன்படுத்துவது தோல் தொற்றுகளைத் தடுக்கவும், குறைக்கவும் பெரிதும் உதவுகிறது.

மேலும், கற்பூரத்தின் உதவியுடன் அரிப்புகளைக் குறைக்கவும், பூச்சிக் கடிகளின் விளைவுகளைக் குறைக்கவும் முடியும். இது தவிர, கற்பூரம் சருமத்தின் சிவப்பைக் குறைக்கவும், பல்வேறு சரும பிரச்சினைகளைப் போக்கவும் உதவுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், கற்பூரம் தோல் வீக்கத்தைக் குறைக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா? இதில் லக்னோவின் அலம்பாக்கில் உள்ள ஒபெல்லோ சலூனைச் சேர்ந்த ஒப்பனை கலைஞரும், அழகுசாதன நிபுணருமான பிரியா சச்தேவ் அவர்கள் கற்பூரத்தைப் பயன்படுத்துவது தோல் வீக்கத்தை எவ்வாறு குறைக்கிறது என்பது குறித்து காணலாம்.

இந்த பதிவும் உதவலாம்: உடலில் வீக்கத்தை உண்டாக்கும் இந்த தினசரி உணவுகளை நீங்க கட்டாயம் தவிர்க்கணும்..

கற்பூரம் தோல் அழற்சியை எவ்வாறு குறைக்கிறது?

மருத்துவரின் கூற்றுப்படி, கற்பூரம் எப்போதும் சருமத்திற்கு பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது என்று விளக்குகிறார். மேலும், சரும நன்மைகளுக்காக கற்பூரத்தைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைக்கும் ஏராளமான ஆராய்ச்சிகள் உள்ளதாகவும் கூறுகிறார். NIH ஆய்வு ஒன்றில், ஒரு பைசைக்ளிக் மோனோடெர்பீன் கீட்டோனான கற்பூரம், தோல் தொற்றுகளைத் தடுப்பதில் சாத்தியமான பயன்பாடுகளை வழங்குவதாகக் கூறப்படுகிறது.

கற்பூரம் ஒரு நறுமண கலவை மட்டுமல்லாமல், அதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் காரணமாக, இது பாக்டீரியா மற்றும் பூஞ்சை தோல் நோய்களுக்கான சிகிச்சையிலும் பயன்படுத்தப்படுகிறது. கற்பூர எண்ணெயின் பயன்களாக முகப்பரு, அரிக்கும் தோலழற்சி, வீக்கம், புண்கள் மற்றும் காயங்கள், தடிப்புத் தோல் அழற்சி மற்றும் பூஞ்சை கால் தொற்றுகள் போன்ற பல்வேறு தோல் நிலைகளைத் தணிக்க கற்பூரம் பயன்படுத்தப்படுகிறது. எனவே, கற்பூரம் தோல் அழற்சியைக் குறைப்பதிலும் மிகவும் உதவியாக இருக்கும்.

மேலும், கற்பூரம் லேசான அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது என்றும், இது தோல் அழற்சி மற்றும் அரிப்புகளை தற்காலிகமாகக் குறைக்க உதவும் என்றும் மருத்துவர் விளக்குகிறார். இது சருமத்தில் குளிர்ச்சியான உணர்வை அளிக்கிறது. மேலும் இது லேசான வலி அல்லது எரிச்சலைக் குறைக்கவும் உதவுகிறது. ஆனால் இது வெளிப்புற நிவாரணத்தை மட்டுமே அளிக்கிறது மற்றும் கடுமையான தோல் தொற்றுகள் அல்லது தீக்காயங்களுக்கு வழிவகுக்காது. அதே சமயம், இவை ஒவ்வாமைகள் முழுமையாகச் சரி செய்வதில்லை.

இந்த பதிவும் உதவலாம்: இந்த ஐந்து செய்முறைகளுடன் டீயைத் தயார் செய்து குடிங்க.. தேநீரின் அபரிமிதமான சக்தியைப் பெறலாம்

தோல் அழற்சியைக் குறைக்க கற்பூரத்தை பயன்படுத்தும் முறை

கற்பூரத்தை எப்போதும் நீர்த்த வடிவில் பயன்படுத்த வேண்டும். அதாவது எண்ணெய் அல்லது லோஷனுடன் கலந்து பயன்படுத்த வேண்டும். அதை, நேரடியாக சருமத்தில் தடவ வேண்டாம்.

முக வீக்கத்தைக் குறைக்க, தேங்காய் எண்ணெயில் கற்பூரத்தை சமைத்து குளிர்விக்க விடலாம். இதற்குப் பிறகு, இந்த எண்ணெயை முகத்தில் தடவி மெதுவாக மசாஜ் செய்யலாம். பின்னர், 10 நிமிடங்களுக்குப் பிறகு, முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதைச் செய்வது உங்கள் முகத்தை குளிர்விக்க உதவுகிறது. மேலும் வீக்கத்தையும் குறைக்கலாம்.

மாற்றாக, சந்தனத்துடன் கற்பூரத்தை கலந்து ஒரு ஃபேஸ் பேக் செய்யலாம். இதற்கு, 2 டீஸ்பூன் சந்தனப் பொடியை எடுத்து நொறுக்கப்பட்ட கற்பூரத்துடன் கலக்க வேண்டும். பின்னர் அதை முகத்தில் தடவி 10 நிமிடங்கள் அப்படியே வைக்கலாம். அதன் பிறகு, முகத்தை குளிர்ந்த நீரில் துடைக்க வேண்டும்.

முடிவு

இந்த முறைகளைக் கையாண்ட பிறகும், வீக்கம் தொடர்ந்தால், சிவத்தல் அதிகரித்தால் அல்லது வலி அதிகரித்தால், உடனடியாக மருத்துவரை அணுகுவது முக்கியமாகும். வீட்டு வைத்தியம் தற்காலிக நிவாரணத்திற்கு மட்டுமே தவிர, கடுமையான பிரச்சினைகளுக்கு மருத்துவ ஆலோசனை தேவைப்படுகிறது. எனவே, தோலில் கற்பூரத்தைப் பயன்படுத்துவதற்கு முன்பு ஒரு நிபுணரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: 7 நாள்கள்.. 7 பானங்கள்! குடல் ஆரோக்கியம் மட்டுமல்ல, வீக்கத்திற்கும் பாய் சொல்லுங்க..

Image Source: Freepik

Read Next

அக்குள் பகுதி கருமையைப் போக்கும் சிறந்த இயற்கை வைத்தியங்கள்.. மருத்துவர் தரும் விளக்கம்

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Nov 09, 2025 23:32 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content