Fri Sep 11, 2026 | 09:31 PM IST

Doctor Verified

வலி நிவாரணிக்கு தேன் உதவுமா? எப்படி பயன்படுத்துவது? மருத்துவர் தரும் விளக்கம்

தேனில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பு போன்ற பல்வேறு பண்புகள் நிறைந்துள்ளது. இவற்றை வலி நிவாரணியாகப் பயன்படுத்தலாம். இதில் தேனை வலி நிவாரணிக்கு எப்படி என்பது குறித்து மருத்துவர் பகிர்ந்துள்ளதைக் காணலாம்.

அன்றாட வாழ்வில் நாம் பயன்படுத்தக்கூடிய உணவுப்பொருள்கள், நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகுந்த நன்மை பயக்கும். இந்த வரிசையில் தேன் முக்கிய பங்கு வகிக்கிறது. உண்மையில், ஆயுர்வேதத்தில் தேன் ஒரு சக்திவாய்ந்த மருந்தாகக் கருதப்படுகிறது. பல நூற்றாண்டுகளாகவே, தேன் தனியாகவோ அல்லது பல்வேறு மூலிகைகளுடன் இணைந்து பல நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம், தேனில் அழற்சி எதிர்ப்பு, பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் போன்றவை நிறைந்திருப்பதே ஆகும்.

இந்த பண்புகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்திற்கு மிகுந்த நன்மை பயக்கும், மேலும் உடலில் உள்ள பல்வேறு வலிகளைப் போக்கவும் உதவும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. ஆம், உண்மையில், தேன் உட்புற வலியிலிருந்து நிவாரணம் அளிப்பது மட்டுமல்லாமல், மேலோட்டமான வலியையும் போக்குவதில் பெரிதும் உதவுகிறது. இதில் ஹரியானாவின் சிர்சாவில் உள்ள ராம்ஹான்ஸ் அறக்கட்டளை மருத்துவமனையின் ஆயுர்வேத டாக்டர் ஷ்ரே சர்மா அவர்கள், தேனை வலி நிவாரணியாக எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து குறிப்பிட்டுள்ளார். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

வலி நிவாரணத்திற்கு தேனை பயன்படுத்துவது எப்படி?

ஆயுர்வேத டாக்டர் ஷ்ரே சர்மா அவர்களின் கூற்றுப்படி, வலியிலிருந்து நிவாரணம் பெற தேனை பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். அதைப் பற்றி இங்குக் காண்போம்.

1. தொண்டை வலிக்கு தேன் பயன்பாடு

தொண்டை புண், எரிச்சல் அல்லது வலி போன்றவற்றிற்கு தேன் மிகவும் நன்மை பயக்கும் என்று கருதப்படுகிறது. இதற்கு இதன் மிருதுவான தன்மை மற்றும் கிருமி நாசினிகள் போன்றவையே காரணமாகும். இவை தொண்டை வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.

பயன்படுத்தும் முறை

  • தொண்டை வலியைப் போக்க, ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் தேனைக் கலக்கவும்.
  • விரும்பினால், அரை டீஸ்பூன் இஞ்சி சாற்றையும் சேர்க்கலாம்.
  • இந்த தேன் தண்ணீரை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை குடிப்பதால் தொண்டை வலி மற்றும் வீக்கம் குறைந்து இருமலில் இருந்து நிவாரணம் பெறலாம்.

2.காயம் அல்லது தீக்காய வலிக்கு தேன் பயன்பாடு

தேன் ஒரு இயற்கையான கிருமி நாசினி என்பது அனைவருக்கும் தெரியும். இது தொற்றுநோயைத் தடுக்கவும், விரைவாக குணமடையவும் உதவுகிறது. சிறிய தீக்காயங்கள் அல்லது சிறிய காயங்களுக்கு தேனைப் பயன்படுத்துவது வலி மற்றும் வீக்கத்தைக் குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • காயத்தை அல்லது தீக்காயத்தை சுத்தமான தண்ணீரில் கழுவ வேண்டும்.
  • சுத்தமான தேனை மெல்லிய அடுக்கில் தடவி, சுத்தமான கட்டுடன் மூடி, ஒரு நாளைக்கு ஒரு முறை மாற்றலாம்.
  • தீக்காயம் கடுமையாக இருந்தால், வீட்டு வைத்தியம் செய்வதற்குப் பதிலாக மருத்துவரை அணுக வேண்டும்.

இந்த பதிவும் உதவலாம்: தினமும் சருமத்திற்கு தேனைப் பயன்படுத்துவது நல்லதா? நிபுணர் சொல்வது என்ன?

3. வயிற்று வலி அல்லது வாயுவுக்கு தேன் பயன்பாடு

தேனைப் பயன்படுத்துவது செரிமானப் பிரச்சினைகளைப் போக்கவும், வயிற்று தசைகளில் பதற்றத்தைக் குறைக்கவும் உதவுகிறது. அதன் படி, வாயு, அஜீரணம் அல்லது லேசான வயிற்று வலிக்கு, தேனைப் பயன்படுத்தலாம். தேன் உட்கொள்வதன் மூலம் இதிலிருந்து நிவாரணம் பெறலாம்.

பயன்படுத்தும் முறை

  • 1 டீஸ்பூன் தேனை அரை கப் வெதுவெதுப்பான நீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.
  • இது வயிற்றை ஆற்றவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவும்

4. தசை வலிக்கு தேனின் பயன்பாடு

உடற்பயிற்சி, அதிகப்படியான உழைப்பு அல்லது பலவீனம் காரணமாக தசை வலி அதிகரிக்கக்கூடும். இந்நிலையில், தேனில் உள்ள இயற்கை சர்க்கரைகள் மற்றும் தாதுக்கள் உடலின் ஆற்றலை அதிகரிக்க உதவுகின்றன. இவை தசை வலியைக் குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • சூடான பாலில் 1 டீஸ்பூன் தேனை கலந்து இரவில் குடிப்பதால் தசைகள் தளர்ந்து வலி குறைய உதவுகிறது.

5. மாதவிடாய் பிடிப்புகளுக்கு தேனின் பயன்பாடு

தேனில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள் மாதவிடாய் வலியைக் குறைக்க உதவுகிறது.

பயன்படுத்தும் முறை

  • வெதுவெதுப்பான நீரில் தேன், இலவங்கப்பட்டை சேர்த்து குடிக்கலாம்.
  • இதைச் செய்வதன் மூலம் கீழ் வயிற்று வலியைக் குறைக்கலாம்.
  • இந்த தண்ணீரை ஒரு நாளைக்கு ஒரு முறை குடித்தால் போதும்.

முடிவுரை

அன்றாட உணவில் தேனை பல வழிகளில் பயன்படுத்தலாம். தொண்டை புண், காயங்கள், தீக்காயங்கள், தசைப்பிடிப்பு, வயிற்று வலி மற்றும் மாதவிடாய் பிடிப்புகள் போன்ற பல்வேறு பிரச்சனைகளைப் போக்க தேனைப் பல்வேறு வழிகளில் பயன்படுத்தலாம். எனினும், வலி அதிகமாகவோ அல்லது காயம் அதிகமாகவோ இருந்தால், வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவதற்கு முன்பு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

இந்த பதிவும் உதவலாம்: தேன் தடவினால் புண் ஆறுமா.? மருத்துவர் விளக்கம்..

Image Source: Freepik

Read Next

குளிர்கால வீக்கம், விறைப்பு.. மஞ்சளும் தேனும் ஏன் அவசியம்.? நிபுணர்கள் விளக்கம்..

Disclaimer

தகவலின் துல்லியம், நம்பகத்தன்மை, சரியான நேரத்தில் வழங்குதல் மற்றும் உண்மைத்தன்மையை உறுதி செய்ய அனைத்து சாத்தியமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், Onlymyhealth.com இதற்கு எந்தப் பொறுப்பையும் ஏற்காது. இந்த வலைதளத்தில் வழங்கப்படும் எந்தவொரு தகவலையும் பயன்படுத்துவது பார்வையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப மட்டுமே. ஏதேனும் மருத்துவத் தேவைகள்/தொடர்ச்சியான உடல்நலப் பிரச்சினைகள் ஏற்பட்டால், மேலே குறிப்பிடப்பட்டுள்ள வலைத்தளத்தில் எங்கள் குழு அல்லது மூன்றாம் தரப்பினரால் பதில்கள்/கருத்துகள் வடிவில் வழங்கப்படும் எந்தவொரு ஆலோசனை/குறிப்புகளையும் பயன்படுத்துவதற்கு முன்பாக, ஒரு தகுதிவாய்ந்த மருத்துவ பயிற்சியாளரை அணுகுமாறு நாங்கள் உங்களுக்கு அறிவுறுத்துகிறோம்.

கௌதமி சுப்ரமணி

கௌதமி சுப்ரமணி

இளைய உள்ளடக்க எழுத்தாளர்

நான் கௌதமி சுப்ரமணியம், டிஜிட்டல் மீடியாவில் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றி வருகிறேன். ஆரோக்கியம், உணவு, உடற்பயிற்சி, உடல் நலம், அழகு குறிப்பு போன்றவை தொடர்பான விவரங்களை ஆராய்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறேன். நான் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஈர்க்கக்கூடியதாக இருப்பதை உறுதிசெய்து, விவரங்களுக்கு ஒரு தீவிரமான பார்வையை வளர்த்துக்கொண்டேன். மக்களுக்குத் தேவையான மற்றும் உண்மையான தகவல்களை வழங்குவதன் மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான இலக்கை மேம்படுத்துவது எனது நோக்கம் ஆகும்.

Read More..

How we keep this article up to date:

We work with experts and keep a close eye on the latest in health and wellness. Whenever there is a new research or helpful information, we update our articles with accurate and useful advice.

  • Current Version

    Dec 07, 2025 21:22 IST

    Published By : கௌதமி சுப்ரமணி

Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content
Medically reviewed content
200+ medical reviewers in network
17 Years of Trusted Health Content